மழைத்துளியில் ஒரு மழலை  

பதித்தவர் : எழில்பாரதி in

காலையில சீக்கரமே எழுந்து அலுவலகத்திற்கு அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தான் ரகு....

"மாலா சாப்பாடு தயாரா"

என்று குரல் கொடுத்துக் கொண்டே சாப்பாட்டு மேஜைக்கு சென்றான்...


ரெடிங்க.... என்ன இன்னைக்கு சீக்கரம் கிளம்பிட்டீங்க??....


கொஞ்சம் வேலை இருக்குமா அதான்...

அப்போ இன்னைக்கு நான்தான் மலர‌ பள்ளில விடனுமா.... அப்போ சீக்கரம் வேலையெல்லாம் முடிக்கனும்... மழையா வேற‌ இருக்கு....

இன்னைக்கு ஒரு நாள்டா நாளையில இருந்து நான் பார்த்துக்கிறேன்...

சரி சரி நான் பார்த்துக்கிறேன் நீங்க நல்லா சாப்பிடுங்க...

மலர் எழுந்தாச்சா..... மாலா!!!!

இல்லைங்க நல்லா தூங்கிட்டு இருக்கா!!!

சரி தூங்கட்டும் விடு....

"அப்பா அப்பா"

மலர் குரல் கொடுத்துக்கிட்டே ர‌குவிட‌ம் வ‌ர‌!!!

மலர் குட்டி வாடா வா.....

அப்பா கிளம்பிட்டீங்களா???

ஆமாம்டா அப்பாக்கு வேலை இருக்கு......

அப்போ நான் எப்படி ஸ்கூளுக்கு போவேன்???

இன்னைக்கு அம்மா கூட போடா...நாளைக்கு நான் கூட்டிட்டு போறேன்,,,

அய்யோ அப்பா!! "அம்மா போர்ப்பா நடந்தே கூட்டிட்டுப் போவாங்க‌" நீங்க ஜாலியா வண்டில கூட்டிட்டுப்போவிங்க...

ஏன்டீ நான் உன‌க்கு போரா???... வாய் ஜாஸ்த்தி ஆகிடுச்சி உனக்கு..

என‌ மாலா செல்ல‌மாய் க‌ண்டிக்க‌ ...

பாருங்க‌ப்பா அம்மாவை மிர‌ட்டுராங்க‌....

மல‌ர் சிணுங்கிய‌தும்..

என் செல்ல‌த்த திட்டாதே... இன்னைக்கு ம‌ல‌ர‌ ஆட்டோல‌ கூட்டிட்டு போ ச‌ரியா,...

என்ன ம‌ல‌ர் குட்டி ஓக்கே தானே உன‌க்கு...

ம்ம் ச‌ரிப்பா அட்ஜ‌ஸ்ட் பண்ணிக்குறேன்...

செல்லக்குட்டிடா நீ.......

அப்பா இன்னைக்கு டீவில‌ வ‌ருவீங்க‌ளா???..

ம்ம் வ‌ருவேன்டா, ம‌ழைக்கால‌ம்ல‌... வானிலை அறிக்கை சொல்ல‌ கூப்பிடுவாங்க‌....

அப்போ அப்பா இன்னும் இர‌ண்டு நாளைக்கு ந‌ல்ல‌ ம‌ழைபெய்யும்ன்னு சொல்லுங்க‌ப்பா...

ஏன்டாக் குட்டி உன‌க்கு ம‌ழைனா அவ‌ளோ பிடிக்குமா...

இல்ல‌ப்பா என் பிரண்ட் தீபா வீட்ல‌ ம‌ழை பெய்தா த‌ண்ணீ ஒழுகுதாம்...அவ‌ங்க‌ அப்பா ச‌ரி செய்ய இர‌ண்டு நாள் ஆகும்ன்னு சொன்னாங்கலாம் அதான் நீங்க‌ ம‌ழை வரும்ன்னு டீவில சொன்னா அன்னைக்கு ம‌ழையே வ‌ராதுல

அதான் அப்ப‌டி சொல்ல‌ச்சொன்னேன்.... ம‌ற‌க்காம‌ சொல்லிடுங்க...

ம‌ல‌ர் சொன்னதைக்கேட்டு ரகுவிற்கு என்ன‌ சொல்வதென்று தெரியாமல் வாய் அடைத்துப் போய் நின்றான்!!!.

(கவிதை மட்டும் எழுதி எல்லோரையும் படுத்தினது போதும் இனி கதையும் எழுதிப் உங்களை படுத்தலாம்ன்னு என் முதல் கதையை இங்கு பதித்திருக்கிறேன்...கும்மிடாதீங்க!!!!)

This entry was posted on Thursday, March 06, 2008 and is filed under . You can leave a response and follow any responses to this entry through the Subscribe to: Post Comments (Atom) .

22 மழைத்துளிகள்

உங்கள் கதை எழுதும் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் எழில்!

அழகான கதை......இயல்பான நடையில்!

தொடர்ந்து கதைகள் எழுத முயற்சியுங்கள்!!

டயலாக்ஸ் எல்லாம் , தனித்தனி வரிகளாக எழுதினால்......படிப்பதற்கு எளிதாக இருக்கும் எழில்.

தொடருங்கள்....!

முதல் கதை ஜம்முன்னு நெகிழ்ச்சியா எழுதி இருக்கீங்க... நல்லா இருக்கு :)

ஒரு பக்கக் கதையா? நல்லா இருக்கு... :)

//Divya said...
உங்கள் கதை எழுதும் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் எழில்!

அழகான கதை......இயல்பான நடையில்!

தொடர்ந்து கதைகள் எழுத முயற்சியுங்கள்!!//

வாழ்த்துகளுக்கு ந‌ன்றி திவ்யா.....

க‌ண்டிப்பா முய‌ற்சிக்கிறேன்!!!!


க‌ண்டிப்பா முய‌ற்சிக்கிறேன்!!!!

//Divya said...
டயலாக்ஸ் எல்லாம் , தனித்தனி வரிகளாக எழுதினால்......படிப்பதற்கு எளிதாக இருக்கும் எழில்.

தொடருங்கள்....!//



முடிந்த‌வ‌ரை திருத்திவிட்டேன்.... திவ்யா..

அடுத்த‌ முறை ச‌ரியா செய்யுரேன்!!!!

//வினையூக்கி said...
முதல் கதை ஜம்முன்னு நெகிழ்ச்சியா எழுதி இருக்கீங்க... நல்லா இருக்கு :)//




வாங்க "நட்சத்திரமே":)


நீங்களும் முதல் முறை என் இல்லத்திற்கு வருகை தந்து வாழ்தியதற்கு

மிக்க மகிழ்ச்சி...

வாழ்த்துகளுக்கு நன்றியும்!!!!!

//பிரேம்குமார் said...
ஒரு பக்கக் கதையா? நல்லா இருக்கு... :)//


வாங்க அண்ணா....

ம்ம் ஆமாம் ஒரு பக்கக் கதைதான்.....

வாழ்த்துகளுக்கு நன்றி அண்ணா!!!!!!

கதை நல்லா இயல்பா வந்திருக்கு எழில்...ஆனா சில இடங்களில் எழுத்துப்பிழைகள் வாசிப்பின் வேகத்தை தடை செய்கின்றன...அதை சரி செய்தால் சுகம்...

யக்கா,என்ன கத என்ன கத!இதுதான் முதல் கதையா?எவ்வளவு தன்னடக்கம் உங்களுக்கு :P
தன்னடக்க செம்மல் எழில் அக்கா வாழ்க :)
கதை ரொம்ப நல்ல இருந்தது.இனிமேல் நீங்கள் கவிதை புயல் மட்டும் இல்லை,ஒரு கதை சூரவாளி :D
அக்கா நீங்க கொடுத்த பொட்டிக்கு நல்ல வாழ்த்திட்டேன்.வரட்டா ;)

நல்ல கதை. எழுத்துப் பிழைகள் தவிர்த்தால் ஜொலிக்கும். வாழ்த்துக்கள் எழில்.

//ப்ரியன் said...
கதை நல்லா இயல்பா வந்திருக்கு எழில்...ஆனா சில இடங்களில் எழுத்துப்பிழைகள் வாசிப்பின் வேகத்தை தடை செய்கின்றன...அதை சரி செய்தால் சுகம்...//

வாங்க ப்ரியன்....

எழுத்துப் பிழையை திருத்திவிட்டேன்....

வருகைக்கும் பிழையை சுட்டிக்காட்டியதற்கும் மிக்க மகிழ்ச்சி

//துர்கா said...
யக்கா,என்ன கத என்ன கத!இதுதான் முதல் கதையா?எவ்வளவு தன்னடக்கம் உங்களுக்கு :ப்//

தன்னடக்க செம்மல் எழில் அக்கா வாழ்க :)//

வாம்மா தங்கச்சி.....

உண்மையச் சொன்னா இப்படிதான் வாழ்கன்னு கோஷம் போடுவாங்களா.....

நீ ரொம்ப நல்லவ.....

//கதை ரொம்ப நல்ல இருந்தது.//


ரொம்ப நன்றிமா...



//இனிமேல் நீங்கள் கவிதை புயல் மட்டும் இல்லை,ஒரு கதை சூரவாளி :D//


இப்ப‌டிலாம் ஆப்பு வைக்க‌கூடாது!!!!

//அக்கா நீங்க கொடுத்த பொட்டிக்கு நல்ல வாழ்த்திட்டேன்.வரட்டா ;)//


நான் என்ன பொட்டிக் கொடுத்தேன்....

நீ எது சென்னாலும் யாரும் நம்பமாட்டாங்கலே..

வங்க நிலா...

பிழையை திருத்தி விட்டேன்!!!!

வாழ்த்துகளுக்கு நன்றி!!!!!!!

குழந்தையின் வேடிக்கை இரசிக்கத்தக்கது. கதை அருமையாக எழுதியுள்ளீர் தோழி.

கதிர்.

முதல் கதைக்கு வாழ்த்துகள்! இன்னும் எழுதுங்க!!

கதை நல்லா இருக்குங்க :)

//கதிர் said...
குழந்தையின் வேடிக்கை இரசிக்கத்தக்கது. கதை அருமையாக எழுதியுள்ளீர் தோழி.//

வாங்க கதிர்....

வாழ்த்துகளுக்கு நன்றி தோழரே!!!!

//அருட்பெருங்கோ said...
முதல் கதைக்கு வாழ்த்துகள்! இன்னும் எழுதுங்க!!//


வாங்க‌ அருள்

வாழ்த்துக‌ளுக்கு மிக்க‌ ந‌ன்றி!!!

க‌ண்டிப்பாக‌ எழுதுகிறேன்!!!!!

Dreamzz said...
கதை நல்லா இருக்குங்க :)//


வாங்க‌ Dreamzz said...

வ‌ருகைக்கும் வாழ்த்துக‌ளுக்கும்

மிக்க‌ ந‌ன்றிங்க‌ :)!!!

முதல் கதை நல்லா வந்திருக்கு.... :)))

//ஜி said...
முதல் கதை நல்லா வந்திருக்கு.... :)))//


வாங்க ஜி

மிக்க நன்றி

Post a Comment