வெள்ளித்திரை!!!  

பதித்தவர் : எழில்பாரதி in

இந்நாள் வரை தங்கச்சி ஸ்ரீமதி அழைத்த திண்ணை பதிவை எழுதி முடிக்கவில்லை அதற்குள் அழைப்புவிடுத்த அன்றில் ஸ்ரீ க்கு என் நன்றிகள் தங்கச்சி உன் பதிவையும் சீக்கரம் பதித்துவிடுகிறேன்....

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?


எந்த வயது என்று குறிப்பாக சொல்லமுடியாது நினைவுத்தெரிந்து என் 6 வயதில் உறவினர்களோடு.... நாயகன் படம் பார்த்தேன் நாகேஷ் திரையரங்கில் பாண்டிபஜாரில் அது ஒரு நல்ல திரையரங்கு இப்போது அது கல்யாணமண்டபமாய் உருமாறியுள்ளது) ..... இப்போ கதைக்கு வருவோம் ரெண்டு பேர் சத்தமா பேசினாலே அழுதுடுவேன் அதுல அடி தடி இரத்தம் வேறயா கேட்கவே வேண்டாம்.... நான் அழுது ஆர்ப்பாட்டம் செய்ததுல பாதி படத்திலையே வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க...இப்போவும் அந்த படம் பார்க்கும் பொழுது இதுக்கா அவ்வளவு ஆர்ப்பாட்டம்ன்னு மனசுக்குள்ளயே சிரிச்சிக்குவேன்....

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

கடைசியாய் என் தோழிகளோடு சத்தியம் திரையரங்கில் பாட்டுக்காக படத்துக்கு போக ஆசைப்பட்டு நொந்துட்டேன்...

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
அரங்கிலன்றி சமிபத்தில் குறுந்தகடில் பார்த்தத் திரைப்படம் ராமன் தேடிய சீதை.... மிகவும் நல்ல திரைப்படம் 5 நாயகிகள் படத்தில் இருந்தாலும் முகம் சுளிக்க வைக்காமல் இயல்பான கதையை அழகாய் எடுத்திருக்கிறார் இயக்குனர் அதுவும் பசுபதி சம்மந்தப் பட்ட காட்சிகள் மிகவும் அற்புதமானவை... கேட்க கேட்க தெவிட்டாத 3 அற்புதமான பாடல்கள்.... நல்ல படம்!!!

4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?
நிறைய இருக்கிறது உதிரிப்பூக்கள், மெளனராகம்,மெல்லத் திறந்தது கதவு,முதல் மரியாதை,மூன்றாம்பிறை,பவித்ரா,அன்புள்ள அப்பா, பூவே பூச்சூடவா,காக்க காக்க, காற்றுக் கென்ன வேலி அப்படியே பட்டியல் நீண்டுக்கொண்டே போகும்...

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?காதலில் விழுந்தேன் திரைப்படம் சன் குழுமத்திற்கும் கலைஞர் குழுமத்திற்கும் நடுவில் சிக்கித்தவித்த சம்பவம்


5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?இந்தியன், தசவதராம் படங்களில் கமல் மேக்கப்!!


6. தமிழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?நிறைய....


7.தமிழ் சினிமா இசை?
இளையராஜா 80களில் இசை அமைத்த ஒவ்வொரு பாடலும் நம்மை கடத்தி செல்லும்... இப்பொழுது வரும் மெலடி பாடல்கள் எல்லாமே பிடிக்கும்...

தமிழ் சினிமா இசை இப்பொழுது ஆங்கில ஆல்பங்களை நம்பி இருக்கிறதோ என்கிற ஆதங்கத்தையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை



8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

நிறைய பார்ப்பதுண்டு அதிலும் ஈரானிய மொழிப் படங்களை விரும்பி பார்ப்பதுண்டு
childrens of heaven, color of paradise,mamas Guest போன்ற படங்கள் அதிகம் தாக்கிய படங்கள்


ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் தொலைக்காட்சியில் உலக திரைப்படங்கள் பார்பதுண்டு தம்பி கையில் இருந்து வெற்றி கரமாக "remote"-யை பறித்துவிட்டால் அதை பார்க்கலாம் இல்லைனா விஜய் தொலைக்காட்சி மொழிபெயர்ப்பு படங்கள் தான்...


மற்றபடி ஹிந்தி,தெலுங்கு,மலையாள மொழிகளிலும் நல்ல திரைப்படங்களை பார்பதுண்டு...

9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

தொடர்பு இல்லை... பாவங்க தமிழ் சினிமா இப்பவே கஷ்டப்படுது விட்டுடலாம்

10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பாவமா இருக்கு தமிழ் சினிமாவை பார்த்தால் சன் குழுமத்திற்கும் கலைஞர் குழுமத்திற்கும் சிக்கி தவிக்கபோவதை நினைத்து..


11. ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்

எந்த மாற்றமும் இருக்காது... மக்கள் சீரியலே கதி என்று அழுது கொண்டிருப்பார்கள்

குறிப்பு: நான் கூப்பிடனும்ன்னு நினைத்த எல்லோரையும் ஸ்ரீயே அழைத்து விட்டார் அதனால் யாரையும் அழைக்கவில்லை!!!

This entry was posted on Wednesday, November 12, 2008 and is filed under . You can leave a response and follow any responses to this entry through the Subscribe to: Post Comments (Atom) .

10 மழைத்துளிகள்

\\ரெண்டு பேர் சத்தமா பேசினாலே அழுதுடுவேன் \\


அய்யோ பாவம்...குழந்தை:)))

சும்மா வெட்கபடாம சொல்லுங்க எழில்.....இப்பவும் அப்படிதான அழுவீங்க????

\\9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?


தொடர்பு இல்லை... பாவங்க தமிழ் சினிமா இப்பவே கஷ்டப்படுது விட்டுடலாம்\\


:))))

\\ஈரானிய மொழிப் படங்களை விரும்பி பார்ப்பதுண்டு\\

அட.....சூப்பரு:))

புதுசா இருக்குதே உங்க ரசனை!

//அதுவும் பசுபதி சம்மந்தப் பட்ட காட்சிகள் மிகவும் அற்புதமானவை... //

எனக்கும் அது ரொம்ப பிடிச்சிருக்கு.. எப்பவாவது டிவில போட்டா ஓடி வந்து பார்க்கிறேன்... மத்தபடி ஹீரோஸ் அழற படத்தெல்லாம் பார்க்கிற அளவுக்கு நான் இன்னும் பக்குவபடல..

//காதலில் விழுந்தேன் திரைப்படம் சன் குழுமத்திற்கும் கலைஞர் குழுமத்திற்கும் நடுவில் சிக்கித்தவித்த சம்பவம்//

நாலு பேர் நல்லா இருந்திருப்பாங்க

//ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் தொலைக்காட்சியில் உலக திரைப்படங்கள் பார்பதுண்டு தம்பி கையில் இருந்து வெற்றி கரமாக "remote"-யை பறித்துவிட்டால் அதை பார்க்கலாம் இல்லைனா விஜய் தொலைக்காட்சி மொழிபெயர்ப்பு படங்கள் தான்...//

எங்கப்பாரு ரிமோட் சண்ட ச்சீ ச்சீ ச்சீ.. (மாதவன் இந்த ப்லாக் படிக்க மாட்டான்கிற தைரியத்துல போட்ட கமெண்ட்..)

//எந்த மாற்றமும் இருக்காது... மக்கள் சீரியலே கதி என்று அழுது கொண்டிருப்பார்கள்//

:)))

//உதிரிப்பூக்கள், மெளனராகம்,மெல்லத் திறந்தது கதவு,முதல் மரியாதை,மூன்றாம்பிறை,பவித்ரா,அன்புள்ள அப்பா, பூவே பூச்சூடவா,காக்க காக்க, காற்றுக் கென்ன வேலி //

உங்க ரசனை ரொம்ப நல்லாவே இருக்குங்க எழில்.

நான் வலைக்கு புதியவன்
என் வலைக்கு அனைவரையும்
வரவேற்கிறேன்.
உங்கள் கருத்துக்களையும்
தெரிவிக்கவும்!
தேவா.
Thevanmayam.blogspot.com.

Post a Comment