விடியல்!!!  

பதித்தவர் : எழில்பாரதி in ,வெள்ளை மாளிகையில்
கறுப்புச்சூரியன்
விடியுமா
நாளை
எமக்கான விடுதலை!!!

ஈழக்கவிதைகள்!!!  

பதித்தவர் : எழில்பாரதி in ,

சிதறிய
எம் மக்களை
இணைப்பதற்காக
சிதறுகிறேன்
நான்
வலிகளேயின்றி!!!மழையில்
நனைந்தால்
ஆகாதென்று
முந்தானை
குடைப்பிடிக்கிறாள் அம்மா
ம‌க‌ளின்
கல்லறைக்கு!!!


( ஈழத்தமிழரின் வலிகளை சும‌ந்து வெளிவந்திருக்கும் தை கவிதையிதழில் இக்கவிதைகள் இடம்பெற்றுள்ளது!!! )

நன்றி : தை கவிதை இதழ் - 2009