விடையாய் நீ!!  

பதித்தவர் : எழில்பாரதி




எனக்குள் 
எழும் 
ஓராயிரம்
கேள்விகளுக்கான 
ஒற்றை
விடை
நீ!!




காதல் பட்டாம்பூச்சி  

பதித்தவர் : எழில்பாரதி in


சலனமற்று
இருந்த
என்னுள்
அடைமழையின்
முதல்
துளியாய்
நீ!!


மண்வாசனையை
எழுப்பி
விளையாடும்
சிறு மழையாய்
தூக்கங்களை
எழுப்பிவிட்டு செல்கிறாய்
உன்
சில நிமிட
கனவுகளில்!


சில நிமிட
மௌனங்களில்
நம்மைச்சுற்றி
ஓராயிரம்
கவிதை
பட்டாம்பபூச்ச்சிகள்!

           
குளிர்கால
இரவுகளில்
கதகதப்பாய்
போர்த்தி விட்டு
 செல்கின்றன
உன்
நினைவுககள்!!!


எப்பொழுதும்
மழையில் நனைந்து
விளையாடும்
நான்
இப்பொழுதெல்லாம்
ஓளிந்துக்கொள்கிறேன்
உன் முத்த ஈரங்கள்
அழிந்து விடுமோ
என்று!!!

கண்ணீர்  

பதித்தவர் : எழில்பாரதி in


மௌனமாய் மனதிற்குள்
அடக்கிவைத்த
அழுகை எல்லாம் 
அழுத்தம் தாங்காமல் 
கண்ணீர்  துளிகளாய் 
பெருகும் நொடியில்
கைகுட்டைக்கேனும்
சொல்லிவிடலாமா காரணத்தை!!!!! 

நீ...நான்...காதல்!!!  

பதித்தவர் : எழில்பாரதி in



உன்னிடம்
கோபப்பட்டு
விலகும்போதுதான்
இன்னும்
நெருக்கமாய்
அணைத்துக்கொள்கிறது
காதல்
என்னை!!
காதலித்தது என்னவோ
நாம்
சத்தமே இல்லாமல்
திருமணம்
முடித்துக் கொண்டன‌
நம் விரல்கள்
மாலையாய்
மோதிரங்களை மாற்றி!!!

சீண்டல்களும்
சமாதானங்களும்
நேரங்களை களவாடிக்கொண்டு
சொற்ப நேர‌ங்க‌ளே
கிடைப்ப‌தால்
கோப‌மாம்
முத்தத்திற்கு
ந‌ம் காத‌லோடு!!!
என்னை
சீண்டி சீண்டி
விளையாடும்
உன்னை
சீண்டிப் பார்க்கலாமே
என்று கோவ‌மாய்
ந‌டித்தால்
எல்லாமும் அறிந்த‌வ‌னாய்
தொட‌ங்குகிறாய்
உன்
அடுத்த‌ சீண்ட‌லை....

தண்டவாளங்களாய்
இருக்கும்
இதயங்களில்
இனிதே தொடங்கியது
பயணத்தை
நம் காதல்!!!

உன் மெளன‌
நிழற்குடையில்
காத்திருக்கும்
என் காதலுக்கு
ஒரு
புன்னகையை மட்டும்
சிந்தி போ
நிம்மதியாய் இளைப்பாறும்!!!
பயணங்களில் கலையும்
என் கூந்தலை
சரி செய்கிறேன்
என்று
என் வெட்கங்களை
கலைத்து
விட்டு செல்கிறாய்!!!
தன்னை
மறந்து
தூங்கும் குழந்தையின்
சுகம் கண்டு
ஏங்குது
காதல்
உன் மடி
வந்து துயில!!!

இதுவரை
வெற்றிடமாய்
இருந்த‌
என்
இதயக்கூட்டில்
அனுமதியே
இல்லாமல்
விரித்துவிட்டாய்
உன்
காதல் சிறகை!!!

உன் வருகைக்காக
காத்திருப்பது
நான் மட்டும்
அல்ல
எனக்கு துணையாய்
நீ கொடுத்து விட்ட
சென்ற
கடைசி முத்தமும் தான்!!!

விடியல்!!!  

பதித்தவர் : எழில்பாரதி in ,



வெள்ளை மாளிகையில்
கறுப்புச்சூரியன்
விடியுமா
நாளை
எமக்கான விடுதலை!!!

ஈழக்கவிதைகள்!!!  

பதித்தவர் : எழில்பாரதி in ,

சிதறிய
எம் மக்களை
இணைப்பதற்காக
சிதறுகிறேன்
நான்
வலிகளேயின்றி!!!



மழையில்
நனைந்தால்
ஆகாதென்று
முந்தானை
குடைப்பிடிக்கிறாள் அம்மா
ம‌க‌ளின்
கல்லறைக்கு!!!


( ஈழத்தமிழரின் வலிகளை சும‌ந்து வெளிவந்திருக்கும் தை கவிதையிதழில் இக்கவிதைகள் இடம்பெற்றுள்ளது!!! )

நன்றி : தை கவிதை இதழ் - 2009

அம்மா!!!  

பதித்தவர் : எழில்பாரதி in

அம்மா!!!

என்ன ஒரு அருமையான உறவு!!!!

உலகத்தில் அனைவராலும் விரும்பக்கூடிய ஒரு உயிர் என்றால் அது அம்மாதான்!!!

கருவில் சுமந்ததில் இருந்து வாழ் நாள் முழுவதும் நம்மை சுற்றியே அவரது உலகத்தை அமைத்துக் கொண்டு நமக்காகவே வாழும் ஒரு தேவதை அம்மா!!!!




என்ன அம்மாவை பற்றி பேசுறேன்னு யோசிக்கறிங்க‌ போல ஆமாங்க இன்று ரொம்ப முக்கியமான நாள் எனக்கு...

இன்று என் அம்மாவின் பிறந்த நாள்!!!

அம்மாவாய் மட்டும் அல்ல இன்று வரை எனக்கு நல்ல தோழியாகவும் என்னை வழிநடத்துபவர்!!!




நான்
உச்சரித்த‌
முதல் வார்த்தையின்
ஓசை நீ!!!

என் மழலையை
மொழியை
மொழி பெயர்க்க
தெரிந்த‌
கவி நீ!!!

மூன்றே சொற்களில்
பலநூறு பூக்களின்
வண்ணமாய்
என்னில் கலந்த‌
என் தேவதை
அம்மா!!!




என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா!!!!!!

வெள்ளித்திரை!!!  

பதித்தவர் : எழில்பாரதி in

இந்நாள் வரை தங்கச்சி ஸ்ரீமதி அழைத்த திண்ணை பதிவை எழுதி முடிக்கவில்லை அதற்குள் அழைப்புவிடுத்த அன்றில் ஸ்ரீ க்கு என் நன்றிகள் தங்கச்சி உன் பதிவையும் சீக்கரம் பதித்துவிடுகிறேன்....

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?


எந்த வயது என்று குறிப்பாக சொல்லமுடியாது நினைவுத்தெரிந்து என் 6 வயதில் உறவினர்களோடு.... நாயகன் படம் பார்த்தேன் நாகேஷ் திரையரங்கில் பாண்டிபஜாரில் அது ஒரு நல்ல திரையரங்கு இப்போது அது கல்யாணமண்டபமாய் உருமாறியுள்ளது) ..... இப்போ கதைக்கு வருவோம் ரெண்டு பேர் சத்தமா பேசினாலே அழுதுடுவேன் அதுல அடி தடி இரத்தம் வேறயா கேட்கவே வேண்டாம்.... நான் அழுது ஆர்ப்பாட்டம் செய்ததுல பாதி படத்திலையே வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க...இப்போவும் அந்த படம் பார்க்கும் பொழுது இதுக்கா அவ்வளவு ஆர்ப்பாட்டம்ன்னு மனசுக்குள்ளயே சிரிச்சிக்குவேன்....

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

கடைசியாய் என் தோழிகளோடு சத்தியம் திரையரங்கில் பாட்டுக்காக படத்துக்கு போக ஆசைப்பட்டு நொந்துட்டேன்...

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
அரங்கிலன்றி சமிபத்தில் குறுந்தகடில் பார்த்தத் திரைப்படம் ராமன் தேடிய சீதை.... மிகவும் நல்ல திரைப்படம் 5 நாயகிகள் படத்தில் இருந்தாலும் முகம் சுளிக்க வைக்காமல் இயல்பான கதையை அழகாய் எடுத்திருக்கிறார் இயக்குனர் அதுவும் பசுபதி சம்மந்தப் பட்ட காட்சிகள் மிகவும் அற்புதமானவை... கேட்க கேட்க தெவிட்டாத 3 அற்புதமான பாடல்கள்.... நல்ல படம்!!!

4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?
நிறைய இருக்கிறது உதிரிப்பூக்கள், மெளனராகம்,மெல்லத் திறந்தது கதவு,முதல் மரியாதை,மூன்றாம்பிறை,பவித்ரா,அன்புள்ள அப்பா, பூவே பூச்சூடவா,காக்க காக்க, காற்றுக் கென்ன வேலி அப்படியே பட்டியல் நீண்டுக்கொண்டே போகும்...

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?காதலில் விழுந்தேன் திரைப்படம் சன் குழுமத்திற்கும் கலைஞர் குழுமத்திற்கும் நடுவில் சிக்கித்தவித்த சம்பவம்


5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?இந்தியன், தசவதராம் படங்களில் கமல் மேக்கப்!!


6. தமிழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?நிறைய....


7.தமிழ் சினிமா இசை?
இளையராஜா 80களில் இசை அமைத்த ஒவ்வொரு பாடலும் நம்மை கடத்தி செல்லும்... இப்பொழுது வரும் மெலடி பாடல்கள் எல்லாமே பிடிக்கும்...

தமிழ் சினிமா இசை இப்பொழுது ஆங்கில ஆல்பங்களை நம்பி இருக்கிறதோ என்கிற ஆதங்கத்தையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை



8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

நிறைய பார்ப்பதுண்டு அதிலும் ஈரானிய மொழிப் படங்களை விரும்பி பார்ப்பதுண்டு
childrens of heaven, color of paradise,mamas Guest போன்ற படங்கள் அதிகம் தாக்கிய படங்கள்


ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் தொலைக்காட்சியில் உலக திரைப்படங்கள் பார்பதுண்டு தம்பி கையில் இருந்து வெற்றி கரமாக "remote"-யை பறித்துவிட்டால் அதை பார்க்கலாம் இல்லைனா விஜய் தொலைக்காட்சி மொழிபெயர்ப்பு படங்கள் தான்...


மற்றபடி ஹிந்தி,தெலுங்கு,மலையாள மொழிகளிலும் நல்ல திரைப்படங்களை பார்பதுண்டு...

9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

தொடர்பு இல்லை... பாவங்க தமிழ் சினிமா இப்பவே கஷ்டப்படுது விட்டுடலாம்

10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பாவமா இருக்கு தமிழ் சினிமாவை பார்த்தால் சன் குழுமத்திற்கும் கலைஞர் குழுமத்திற்கும் சிக்கி தவிக்கபோவதை நினைத்து..


11. ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்

எந்த மாற்றமும் இருக்காது... மக்கள் சீரியலே கதி என்று அழுது கொண்டிருப்பார்கள்

குறிப்பு: நான் கூப்பிடனும்ன்னு நினைத்த எல்லோரையும் ஸ்ரீயே அழைத்து விட்டார் அதனால் யாரையும் அழைக்கவில்லை!!!

என்னுள் நீ!!!  

பதித்தவர் : எழில்பாரதி in

மழைக்காலங்களில்
மரங்களில் ஒளிந்திருக்கும்
மழைத்துளிகளை
அம்பலப்படுத்தும்
காற்றைப்போல்
என்னுள்
ஒளிந்திருக்கும்
காதலை
அம்பலப் படித்திவிடுகிறது
என்னை கடந்துசெல்லும்
உன் சுவாசம்!!!!

உன்னை
சந்திக்கும் வரை
உன்னை யார்யென்றே
தெரியாது

உன்னை
சந்தித்த பின்பு
உன்னைத் தவிர
எனக்கு
யாரையும்
தெரியவில்லை!!!!!!



இருள் சூழ்ந்த
அறையின்
சிறு துவாரம்
வழியாய்
பரவும் வெளிச்சமாய்
என்னில் பரவுகிறாய்
காதலாய்!!!

ஊடல் கணங்களில்
என்ன பேசுவதென்று
தெரியாமல்
வார்த்தைகள் தத்தளிக்கும் போது
சலனமே இல்லாமல்
பேசத்தொடங்கி விடுகின்றன
நம் விரல்கள்!!!

என்னை
தூங்கச் சொல்லிவிட்டு
நம் கைப்பேசி
உரையாடலை
முடித்துவைத்தாய்
உன்முத்த சத்தங்களோ
என் தூக்கத்தோடுதான்
விளையாடுவேன்
என்று
அடம் பிடிக்கிறது!!!!

சில்மிஷக் காதல்!!!  

பதித்தவர் : எழில்பாரதி in

எங்குதான்
கற்றுக்கொண்டதோ
என் விழிகள்
உன்
குறும் பார்வையின்
வார்த்தைகளை
மொழிப் பெயர்ப்பதற்கு

அலை
நனைத்து விட்டு
போகும்
மணற்போல்
என்றும்
உலராமலே
இருக்கும்
எனக்குள்
உன் காதல்

தூங்கவே விடாமல்
கண்ணாமூச்சி
விளையாடுகிறது
உன் காதல்
என் இரவுகளோடு

உன்
சில்மிஷ விரல்களை
சிறைப்பிடித்த
என்னை
உன்
காதல் சுவாசத்தால்
சிறைப்பிடித்து விட
திணறுகிறது
நம் காதல்
முதல்
தண்டனை
யாருக்கு கொடுப்பதென்று

எத்தனை
கோபங்கள் இருந்தாலும்
அலை துரத்தி
விளையாடும்
சிறு நண்டை
போல்
உன்னையே துரத்தி
வருகிறது
என் இதயம்

உனக்கும்
எனக்குமான
இடைவெளியை
அளக்கும்
அளவுகோலாய்
நம்
காதல் சுவாசம்!

முதல் வருடம்!!!!  

பதித்தவர் : எழில்பாரதி in


இன்று தனது முதல் பிறந்தநாளை கொண்டாடுகிறது என் வலைப்பூ கண்ணாடிமழை




இவ்வேளையில் என் குறைகளையும் நிறைகளையும் எடுத்துரைத்து என் பயணத்திற்கும் துணையாய் இருந்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்!!!!!

பிறந்தநாள் வாழ்த்துகள்!!!!!  

பதித்தவர் : எழில்பாரதி



இன்று எங்கள் வீட்டு செல்லக் குட்டி அகிலன் தனது நான்காவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்!!!!








“இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அகி குட்டி”



இவர் யார்ன்னு உங்களுக்கு அறிமுகம் தேவையில்லை



சார்தான் எனக்கு குவா குவா வாத்து பாட்டுக் கத்துக்கொடுத்தவர்!!!!!


நட்புத் தடங்கள்  

பதித்தவர் : எழில்பாரதி in

வருடக்கணக்காய்
பேசிய பேச்சுகளை
எல்லாம்
கூடவே
அழைத்து வருகிறது
என்றேனும் வரும்
ஒற்றை
குறுந்தகவல்

பல
இதயங்களின்
கவிதைகளை
சுமந்திருக்கும்
கவிதைப் புத்தகம்
வகுப்பறை மேசை

வேவ்வேறு திசைகளில்
இதழ்களாய்
விரிந்தாலும்
இணைந்தே இருக்கின்றோம்
நட்பு என்னும்
ஒற்றைக் காம்பில்

இன்னும்
உலராமலேயே
இருக்கிறது
கடைசியாய்
நீ
உயிர்தொட்டு எழுதிய
நினைவேடு

கல்லூரி
கடைசி நாள்
பறவைகளின் கூட்டில்
சலசலப்பு


இப்பொழுதும்
கல்லூரிப்
பேருந்தைப்
பார்க்கும் போதெல்லாம்
தேடத் தொடங்கிவிடுகின்றன
தோள்கள்
தலை சாய்த்து
உறங்கிய
தோழியை

பெற்றோர்
இட்ட பெயரும்
அந்நியமாய்த்
தெரிகிறது
தோழிகள்
சூட்டிய
செல்லப் பெயரில்

கண் சிமிட்டும் காதல்!!! - 2  

பதித்தவர் : எழில்பாரதி in

நீ
அணிவித்த கொலுசுகளுக்கு
சொல்லிவை
நான் மட்டுமே
உச்சரிக்கும்
உன் பெயரை
ஊருக்கே உரக்க கேட்கும் படி
உச்சரிக்க வேண்டாம்
என!!!

திருமணத்திற்கு
முன்னும் பின்னும்
இருக்கும் காதலுக்கு
என்ன வித்தியாசம்
என்றதும்
நானாக பெறும் முத்தத்திற்கும்
நீயாக தரும் முத்தத்திற்கும்
உள்ள வித்தியாசம் தான்
என்று
கண் சிமிட்டி சிரிக்கிறாய்!!!
உன் வருகை
இல்லாத நாட்களில்
அழுது ஆர்பாட்டம் செய்யும்
நம் காதல் குழந்தையை
எப்படிதான் சமாளிப்பதோ!!!!


உன்
பார்வைகள் தான்
கற்றுக் கொடுத்தன
என்
இமைகளுக்கும்
வெட்கப்படத்
தெரியும்
என்று!!!

நீ
முத்தம் கேட்டு
கொடுக்கவில்லை
என்றால்
திட்டி தீர்த்து விடுகின்றன
என் இதழ்கள்!!!

சாகாவரம்
பெற்று
வளர்ந்துக் கொண்டே
இருக்கிறது
நம்
முதல் முத்தம்!!!

முத்தத்தில்
கூட
சோர்ந்து போகாத
நம்
இதழ்களை
சோர்வடைய செய்கிறது
ஊடல்
உடைந்து
எழத்
துடிக்கும்
முதல் வார்த்தை!!!

உன் அருகாமையை
அனுபவிப்பதா
இல்லை
உன் சில்மிஷங்களை
ரசிப்பதா
எனத்
தெரியாமல்
திணறச்செய்கிறது
உன் காதல்