வாரநாட்களில் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்த்து விடலாம் என்றாலும்...ஞாயிற்றுக் கிழமைகளில் அது கொஞ்சம் சிரமம்தான்.. பகலில் அதிக நேரம் தூங்கிவிட்டு... இணையத்தில் நண்பர்களோடு அரட்டை அடித்து விட்டு... மதியம் உணவு அருந்தியதும் மீண்டும் ஒரு தூக்கம் போட்டு சரி கொஞ்சம் நேரம் தொலைக்காட்சியை பார்ப்போமேன்னு போட்டால் பார்த்து பார்த்து அலுத்துப் போன படங்களே திரும்ப ஓடிக் கொண்டிருக்க...
பாடல்கள் கேட்கலாமேன்னு அலைவரிசையை மாற்றினால் அவர்கள் பேசியே கொல்கிறார்கள்
சரி மக்கள் தொலைக்காட்சியில் வித்தியாசமாக எதும் இருக்கும் பார்கலாமேன்னுவைத்ததும் வினுசக்கரவர்த்தியும் மெளனிகாவும் காட்சியில் இருந்தார்கள்..சரி என்னவாக இருக்கும் என்று பார்க்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் அது ஒரு குறும்படம் என்று விளங்கியது... ச்சே கொஞ்சம் முன்னமே வைத்திருந்தால் பெயரைப்பார்த்திருக்கலாம் சரி போகட்டும் எப்படிதான் இருக்கு என்று பார்ப்போமேஎன்று கதையில் ஐக்கியம் ஆனேன்... நான் பார்கத தொடங்கியதில் இருந்து உங்களிடம் பகிர்கிர்ந்துக் கொள்கிறேன்!!
கணவனுக்கு கஞ்சியை கொடுத்துவிட்டு காய்கறி சுமப்பதற்காக கொத்தவரஞ்சாவடிசெல்கிறேன் நீ பத்திரமா இரும்மான்னு சொல்ல இல்லைங்க நானும் உங்க கூடவரேன் கூட்டிட்டு போங்கன்னு கேட்க சரி வா போகலாம்ன்னு இருவரும் வெளியே வருகிறார்கள்..
"நீ உக்காருயா நான் இழுக்குறேன்னு"
மனைவி கணவனை சுமை சுமக்கும் வண்டியில் உட்காரச்சொல்லி இழுக்கிறாள் உன்னால் முடியாது நான் இழுக்குறேன் நீ வநது உட்காருன்னு சொல்லும் கணவனைஇல்ல நான் இழுப்பேன் நீ இருய்யான்னு சொல்லி இழுத்துக் கொண்டே நடக்கிறார் கணவன் அசந்துப் போய் வண்டியில் படுத்து உறங்கிவிடுகிறார்..
இதுவரை இழுத்து பழக்கமிலாததால் சிரமப்பட்டு இழுக்கிறார் மிக சோர்வுடன் வேர்வையில் நனைந்து இழுத்துக் கொண்டு சேரும் இடம் வந்ததும் வண்டியை நிறுத்துகிறாள்...
வண்டி நின்றதும் தூக்கம் கலைந்து விழிக்கும் கணவன்
"என்னப் புள்ள நான் தான் அசதில தூங்கிட்டேன் என்ன எழுப்பிற்கலாம்ல"
அசதில நீ நல்லா தூங்கிட்டயா அதான் எழுப்ப வேணாம்ன்னு விட்டுடேன்"
என்று மனைவி செல்ல காட்சி நகர்ந்தது...
வந்து உட்காரு பிள்ள நான் உனக்கு சாப்பாடு வாங்கிட்டு வரேன்னு எதிர்ல இருக்கும் இட்லி கடைக்கு சென்று இட்லி தோசை வாங்கி வந்து
நீ சாப்பிடு பிள்ள நான் மூட்டைகளை எடுத்துட்டு வந்துடுறேன்னு முட்டையை எடுக்க போகிறார்..
மூட்டைகளையெல்லாம் அடுக்கி வைத்துவிட்டு மனைவி சாப்பிட்டு முடித்ததுதட்டையும் பணத்தையும் கொடுத்து விட்டு வந்தவர் மனைவியிடம் பீடா கொடுத்து போட்டுக்க புள்ள!!!
சரிய்யா நான் அப்படியே நடக்குறேன் நீ வண்டியை இழுத்துகிட்டு வான்னு சொல்ல..
நீ வண்டில வந்து உட்காரு புள்ள நான் இழுக்குறேன் வான்னு மனைவியைவண்டியில் உட்காரவைத்து இழுக்க தொடங்குகிறார்...
களைத்துப் போய் அவர் இழுத்துக் கொண்டு நடக்க வழியில் அவர் நண்பர் ஒருவர் வருகிறார்
"என்னப்பா இது இருக்கிற பளுப் போதாதுன்னு உன் பொஞ்சாதியையும் படுக்கவைச்சி இழுக்குறியேன்னு" கேட்க
காலம் முழுக்க நம்மை சுமக்கிற வரங்களை நாம பளுவாய் நினைக்ககூடாதுன்னு சொல்லிவிட்டு வண்டியை மீண்டும் இழுக்க தொடங்குகிறார்....
அத்துடன் படம் நிறைவடைகிறது...
20 நிமிடங்களில் கணவண் மனைவி உறவை மிக் அழகாக விளக்கியிருந்தார்கள்...
கடைசிவரை படம் பெயர் தெரியவில்லை என்றாலும் வாழ்க்கையை மிக அழகாக விளக்கிய பெயர் தெரியாத இயக்குனருக்கும் ஒளிப்பரப்பு செய்த மக்கள் தொலைக்காட்சிக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!!!!
மக்கள் தொலைக்காட்சியில் தொடர்ந்து இடம்பெற்று வரும் தரமான நிகழ்ச்சிகளினால் அது மக்களின் மனதில் நன்மதிப்பைப் பெற்று வருகிறது.
நன்றி நீங்கள் ரசித்த ஒரு விசயத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு.
கவிதை... கதை ..இப்போ குறும்பட பார்வை என கலக்கறீங்க.. வாழ்த்துகள் எழில்பாரதி
mm.. nalla kadhaiyaa thaan irukku :)
எழில்,
உங்கள் ரசிப்பை பகிர்ந்துக் கொண்ட விதம் அருமை,
வாழ்த்துக்கள்!!
New template superungooooovvvvv!!
வினையூக்கி said...
மக்கள் தொலைக்காட்சியில் தொடர்ந்து இடம்பெற்று வரும் தரமான நிகழ்ச்சிகளினால் அது மக்களின் மனதில் நன்மதிப்பைப் பெற்று வருகிறது.
நன்றி நீங்கள் ரசித்த ஒரு விசயத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு.
//
கண்டிப்பாக மற்ற தொலைக்காட்சிகள் போல் அழவைக்காமல் மக்களை சிந்திக்க
வைப்பதிலும் தவறுவதில்லை!!!
நல்ல விசயங்களை பகிர்வது நமது கடமையில்லையா!!!
//கவிதை... கதை ..இப்போ குறும்பட பார்வை என கலக்கறீங்க.. வாழ்த்துகள் //
ஆஹா!!!! கலக்குறேனா,, இப்போதாங்க தொடங்குகிறேன்!!!!!
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி,,,
//Dreamzz said...
mm.. nalla kadhaiyaa thaan irukku :)//
வாங்க Dreamzz
ஆமாம் மிக நல்ல கதைதான்....
//எழில்,
உங்கள் ரசிப்பை பகிர்ந்துக் கொண்ட விதம் அருமை,
வாழ்த்துக்கள்!!//
வாங்க திவ்யா!!!
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி!!!
//Divya said...
New template superungooooovvvvவ்!!/
நன்றிங்கோ!!!!!
ஏற்கனவே மக்கள் தொலைகாட்சியில் ஒளிபரப்பும் நல்ல நிகழ்சிகளை பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், டாடா ஸ்கைக்கு மாறியதனால் அதில் வரும் நிகழ்ச்சிகளை பார்க்க முடியாமலிருந்தது.
ஒன்னை அடையனும்னா, ஒன்னை விட்டு கொடுக்கனும்ங்கற தத்துவம் இப்ப நல்லாவே புரியுது!
நல்ல பதிவு, வாழ்த்துக்கள்! தொடருங்கள்!
//@Naresh Kumar said...
ஏற்கனவே மக்கள் தொலைகாட்சியில் ஒளிபரப்பும் நல்ல நிகழ்சிகளை பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், டாடா ஸ்கைக்கு மாறியதனால் அதில் வரும் நிகழ்ச்சிகளை பார்க்க முடியாமலிருந்தது.
ஒன்னை அடையனும்னா, ஒன்னை விட்டு கொடுக்கனும்ங்கற தத்துவம் இப்ப நல்லாவே புரியுது!
நல்ல பதிவு, வாழ்த்துக்கள்! தொடருங்கள்!
//
வாங்க நரேஷ்
கண்டிப்பா மற்ற தொலைக்காட்சிகளை காட்டிலும் மக்கள் தொலைக்காட்சியில்
பயனுள்ள நிகழ்ச்சிகளை தருகிறார்கள்....
நமக்குதான் நேரம் போதவில்லை!!!!
தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!!!!!!
சினிமாத்தனம் இல்லாத பல எத்தார்த்த தரமான நிகழ்ச்சிகளை சமீப கால்மாக மக்கள் தொலைக்காட்சியில் பார்த்து வருகிறேன்...மீடியாக்களின் பொறுப்பில்லாத தனத்தால் தமிழ் அழிந்து விடுமோ..என்ற கவலையை தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் செய்யும் பணி உண்மையில் பாராட்ட தகுந்தது...உங்களைப் போல நானும் சில நாட்களுக்கு முன் பெயர் தெரியாத நரபலியை மையமாக வைத்து இயக்கப்பட்ட ஒரு குறும்படம் பார்த்து அசந்தேன்...இது போன்ற தரமான நிகழ்ச்சிகளை வெளிச்சமிட்டு காட்டியமைக்கு நன்றி..
நீங்கள் ரசித்து எழுதிய விதம் படம் பார்ப்பது போன்ற உணர்வைத் தந்தது.
ஐயோ! பார்க்காமல் போனோமே என்ற தவிப்பையும் தந்தது.
நல்ல பதிவு.
//கீழை ராஸா said...
சினிமாத்தனம் இல்லாத பல எத்தார்த்த தரமான நிகழ்ச்சிகளை சமீப கால்மாக மக்கள் தொலைக்காட்சியில் பார்த்து வருகிறேன்...மீடியாக்களின் பொறுப்பில்லாத தனத்தால் தமிழ் அழிந்து விடுமோ..என்ற கவலையை தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் செய்யும் பணி உண்மையில் பாராட்ட தகுந்தது...உங்களைப் போல நானும் சில நாட்களுக்கு முன் பெயர் தெரியாத நரபலியை மையமாக வைத்து இயக்கப்பட்ட ஒரு குறும்படம் பார்த்து அசந்தேன்...இது போன்ற தரமான நிகழ்ச்சிகளை வெளிச்சமிட்டு காட்டியமைக்கு நன்றி..//
ஆமாம் ராஸா நீங்க சொல்லுரது உண்மைதான் மற்ற தொலைகாட்சிகள்
பொல் இல்லாமல் தன்க்கென்று ஒரு இடத்தை மக்கள் மனதில் பிடித்திருக்கிற்து
ஆம் கண்டிப்பாக பாராட்ட வேண்டும்!!!!
அப்படியா அப்படத்தின் பெயர் தெரிந்தால் சொல்லுங்களேன்!!!!
தங்கள் வருககைக்கும்!!!! கருத்துக்களை கூறியதற்கும் என் நன்றிகள்!!!!!
//நானானி said...
நீங்கள் ரசித்து எழுதிய விதம் படம் பார்ப்பது போன்ற உணர்வைத் தந்தது.
ஐயோ! பார்க்காமல் போனோமே என்ற தவிப்பையும் தந்தது.
நல்ல பதிவு.//
வாங்க நானானி....
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி
மக்கள் தொலைக்காட்சி பற்றி பலரும் நல்ல விதமாகச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
தமிங்கிலத்தை வலுக்கட்டாயாமகப் புகுத்தி மொழியை, கலாச்சாரத்தைச் சீரழிக்கும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மத்தியில் அத்தி பூத்தாற் போல மக்கள் தொலைக்காட்சி விளங்குவது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
பதிவுக்கு மிக்க நன்றி.
அட.. அருமையா இருக்கு..:)
குறும்படம் பாத்த உணர்வு.
//காலம் முழுக்க நம்மை சுமக்கிற வரங்களை நாம பளுவாய் நினைக்ககூடாது//
இது நல்ல டச்சிங்...
இப்பக்கூட இப்டியெல்லாம் நல்ல நிகழ்ச்சிய எடுக்கறவங்க இருக்காங்க.. இல்ல..:)
பகிர்ந்துக்கிட்டதுக்கு நன்றி :)
நானும் மக்கள் தொலைக்காட்ச்சியைத்தான் அதிகமாக பார்ப்பது அதில் வரும் நிகழ்ச்சிகள் அனைத்தும் அருமை ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு சிறப்பாக செதுக்கித்தருகிறார்கள் தமிழை வலப்படுத்தும் மக்கள் தொலைக்காட்ச்சிக்கு வாழ்த்துக்கள்
//வெற்றி said...
மக்கள் தொலைக்காட்சி பற்றி பலரும் நல்ல விதமாகச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
தமிங்கிலத்தை வலுக்கட்டாயாமகப் புகுத்தி மொழியை, கலாச்சாரத்தைச் சீரழிக்கும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மத்தியில் அத்தி பூத்தாற் போல மக்கள் தொலைக்காட்சி விளங்குவது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
பதிவுக்கு மிக்க நன்றி.
//
வாங்க வெற்றி!!
தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும்
மிக்க நன்றி!!
//ரசிகன் said...
அட.. அருமையா இருக்கு..:)
குறும்படம் பாத்த உணர்வு.
//காலம் முழுக்க நம்மை சுமக்கிற வரங்களை நாம பளுவாய் நினைக்ககூடாது//
இது நல்ல டச்சிங்...
இப்பக்கூட இப்டியெல்லாம் நல்ல நிகழ்ச்சிய எடுக்கறவங்க இருக்காங்க.. இல்ல..:)
பகிர்ந்துக்கிட்டதுக்கு நன்றி :)
//
வாங்க ரசிகன்!!
வருகைக்கு மிக்க நன்றி!!!
ஆமாம் நிறைய நல்ல நிகழ்ச்சிகள் இருக்கிறது நமக்கு தான் நேரம் போதவில்லை!!!
//புரட்சித் தமிழன் said...
நானும் மக்கள் தொலைக்காட்ச்சியைத்தான் அதிகமாக பார்ப்பது அதில் வரும் நிகழ்ச்சிகள் அனைத்தும் அருமை ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு சிறப்பாக செதுக்கித்தருகிறார்கள் தமிழை வலப்படுத்தும் மக்கள் தொலைக்காட்ச்சிக்கு வாழ்த்துக்கள்//
வாங்க புரட்சித் தமிழன்!!!
தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி!!!