சென்னையில் வசிக்கும் எல்லோருக்கும் பயணம் செய்ய ஏற்ற ஒரு உற்றத் தோழன்.... ஆட்டோ!
ஆட்டோ என்றதும் பலருக்கும் சூடு போட்ட மீட்டர்கள் தான் நியாபகம் வரும்....அப்படி இருந்தாலும் சில சமயங்களில் நம் பயணிக்கும் ஆட்டோ பயண்ங்களை நம்மால் மறக்க முடியாத சம்பவமாய் மனதில் பதிந்து விடும்...அப்படி பதிந்த சில பயணங்களைத் தான் உங்களுடன் அசைப்போட்டு உங்களையும் பயணிக்க வைக்கப் போகிறேன்...
பெரும்பாலும் நாம் ஆட்டோக்களில் பயணம் செய்யும் பொழுது பல வித்தியாசமான ஓட்டுனர்களை இல்லை இல்லை மனிதர்களை.... சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்!!!
நாம் ஆட்டோக்களில் ஏறும் முன் அவர்கள் பேச்சிலேயே ஒர் அளவு எடைப் போட்டுவிடலாம் அவர்களை....போகும் இடம் சொன்னதும் நமக்கும் அவருக்கும் நிகழும் முதல் உரையாடல் இதுவாகதான் இருக்கும்
"எவ்வோளோ கொடுப்பிங்க"?
இருவருக்கும் ஏற்றவாறு நாம் ஒரு தொகை சொன்னால் இனிதாகப் பயணம் தொடங்கும்... அப்படி இல்லை என்றால் தொகையில் சில மாற்றங்களோடு தொடரும்... அப்படி இருவருக்கும் சரிப்படவில்லை என்றால் அத்தோடு முடிந்து விடும்.....
சில ஓட்டுனர்கள் இடத்தை சொன்னதும் எங்கோ சுற்றுப்பயணம் செய்யப் போகும் அளவு தொகையை கேட்ப்பார்கள் பக்கத்தில் ஒரு இடம் சொன்னால்,பாண்டிச்சேரி போவதற்க்கான தொகையை சொல்வார்கள் சிலர் .அப்போ நமக்கு வரும் பாருங்கள் கோபம். அப்படியே கையில இருக்கும் பேக்'கால் அவரை "ஏண்டா இப்டி பகல்கொள்ளை அடிக்கறிங்க?" ன்னு நாலு சாத்து சாத்தனும்ன்னு தோனும். ஒன்றுமே சொல்லாமல் அடுத்த ஆட்டோவை தேடத் தொடங்கி விடுவோம்...சிலர் இருவருக்கும் ஏற்ற பயணத் தொகையை சரியாக கேட்பார்கள் அப்போதே நமக்கு அந்த ஓட்டுனர் மீது ஒரு மதிப்பு வந்துவிடும்...அப்படி தொடங்கும் சில பயணங்கள் மகிழ்ச்சியாய் அமையும்
சில ஓட்டுனர்கள் அரசியல் தொடங்கி, குடும்ப விசயங்களையும் பகிர்ந்து கொள்வார்கள் சில பேச்சுகள் நம்மை மிகவும் கவரும்....
ஒரு சமயம் அலுவலகத்தில் இருந்து வீடு வர நானும் என் தோழியும் ஆட்டோவில் போகலாம் என்று எங்கள் பயணத்தை தொடங்கினோம்...
நாங்கள் பேசிக்கொண்டே வர எங்கள் உரையாடலில் அவரும் கலந்துக் கொண்டார்.... அப்படி பேசிக்கொள்ளும் பொழுது...கணவன் மனைவிக்குள் ஒரு புரிதலில் இருந்துவிட்டால் பிரச்சனையே இல்லை...
எனக்கு திருமணம் முடிந்து 25 வருடங்கள் ஆகப் போகுது என் மனைவிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு வந்தது இல்லை இருவரும் நல்ல புரிததலில் இருக்கிறோம் என்று அவர் சொன்னதைக் கேட்டு...
எனக்கும் என் தோழிக்கும் ஆச்சர்யம் அவரது பேச்சில் பயண நேரமே தெரியவில்லை....
சில ஓட்டுனர்கள் அரசியலை அப்படி பேசுவார்கள்.... சிலர் சரியாகவும், சிலர் புரியாமலும் பேசிக் கொண்டு வருவார்கள்..அப்படி அவர்கள் பேசும்போது அவர்கள் தற்போது ஆளும் அரசு எப்படி செயல்படுகிறது என்று சற்று சரியாகவே யூகிக்க முடியும்!
காலை அலுவலகத்திற்கு தாமதம் ஆனதால் ஆட்டோவில் போகலாம் என்று ஆட்டோ கூப்பிட்டு செல்லும் இடம் சொன்னதும் நியாயமான தொகை கேட்டதால் ஒன்றுமே சொல்லாமல் என் பயணத்தை தொடங்கினேன்... சிறிது நேரத்தில் நன்றாக பேசினார். அப்படியே எங்கள் உரையாடல் தொடரும் போது...
உங்களுக்கு ஒரு நாள் எவ்வளவு கிடைக்கும் என்றுக் கேட்டேன்..நல்ல சவாரி கிடைத்தால்,சில நாட்களில் 200லிருந்து 500 வரை கூட கிடைக்கும்.சில நாட்களில் சரியான சவாரியே கிடைக்காமல் ,பெட்ரோல் செலவு வைப்பதும் உண்டு. என்றார்
ஆட்டோ வாடகை எவ்வளவு என்றால் 1150 ரூபாய் என்றார் மாதா மாதமா?என்றால் இல்லை வாரா வாரம் என்றார்!!!
ஒரு நாளைக்கு 200 ரூபாய் கிடைத்தால் அவருக்கு வாரம் 1400 கிடைக்கும் அதில் 250 சேமிக்க முடியும் அதிலும் எரிப்பொருள் செலவெல்லாம் போக 150 மிஞ்சும் என்றாலும் மாத வருமானமாய் மிக குறைந்த வருமானமே அவர்களுக்கு கிடைகிறது..அதில் அவர்கள் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு பிள்ளைகளையும் படிக்க வைப்பது என்பது எவ்வளவு கடினம் என்று யோசித்தால் கஷ்டம் தான்!!!!
சில ஓட்டுனர்கள் தவறுகள் செய்வதால் பல நல்லவர்களை நாம் கவனிக்க தவறிவிடுகிறோம்....
ஆட்டோவில் பணத்தை மறதியாக விட்டுச் சென்றாலும் அதை கவனமாக காவலரது துணையுடன் உரியவரிடம் சேர்க்கும் பல ஓட்டுனர்களை பற்றி நாம் கேள்விப் பட்டிருக்கிறோம்!!!!
எப்போழுதும் நல்லவற்றை எடுத்துக் கொண்டு தேவையில்லாத விசயங்களை தவிர்த்துப் பார்த்தால் ஆட்டோ பயணம் மட்டுமல்ல வாழ்க்கைப் பயணத்திலும் மகிழ்ச்சியாக பயணிக்கலாம்!!!!!
This entry was posted
on Monday, March 17, 2008
and is filed under
பகிர்வுகள்
.
You can leave a response
and follow any responses to this entry through the
Subscribe to:
Post Comments (Atom)
.
நீங்கள் சொல்லி இருப்பதைப்போல நான் அருமையான மனிதர்களை ஆட்டோ ஓட்டுனர்களாகப் பார்த்து இருக்கேன். நல்லதொரு பதிவு
\\எப்போழுதும் நல்லவற்றை எடுத்துக் கொண்டு தேவையில்லாத விசயங்களை தவிர்த்துப் பார்த்தால் ஆட்டோ பயணம் மட்டுமல்ல வாழ்க்கைப் பயணத்திலும் மகிழ்ச்சியாக பயணிக்கலாம்!!!!!\\
Well said Ezhil,
Nice post !!
//வினையூக்கி said...
நீங்கள் சொல்லி இருப்பதைப்போல நான் அருமையான மனிதர்களை ஆட்டோ ஓட்டுனர்களாகப் பார்த்து இருக்கேன். நல்லதொரு பதிவு//
நிச்சயமாக ஒவ்வொரு பயணத்திலும் சில அனுபவங்களை பெற முடியும்!!!
தங்கள் கருத்துகளை பகிர்ந்துக் கொண்டமைக்கு மகிழ்ச்சி!!!!!
நன்றி வினையூக்கி!!!!
சில ஓட்டுனர்கள் தவறுதாலாய் சில சம்பவங்களை செய்தாலும் பல நல்லவர்களைநாம் கவனிக்க தவறிவிடுகிறோம்...
very good lines and good thoughts...! write more about like this...
Congratts....!
// Divya said...
\\எப்போழுதும் நல்லவற்றை எடுத்துக் கொண்டு தேவையில்லாத விசயங்களை தவிர்த்துப் பார்த்தால் ஆட்டோ பயணம் மட்டுமல்ல வாழ்க்கைப் பயணத்திலும் மகிழ்ச்சியாக பயணிக்கலாம்!!!!!\\
Well said Ezhil,
Nice post !!//
வாங்க திவ்யா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி!!!!
//karthik said...
சில ஓட்டுனர்கள் தவறுதாலாய் சில சம்பவங்களை செய்தாலும் பல நல்லவர்களைநாம் கவனிக்க தவறிவிடுகிறோம்...
very good lines and good thoughts...! write more about like this...
Congratts....!//
வாங்க கார்த்திக்
கண்டிப்பாக எழுதுகிறேன்!!!
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி!!!
nalla iruku unga 'auto' ride post:))
natpodu
Nivisha
\\எப்போழுதும் நல்லவற்றை எடுத்துக் கொண்டு தேவையில்லாத விசயங்களை தவிர்த்துப் பார்த்தால் ஆட்டோ பயணம் மட்டுமல்ல வாழ்க்கைப் பயணத்திலும் மகிழ்ச்சியாக பயணிக்கலாம்!!!!!\\
ஆட்டோவில் ஆரம்பித்து வாழ்க்கை பயணத்தில் முடிச்சிட்டிங்க.
நல்ல பதிவு..;))
\\சென்னையில் வசிக்கும் எல்லோருக்கும் பயணம் செய்ய ஏற்ற ஒரு உற்றத் தோழன்.... ஆட்டோ! \\
சென்னையில் மக்களின் வாழ்க்கையில் ஆட்டோ மிக முக்கிய இடம் உண்டு. அதுவும் இந்த ஷேர் ஆட்டோ எல்லாம் சொல்லவே வேண்டாம் சென்னையில் இருந்த வரையில் தினமும் அதில் பயணம் செய்யாதா நாளே இல்லை..;)
கருத்தான பதிவு தான் ஆனால் என்ன அண்ணன் பேருந்து பயணம் போடுறாரு நீங்க ஆட்டோ பயணம் போடுறீங்க??? :)
//நிவிஷா..... said...
nalla iruku unga 'auto' ride post:))
natpodu
Nivisha//
வாங்க நிவிஷா!!!
உங்கள் வருகையும் வாழ்த்துகள் கூட நல்லா இருக்குங்க....
வருகைக்கு நன்றி!!!!
//கோபிநாத் said...
//எப்போழுதும் நல்லவற்றை எடுத்துக் கொண்டு தேவையில்லாத விசயங்களை தவிர்த்துப் பார்த்தால் ஆட்டோ பயணம் மட்டுமல்ல வாழ்க்கைப் பயணத்திலும் மகிழ்ச்சியாக பயணிக்கலாம்!!!!!\\
ஆட்டோவில் ஆரம்பித்து வாழ்க்கை பயணத்தில் முடிச்சிட்டிங்க.
நல்ல பதிவு..;))//
வாங்க கோபி.....
வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி!!!
அன்புள்ள எழில்,
நல்ல பதிவு.
ஆட்டோ ஓட்டுனர்களும் மனிதர்களே
அவர்கள் நேசிக்கப்பட வேண்டியவர்கள்
ஏழை எளிய மக்களின் கார் தான் ஆட்டோ. அதை ஓட்டி ஏழைகளுக்கு சேவை செய்பவர்கள் இவர்கள்.
இவர்களை பற்றின இந்த பதிவிற்கு
ஆட்டோ ஓட்டுனர் சார்பில் எனது நன்றி பல!
அன்புடன்
என் சுரேஷ்
kadasi lines... unmaiyooo unmai...
: )
\\ \\சென்னையில் வசிக்கும் எல்லோருக்கும் பயணம் செய்ய ஏற்ற ஒரு உற்றத் தோழன்.... ஆட்டோ! \\
சென்னையில் மக்களின் வாழ்க்கையில் ஆட்டோ மிக முக்கிய இடம் உண்டு. அதுவும் இந்த ஷேர் ஆட்டோ எல்லாம் சொல்லவே வேண்டாம் சென்னையில் இருந்த வரையில் தினமும் அதில் பயணம் செய்யாதா நாளே இல்லை..;)//
நீங்கள் சொல்வது மிகவும் உண்மை நம் வாழ்வில் ஆட்டோ மிக முக்கியமானது..
தங்கள் கருத்துகளை பகிர்ந்தமைக்கு நன்றி கோபி
//ஸ்ரீ said...
கருத்தான பதிவு தான் ஆனால் என்ன அண்ணன் பேருந்து பயணம் போடுறாரு நீங்க ஆட்டோ பயணம் போடுறீங்க??? :)//
வாங்க ஸ்ரீ!
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி....
ஹி ஹி!!! எங்க பாசம் அப்படி
//என் சுரேஷ் said...
அன்புள்ள எழில்,
நல்ல பதிவு.
ஆட்டோ ஓட்டுனர்களும் மனிதர்களே
அவர்கள் நேசிக்கப்பட வேண்டியவர்கள்
ஏழை எளிய மக்களின் கார் தான் ஆட்டோ. அதை ஓட்டி ஏழைகளுக்கு சேவை செய்பவர்கள் இவர்கள்.
இவர்களை பற்றின இந்த பதிவிற்கு
ஆட்டோ ஓட்டுனர் சார்பில் எனது நன்றி பல!
அன்புடன்
என் சுரேஷ்//
வாங்க சுரேஷ்!!!
வருகைக்கும் விரிவான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி....
:)) ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் :)))
எனக்கு இது வரை ஆட்டோக்காரர்கள் என்றாலே ஏமாற்றுப்பேர்வழிகள்,அடாவடி செய்பவர்கள் என்ற impression மட்டுமே இருந்து வந்திருக்கிறது!!
எதையும் நல்ல கண்ணோட்டத்துடன் நோக்க வேண்டும் என்கிற உங்கள் கருத்து நியாயமானது தான்!!
மேலும் இது போன்ற பல பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்!! :-)
//Dreamzz said...
kadasi lines... unmaiyooo unmai...//
வாங்க Dreamzz!!!
நீங்க சொன்னா சரிதான்....
வருகைக்கு நன்றி!!!!
வாங்க R2k!!
:))
// ஜி said...
:)) ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் :)))//
வாங்க ஜி....
ஆம் கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் சரி
உங்களுக்கு என்ன அனுபவம் ஜி.... :))
வருகைக்கு மிக்க நன்றி!!!
//CVR said...
எனக்கு இது வரை ஆட்டோக்காரர்கள் என்றாலே ஏமாற்றுப்பேர்வழிகள்,அடாவடி செய்பவர்கள் என்ற impression மட்டுமே இருந்து வந்திருக்கிறது!!
எதையும் நல்ல கண்ணோட்டத்துடன் நோக்க வேண்டும் என்கிற உங்கள் கருத்து நியாயமானது தான்!!
மேலும் இது போன்ற பல பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்!! :-)//
வாங்க CVR!!!
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!!!
arumai ... ungaladhu veru sila padhippugalayum padithen...
ennathaan samoogam munneri irundhalum kadhalai patriyum, muthapparimaralgazhai patriyum ulla kavithaigalai padhikkavum perum dhairiyamum athaivida pakkuvamum vendum. Adhu irandum ungalidam ulladhai kandu viyakkiren. Thodarattum ungal pathippugal tamizhaipola...
வணக்கம் எழில் தங்களின் வலைதளம் கண்டு மகிழ்ந்தேன்.நன்றாக இருக்கிறது, தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்..
நல்லா சொல்லிருக்கீங்க.
நல்லாயிருக்கு ..,உங்க ஆட்டோ பயணம்.
ஆமா.. அடிக்கடி என் மொக்கைகளை பாத்துட்டு ஆட்டோ அனுப்புவேன்,ஆட்டோ அனுப்புவேன்னு எல்லாரும் மிரட்டறாய்ங்களே.. அதுக்கு எம்புட்டு வாடகை ஆகும்ன்னும் கேட்டு சொல்லியிருக்கலாம்ல்ல..:)))))
:)
சில நல்லவங்களை பாத்துட்டு பல கெட்டவங்களை தவறவிட்டுட்டீங்களோன்னும் எடுத்துக்கலாமில்ல!!
ஆட்டோட்ரைவர்னாலே ரவுடிங்க அப்படிங்கிற என்னத்தை அவ்வளவு சீக்கிரம் மாத்தமுடியாது.
இந்த ஸ்டாண்ட் ப்ரச்சனை எல்லாம் பாத்திருக்க மாட்டீங்கன்னு நம்பறேன்.
:)
ஒவ்வொறு பயணங்களும் ஒவ்வொறு அனுபவம் தான் இல்லையா!! ஆட்டோவாகட்டும், டாக்ஸி ஆஹட்டும் இல்லனா இப்ளைட்டே ஆஹட்டும்!
//Arvind NR said...
arumai ... ungaladhu veru sila padhippugalayum padithen...
ennathaan samoogam munneri irundhalum kadhalai patriyum, muthapparimaralgazhai patriyum ulla kavithaigalai padhikkavum perum dhairiyamum athaivida pakkuvamum vendum. Adhu irandum ungalidam ulladhai kandu viyakkiren. Thodarattum ungal pathippugal tamizhaipola...//
வாங்க அரவிந்!!!
வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி...
//Anonymous said...
வணக்கம் எழில் தங்களின் வலைதளம் கண்டு மகிழ்ந்தேன்.நன்றாக இருக்கிறது, தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்..//
வாங்க அனானி!!!
தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்
நன்றி.. கண்டிப்பாக தொடருகிறேன்!!!