ஈழக்கவிதைகள்!!!  

பதித்தவர் : எழில்பாரதி in ,

சிதறிய
எம் மக்களை
இணைப்பதற்காக
சிதறுகிறேன்
நான்
வலிகளேயின்றி!!!



மழையில்
நனைந்தால்
ஆகாதென்று
முந்தானை
குடைப்பிடிக்கிறாள் அம்மா
ம‌க‌ளின்
கல்லறைக்கு!!!


( ஈழத்தமிழரின் வலிகளை சும‌ந்து வெளிவந்திருக்கும் தை கவிதையிதழில் இக்கவிதைகள் இடம்பெற்றுள்ளது!!! )

நன்றி : தை கவிதை இதழ் - 2009

This entry was posted on Tuesday, January 20, 2009 and is filed under , . You can leave a response and follow any responses to this entry through the Subscribe to: Post Comments (Atom) .

12 மழைத்துளிகள்

வலி மிகுந்த வரிகள்.. :((

வாழ்த்துகள் தை கவிதை இதழ் கவிதைக்கு..

மனதை நெகிழ செய்யும் வரிகள்:(

இதழில் கவிதை வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் எழில்!!!

//சிதறிய
எம் மக்களை
இணைப்பதற்காக
சிதறுகிறேன்
நான்
வலிகளேயின்றி!!! //

வலியுணர்த்தும் வரிகள் எழில்...
எளிமையாக இருப்பினும் வலிமையான தாக்கம் ஏற்படுத்துகிறது...

வாழ்த்துக்கள் தை இதழில் வந்ததற்கு...

இதைப் போன்ற மேலும் பல ஆழமான கவிதைகள் படையுங்கள்...!!!

இரண்டு கவிதை வரிகளிலும் வலிகள்...

தை கவிதையிதழில் இக்கவிதைகள் வந்தற்கு வாழ்த்துக்கள்...

வலி சுமக்கும் வலிமையான வரிகள்!

தை இதழில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள்!

நெகிழ்ச்சியான கவிதைகள் எழில்.

// மழையில் நனைந்தால் ஆகாதென்று
முந்தானை குடைப்பிடிக்கிறாள் அம்மா
ம‌க‌ளின் கல்லறைக்கு//

அர்ச்சனை பூக்கள் தூவிய கல்லறைகளை அரக்கர்கள் அளித்ததை மறப்போமோ?
நன்றிகள் பல உங்கள் முயற்சிக்கு

//மழையில்
நனைந்தால்
ஆகாதென்று
முந்தானை
குடைப்பிடிக்கிறாள் அம்மா
ம‌க‌ளின்
கல்லறைக்கு!!!//

:(

அழகான கவிதை!
ஆழமான வேதனையை வெளிப்படுத்துகிறது!

சிதறிய
எம் மக்களை
இணைப்பதற்காக
சிதறுகிறேன்
நான்
வலிகளேயின்றி



சிதறிவிட்டேன் பாரதி...

இது வரை எழுதியதில் இது தான் மிகச் சிறந்த கவிதை பாரதி...

காலங்கள் தாண்டி வாழும் கல்வெட்டு வரிகள் ...

பெருமையாய் இருக்கிறது பாரதி...

வணக்கம் மேடம் கவிதைகள் மிகவும் மனசை பாதிக்கவைத்தது.
வாழ்த்துக்கள்

very nice thangachi....

"வலி”மை மிகு வரிகள்.

Post a Comment