குறும்புகள்+(*)வெட்கங்கள்=காதல்  

பதித்தவர் : எழில்பாரதி in

உன் குறும்புகளை
என்னிடம்
கொடுத்துவிட்டு
என் வெட்கங்களை
அள்ளிச் செல்கிறாய்
இதை வைத்து
என்னடா
பண்ண‌ப்போறன்னு
கேட்டா
இவற்றை வைத்துதான்
என்
நாளைய குறும்புகள்
என்று
சிரித்து விட்டு
போகிறாய்!!!




உனக்கான
என் வெட்கங்களும்
என‌க்கான‌
உன் குறும்புகளையும்
கொண்டு வ‌ள‌ர்கிற‌து
ந‌ம‌க்கான‌ காத‌ல்!!!


கூட்டினாலும்
பெருக்கினாலும்
ஒரே விடை
கிடைப்ப‌து க‌ணித‌த்தில்
ம‌ட்டும் அல்ல‌
காத‌லிலும்தான்
குறும்புக‌ளையும்
வெட்க‌ங்க‌ளையும்
கூட்டினாலும்
பெருக்கினாலும்
கிடைக்கும்
ஓரே விடை
காத‌ல்!!!



நான்
உனக்காகவே
உன்னிடம் ம‌ட்டுமே
செல‌வு செய்வ‌து;
என்
வெட்க‌ங்க‌ளை!



உன்
குறும்புகளும்
தொடரும்
எனது
வெட்கங்களும்
கொணர்கின்றன
நமக்கான
காதல்
மழையை!