தீபாவளியன்று எல்லா தொலைக்காட்சிகளிலும் தமிழ் தெரியாத கதாநாயகிகளின் கொஞ்சல் பேட்டிகள்!!!என்னடா இது , எல்லா தீபாவளியும் போட்டதையே போடுறானேன்னு நொந்துக்கிட்டு ஒவ்வொரு அலைவரிசையா மாத்திக்கிட்டே போனா மக்கள் தொலைக்காட்சியில் தொகுபாளினிகள் உறியடிச்சு விளையாடுறாங்க ஆகா வித்தியாசமா இருக்கேன்னு பார்க்க தொடங்கினா எல்லாமே வித்தியாசமான நிகழ்ச்சிகள்தான்!!!!
அதிலும் புலவர் நன்னன் அவர்களது நிகழ்ச்சி நெகிழ வைத்தது... 85 வயதிலும் அவர் ஏர் பிடித்து உழுதது வியப்பாக இருந்தது அடுத்து அவர் சடுகுடு விளையாடினார்அப்போ அவர் உத்திப் பிரித்திட்டு வாங்கன்னு சொல்லி உத்திப் பிரித்து விளையாட தொடங்கினார்கள்.... இந்த வயதிலும் என்னமா விளையாடுறார்...
சரி நான் இப்போ தலைப்புக்கு வரேன்....
உத்திப் பிரிக்கிறதுன்னா என்ன... கிராமங்களில் பிறந்த பலருக்கு தெரிந்திருக்கும்....
இரண்டுக் குழுவாக பிரிந்து விளையாடும் எல்லா விளையாட்டிற்கும் உத்தி பிரிப்பார்கள்.இரண்டுக் குழுத்தலைவர்களும் மற்றவர்களை உத்தி பிரித்திட்டு வரச் சொல்லுவாங்க.இரண்டு இரண்டு பேராகப் பிரிந்து போய் அவர்களுக்குள் பிரித்துக் கொள்வார்கள்.நான் தாமரை நீ மல்லிகைன்னு பிறகு குழுத்தலைவரிடம் வந்து தாமரை வேணுமா மல்லிகை வேணுமான்னு கேட்பாங்க.குழுத்தலைவர்கள் தேர்ந்தெடுப்பார்கள் தாமரை வேண்டுமா இல்லை மல்லிகை வேண்டுமான்னு.... இதேப் போல் ஒவ்வொருவரும் பிரித்ததும் விளையாட தொடங்குவார்கள்...
உத்திப் பிரிப்பது இப்போ கிராமங்களில் எவ்வளவு மாறிவிட்டது...
என் பெற்றோர்கள் விளையாடியக் காலங்களில் அவர்கள் உத்திப் பிரிக்கும் போது 1000 கல்லுல கடைசி கல்லுல மாங்க அடிச்சவன் வேணுமா இல்ல ஒரே கல்லுலஒரே தடைவையில அடிச்சவன் வேணுமான்னு கேட்பாங்களாம்.... இதுப்போல் வித்தியாசமா உத்தி பிரித்தது காலப் போக்கில் கொஞ்சம் மாறி தாமரை வேணுமா அல்லி வேணுமா, உப்பு வேணுமா சர்க்கரை வேணுமான்னு அவர்களுக்கு பிடித்ததை வைத்து பிரித்துக் கொள்வார்கள்...
ஒரு ஆர்வத்துல ஊரில் இருக்கிற என் தம்பியிடம், எப்படிடா உத்தி பிரிபீங்கன்னு தாமரை வேணுமா மல்லி வேணுமா, ராஜா வேணுமா மந்திரி வேணுமானு தானே பிரிப்பீங்கன்னுகேட்டா, ஏற இறங்க ஒரு பார்வை பார்த்துட்டு நீ எந்தக் காலத்துல இருக்க இதுல வேற சாப்ட்டுவேர் இன்ஜினியர.அக்கா இப்போயெல்லாம் நாங்க விஜய் வேணுமா அஜித் வேணுமானு கேட்போம் இல்லைன்னா அசின் வேணுமா த்ரிஷா வேணுமான்னு கேட்ப்போம்ன்னு சொன்னதும் ஆகா ரொம்ப முன்னேறிட்டாங்கன்னு இருந்தா.அடுத்தது அவன் சொன்னதைக்கேட்டு வாய் அடைத்து போய்ட்டேன் கீபோர்டு வேணுமா மவுஸ் வேணுமானு கேட்பாங்களாம்...
ம்...ரொம்ப முன்னேறிட்டாங்க பசங்க.......
This entry was posted
on Tuesday, November 27, 2007
and is filed under
பகிர்வுகள்
.
You can leave a response
and follow any responses to this entry through the
Subscribe to:
Post Comments (Atom)
.
ஐயோ! உத்தி கட்டலைன்னு பெரிய பிரச்சினை எல்லாம் வரும்.
மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது.
நன்றி எழில்! மறந்த ஒரு வார்த்தையையும், நிகழ்ச்சிகளையும் மீட்டுக் கொண்டு வந்ததற்கு.
நன்றி வெயிலான்
உங்கள் வலைத்தளத்தைப் பார்த்ததுமே மிகவும் பூரிப்பாக இருக்கிறது. காரணம் புரியவில்லை, அது தமிழாகக் கூட இருக்கலாம். நிறைய எழுதுங்கள். உங்கள் எழுத்து நடை மிகவும் அருமை, இயல்பாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள்!
உத்தி பிரிக்கிறது என்று சொல்லும்போதே எனக்கு கிளித்தட்டு விளையாட்டு தான் நினைவுக்கு வருகிறது! சிறுவயதில் விளையாடியது.
விஜய் அஜித் என்றும், அஸின் திரிஷா என்றும் பிரிப்பது முன்னேற்றமா? கீ போர்டும், மவுஸும் அறிவியல் உள்ளே நுழைந்த மகிழ்வை ஏற்படுத்தினாலும், எம் இயற்கை பிரிந்து போனது வலியைத் தருகிறது....
மற்றபடி, உத்தி பிரிக்கும் பழைய நினைவுகளை மீட்டுக் கொண்டு வந்த தோழமைக்கு வாழ்த்துகள்!
வணக்கம் எழில் தங்களின் பதிவுகள் படித்து மகிழ்ந்து எழுதுகிறேன், உத்தி பற்றிய பதிவு மிக மிக நல்ல பதிவு இது போன்ற கிராமத்து விளையாட்டுக்கள் பற்றி தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் எழுத்துநடை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
அன்புடன்
சின்னதம்பி