அப்பா..... இப்பவே கண்ணக்கட்டுதே!!!!!  

பதித்தவர் : எழில்பாரதி in

நீங்க சின்ன வயசில படிச்ச பாட்டெல்லாம் ஒரு பதிவா போடுங்கன்னுநம்ம காதல் இளவரசன்.... அருட்பெருங்கோ அழைப்பு விட, சரி நாம சின்னதில படிச்ச பாட்டுதானே போட்டுடா போச்சுன்னு பார்த்தா,தெரிந்திருந்த பாடல்களில் பாதி பாடல்களை அவரே பதித்து விட்டார். சரி வேறு பாட்டு போடலாம்ன்னு பார்த்தா , மிச்சம் வைச்ச ஒன்று ,இரண்டையும் பதித்து விட்டார்.... என்னடா எழிலுக்கு வந்த சோதனை.நாம என்னத்தை பதிக்க போறோம்ன்னு யோசித்த போதுதான்

மூன்று பெரிய ஜாம்பவான்கள் நினைவுக்கு வந்தாங்க.அடடா.. கையில் வெண்ணையை வைச்சுக்கிட்டு நெய்'க்கு அலைவானேன்னு,அடிச்சு, புடிச்சு அப்பாயின்மெண்ட் வாங்கிட்டேன்ல்ல. அவங்களும், எம்மேல பரிதாபப்பட்டு, அவங்க பிஸி ஷடியுல்ல கொஞ்சோண்டு , நேரத்தை ஒதுக்கி எனக்கு ரொம்ப உதவி செய்தார்கள்....இதுல ஒருத்தர் சொல்லிக்கொடுத்ததற்க்கு குருதட்சணை வேற கேட்டார்.


அவர்கள் யார்? & அவங்க கேட்ட குருதட்சணை என்ன?ன்னு இறுதியில் தெரிஞ்சுக்கலாமா?. இப்பொழுது நம்ம V.V.I.Pகள் சொல்லிக் கொடுத்த பாடல்களை பார்ப்போம்...

முதல் பாடலை ஸ்பான்ஸர் பண்ணவர் ரொம்ப ஸ்பீடு.அவர் பாட்டு சொல்லும் போது எனக்கு சரியா புரியவே இல்ல.சீடியை வேகமா ஃபார்வேட் பண்ண மாதிரி ,மின்னல் வேகமா,ராகத்தோட பாடிக் காட்டினார்.. "சார், கொஞ்சம் பொறுமையா சொன்னிங்கனா நோட்டுஸ் எடுக்க உதவியா இருக்கும்ன்னு கெஞ்சி கேட்டா (கல்லூரிலக் கூட நோட்ஸ் எடுக்க இவளோ கஷ்டப்படல)... அவர் இரண்டு வரி பொறுமையா சொல்லிவிட்டு

அடுத்தடுத்த வரிகளை ஜெட் வேகத்திற்கு கூறினார்.மறுபடியும், கொஞ்சம் பொறுமையா சொல்லுங்களேன்"என்று கேட்டது தான்.வந்துச்சு பாருங்க அவருக்கு கோவம்,பாதி(பாரதி என்பதை அவர் அப்படிதான் கூப்பிடுவார்) உனக்கு உங்க மிஸ் சொல்லிக் கொடுத்தாங்கல?அப்புறம் ஏன் இப்படி என்னை போன் போட்டு தொந்தரவு பண்ணுறே?ன்னு சொல்லி போனை கட் பண்ணிடார்

அச்சச்சோ நாம தான் அவசரப்பட்டுடோமோன்னு தோனுச்சு. சரி..,அவர் சொன்ன வரை உங்களுக்கு தந்திருக்கேன்.

அவர் சொன்னப் பாடல்...

"குள்ள குள்ள வாத்து

குவா குவா வாத்து

மெல்ல உடலை சாய்த்து

மேலும் கீழும் பார்த்து

செல்லமாக நடக்கும்

சின்னமணி வாத்து!!!!"

திரும்ப அவரை கேட்டால்,அவர் சிதம்பரத்தில் இருந்து சென்னை வீடு தேடி வந்து வந்து அடிக்கும் அபாயமிருப்பதால், வேறு யாரிடம் கேட்கலாமென்று யோசிக்கையில் ஒரு மேடம் நியாபகத்துக்கு வந்தாங்க அவங்க கிட்ட கேட்டா பாடல் கிடைக்கும் ஆனால் அவங்க சொல்லுவாங்களா இல்லை,இதுக்கெல்லாம் நேரம் இல்லைன்னு சொல்லிடுவாங்கன்னு கொஞ்சம் டவுட்டு இருந்தது... மேடம் இந்த சின்ன புள்ளைக்கு கொஞ்சம் உதவி செய்யுங்க. ஒரு பாட்டு சொல்லுங்கன்னு பணிவா கேட்டதும். சும்மா சொல்லக்கூடாது,எம்புட்டு ஆர்வமா அவங்க நேரத்தை ஒதுக்கி ஒரு பாட்டு சொன்னாங்க. அவங்களுக்கு ஒரு ஸ்பெசல் தாங்க்ஸ். அப்பாடல்....

யானை யானை அழகர் யானை

அழகரும் சொக்கரும் ஏறும் யானை

குட்டி யானைக்கு கொம்பு முளைச்சதாம்

பட்டணம் எல்லாம் பறந்து போச்சாம்..........

இன்னும் பாடல்கள் கிடைக்குமான்னு இல்லாத மூளையை கசக்கி யோசிக்கும் பொழுது ஒருத்தவங்க நினைவுக்கு வந்தாங்க வந்தாங்க. மேடம் பேசும்போதே சண்டை போடுவாங்களே?.நமக்காக பாட்டெல்லாம் பாடுவாங்களான்னு யோசிக்கிட்டே போன் போட்டு மேடம் ஒரு பாட்டு வேணும்ன்னு கேட்டதும்

அதெல்லாம் முடியாதுன்னு ரொம்ப அடம் பிடிச்சாங்க ரொம்ப நேர கெஞ்சல்கள்,கொஞ்சல்களுக்கு பிறகு,போனாப் போவுதுன்னு என்மேல் பரிதாபப்பட்டு, ஒரு பாட்டு சொன்னாங்க...

அவங்க சொன்ன பாடல்

தம்பி தம்பி என்ன வேண்டும்?
பழம் வேண்டும்
என்ன பழம்
?
பலாப்பழம்
என்னப் பலா
?
வேர்ப் பலா
என்ன வேர்
?
வெட்டி வேர்
என்ன வெட்டி
?
விறகு வெட்டி
என்ன விறகு
?
மா விறகு
என்ன மா
?

அம்மா!!!

எப்படியோ பெரிய பெரிய ஆளுங்ககிட்ட கெஞ்சி பாட்டெல்லாம் போட்டாச்சுன்னு இப்போதான் திருப்தி).

இவங்க பாட்டெல்லாம் கேட்டப்பறம் ,நமக்கும் பாடல் பாடணும் போல தோணுது இல்ல.?.எனக்கும் அப்படி தோனுதே..!!! எவ்வளவோ பண்ணிட்டோம், இதைப் பண்ண மாட்டோமா?:P

இதையும் "காதை மூடிக்கிட்டு" கேட்டுருங்க மக்களே.

கஷ்டப்பட்டு ஃபிளாஸ்பேக் கொசுவத்தியெல்லாம் சுத்தி ,சுவத்துலல்லாம் முட்டிக்கிட்டு யோசிச்சதுல ,நான் சின்ன வயசுல பாடின ரெண்டு பாட்டு ஞாபகத்துக்கு வந்துச்சு (அப்பவே நானெல்லாம் பெரிய பாடகியாக்கும்:)

ரெடி.. ஒன்..டூ.. திரி...

"அதோ பாரு காக்கா

கைடையில விக்கிது சீக்கா

பொண்ணு வரா சோக்கா

எழுந்துப் போடா மூக்கா!!!"

எப்டியிருக்கு என்னோட கருத்தாழம் மிக்க பாட்டு.

அட, இதுக்கே ஆனந்தக் கண்ணீர் விட்டா எப்படி?

உங்களுடைய அன்பு வேண்டுக்கோளுக்கிணங்க இன்னொரு பாட்டையும் பாடிடறேன்.கேட்டுக்கோங்க..

இந்தப் பாடல் எங்க ஊருல "ஜேம்ஸ் பாண்டு 007" விளையாடும்போது (அதாங்க கண்ணாமூச்சின்னு சொல்லுவாங்களே ) பாடுகிற பாடல்.


"கண்டுபிடிப்பவர்: மரங்கொத்தி குருவி

ஒளிந்துக்கொள்பவர்கள்: ஏன் ஏன் குரருவி

கண்டுபிடிப்பவர்: பல்ல வலிக்குது

ஒளிந்துக்கொள்பவர்கள்: நெல்லைல் கொருச்சிக்கோ

கண்டுபிடுப்பவர் : மாப்புட்டிக் காணும்

ஒளிந்துக்கொள்பவர்கள்: தேடிப் புடிச்சிக்கோ..."

இதைப்பத்தி சொல்லும்போது எனக்கு இன்னொரு பாட்டு ஞாபகத்துக்கு வருது.பாடவா?,.,

சரி சரி அழுவாதிங்க.. இத்தோட விட்டுறலாம்.

எனக்கு பாடல்களை சொல்லித்தந்த அந்த V.V.I.Pகள் யாருன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கிங்களா?

எனக்கு உதவிய அந்த ஜாம்பவான்கள்.........





என் சகோதரியின் மகன் அகிலன், இவரு L.K.G படிக்கிறாரு... பார்க்கதான் அமைதியா இருப்பாரு கேள்வி கேட்க தொடங்கினா நமக்கு பதில் சொல்ல முடியாது


என் தோழியின் மகள் யாழினி இவங்களுக்கு 2 வயது மேடம் பாட்டுல மட்டும் இல்ல போஸ் கொடுக்கிறதலயும் செம்ம புத்திசாலி

என் மாமா மகள் கனிமொழி இவங்களும் L.K.G படிக்கிறாங்க ........ இவங்க எப்போவும் போன் பேசினா சண்டைதான் போடுவாங்க.....


இவங்க எல்லோரும் கேட்ட குருதட்சணை "ஐஸ்கிரிம்"

இந்த ஆட்டத்துக்கு நான் அழைப்பவர்கள்..

1. மொழியோடு பயணம் செய்யும் அண்ணன் பிரேம்குமார்

2. மத்தாப்பாய் ஜொலிக்கும் திவ்யா மாஸ்டர்

3. புதியதாய் வலையுலகில் அறிமுகமான உளறல் சத்யா....

This entry was posted on Wednesday, April 16, 2008 and is filed under . You can leave a response and follow any responses to this entry through the Subscribe to: Post Comments (Atom) .

49 மழைத்துளிகள்

எவ்வளவு முயன்றாலும் , பாட்டை படிக்க முடிவதில்லை பாடத்தான் முடிகிறது...

நன்றி எழில் பால்யத்தை நினைவுக்கு கொண்டுவந்தமைக்கு...

:-))))
இவங்க தான் அந்த VVIPs-ஆ !!
நான் யாரோ எவரோ என்று நினைத்துவிட்டேன்!!

:-)

//CVR said...
:-))))
இவங்க தான் அந்த VVIPs-ஆ !!
நான் யாரோ எவரோ என்று நினைத்துவிட்டேன்!!
//

நானும் கூட அவரோ இவரோ என்று நினைத்தேன் :))))))


இரண்டாவது பாப்பா சூப்பரா இருக்கு (அழகான போஸ்!)

/"குள்ள குள்ள வாத்து

குவா குவா வாத்து

மெல்ல உடலை சாய்த்து

மேலும் கீழும் பார்த்து/

:))))))))

வாத்து பாட்டு டாப்பு. இது வரை நான் கேட்காத ஒன்று :) ஒரு வழியா ரொம்ப நாள் கழிச்சு இந்த பதிவு போட்டுட்டீங்க போல ;)

VVIP'க்கள் எல்லாரும் செம கியூட்! வாழ்க பாடல்கள் :)

குட்டீஸ்ல்லாம் ரொம்ப கியுட்.சோ சுவீட்.

அருமையா இருக்கு உங்க குட்டீஸ் பாட்டு,எங்க வாழ்த்துகளை அவங்களுக்கும் சொல்லிருங்களேன்:)

//அதோ பாரு காக்கா

கைடையில விக்கிது சீக்கா

பொண்ணு வரா சோக்கா

எழுந்துப் போடா மூக்கா!!!"

எப்டியிருக்கு என்னோட கருத்தாழம் மிக்க பாட்டு.//

ஹா..ஹா.. :)))))))

இது சூப்பரேய்ய்ய்....:)))

ம்ம்ம்ம்...எனக்கும் இந்த வீட்டு பாடம் இருக்கு...ஒன்னும் ஞாபகத்துக்கு வரமாட்டேங்குதே.அப்படியே வந்தாலும் யாராவது போட்டுறாங்க ;))

\\அதோ பாரு காக்கா\\

\\தம்பி என்ன வேண்டும்?\\

இந்த பாட்டு எல்லாம் நானும் பாடியிருக்கேன் (நம்புங்க) ;)

VVIPகள் எல்லாம் கலக்குறாங்க...;))

VVIP's are so cute!!

Tag paniteengala Ezhil....will def'ly try to post!!!

[ivlo nakkals and nayandi oda ungala elutha mudiyumnu ippo than theriyuthu Ezhil, ......chumma kalakiputeenga:-)]

This comment has been removed by the author.

தம்பி தம்பி என்ன வேண்டும்?
பழம் வேண்டும்
என்ன பழம்?
பலாப்பழம்
என்னப் பலா?
வேர்ப் பலா
என்ன வேர்?
வெட்டி வேர்
என்ன வெட்டி?
விறகு வெட்டி
என்ன விறகு?
மா விறகு
என்ன மா?

அம்மா!!!


-- நல்லா இருக்கு! இந்த பதிவில தான் என்னை மாட்டி விடறதா சொன்னீங்க்ளா? :) நன்றி நன்றி!!!!

குழந்தைகள் சுட்டி!

:) nalla rhymes oppikareenga! enakkum indha imposition irukku :(

உங்க டெம்ளேட்டில் alignment:justify ன்னு இருக்கிறதை எடுத்திட்டு, left ன்னு மாத்துங்க. ஃபயர் ஃபாக்ஸ்ல பார்த்தா.. ஜொரம் வந்துடும் போல இருக்கு எனக்கு! :)

எனக்கு அம்னீசியா இருப்பதால்.. சிறுவயது நிகழ்வுகள் ஏதும் நினைவு வர மாட்டேங்கிறது. :((

அம்மா எழில், உன்னால இவ்வளவு நகைச்சுவையோட, வெகு அழகான நடையில் எழுத முடியுமா? வாழ்த்துக்கள், செம கலக்கல் பதிவு

நான் இந்த சங்கிலிப்பதிவுக்காக யோசிச்சு வச்சிருந்த ஒரே பாட்டு 'ஆனை ஆனை' மட்டும் தான். மீதி எதுவும் நினைவு இல்லை. அதையும் நீங்களே பதிச்சு புண்ணியம் கட்டிக்கிட்டீங்க.... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

:)))

பக்கத்துலேயே பெரிய பெரிய புலவர வச்சிருக்கீங்களே.... இப்பத்தான் புரியுது எப்படி இம்புட்டு பெரிய கவிதாயினியா இருக்கீங்கன்னு ;)))

நெசமாவே கண்ணை கட்டுதே !!!!

அழகு! அருமை!!

அன்புடன்,
ஜோதிபாரதி.

/எனக்கு அம்னீசியா இருப்பதால்.. சிறுவயது நிகழ்வுகள் ஏதும் நினைவு வர மாட்டேங்கிறது. :((/

ஹிம்.... எனக்கும்தான்.... :)

மிக முக்கியமானவர்களின் படங்களும் அருமை. கடந்த கால நினைவுகளை மீளச்செய்தமைக்கும் நன்றி

This comment has been removed by the author.

Hai ezhilbharathi,
i am very new one to blogs. actually i have more intrest in reading and watching. your blog make me smile and think. i find ur blog via thabushankar kavithakal community in orkut. continue writing. keep going.
misc: enakku tamila epdi comments eluthnumnnu theriyala, yenakku udhava mudiyuma? udhavikku munnamaagave nandriyai theriviththu vidukiren. Nandri.

//எவ்வளவு முயன்றாலும் , பாட்டை படிக்க முடிவதில்லை பாடத்தான் முடிகிறது...

நன்றி எழில் பால்யத்தை நினைவுக்கு கொண்டுவந்தமைக்கு...//

வாங்க ப்ரியன்....

எங்க எங்களுக்காக கொஞ்சம் பாடுங்க..

வருகைக்கு நன்றி ப்ரியன்....

//:-))))
இவங்க தான் அந்த VVIPs-ஆ !!
நான் யாரோ எவரோ என்று நினைத்துவிட்டேன்!!

:-)//


வாங்க CVR.....

ஆஹா...... ஏமாந்துட்டீங்களா

//ஆயில்யன். said...
//CVR said...
:-))))
இவங்க தான் அந்த VVIPs-ஆ !!
நான் யாரோ எவரோ என்று நினைத்துவிட்டேன்!!
//

நானும் கூட அவரோ இவரோ என்று நினைத்தேன் :))))))//


வாங்க ஆயில்யன்...

நீங்களும் ஏமாந்துட்டீங்களா!!!!!!


//இரண்டாவது பாப்பா சூப்பரா இருக்கு (அழகான போஸ்!)//

மேடம் கேமிராவை பார்த்தலே போஸ் கொடுக்க தொடங்கிடுவாங்க...

நீங்க சொன்னதை அவங்ககிட்ட சொல்லிவிடுகிறேன்

// திகழ்மிளிர் said...
/"குள்ள குள்ள வாத்து

குவா குவா வாத்து

மெல்ல உடலை சாய்த்து

மேலும் கீழும் பார்த்து/

:))))))))//

வாங்க திகழ்மிளிர்!!!!

;)

வருகைக்கு நன்றி....

//ஸ்ரீ said...
வாத்து பாட்டு டாப்பு. இது வரை நான் கேட்காத ஒன்று :) ஒரு வழியா ரொம்ப நாள் கழிச்சு இந்த பதிவு போட்டுட்டீங்க போல ;)//

வாங்க ஸ்ரீ!!!!

வாத்து பாட்டு நீங்க கேட்டது இல்லையா.... அது பிரபலமான பாடல்....

பின்ன தெரிந்த பாடல்கள் எல்லாம் நீங்க போட்டாச்சு அப்புரம் நான் யோசிக்கனும்ல

//sathish said...
VVIP'க்கள் எல்லாரும் செம கியூட்! வாழ்க பாடல்கள் :)//

வாங்க சதிஷ்!!!!

நன்றிங்க!!!! VVIP'க்கள் இடம் சொல்லி விடுகிறேன்,,,,

வருகைக்கு நன்றி!!!!

//ரசிகன் said...
குட்டீஸ்ல்லாம் ரொம்ப கியுட்.சோ சுவீட்.

அருமையா இருக்கு உங்க குட்டீஸ் பாட்டு,எங்க வாழ்த்துகளை அவங்களுக்கும் சொல்லிருங்களேன்:)//

வாங்க ரசிகன்!!!!

நன்றிங்க கண்டிப்பா உங்க வாழ்த்துகளை சொல்லி விடுகிறேன்

வருகைக்கு நன்றி....

//ரசிகன் said...
//அதோ பாரு காக்கா

கைடையில விக்கிது சீக்கா

பொண்ணு வரா சோக்கா

எழுந்துப் போடா மூக்கா!!!"

எப்டியிருக்கு என்னோட கருத்தாழம் மிக்க பாட்டு.//

ஹா..ஹா.. :)))))))

இது சூப்பரேய்ய்ய்....:)))//


நன்றி ரசிகன்

//கோபிநாத் said...
ம்ம்ம்ம்...எனக்கும் இந்த வீட்டு பாடம் இருக்கு...ஒன்னும் ஞாபகத்துக்கு வரமாட்டேங்குதே.அப்படியே வந்தாலும் யாராவது போட்டுறாங்க ;))


இன்னும் வீட்டுப்பாடம் செய்யலையா
தப்புங்க சீக்கரம் செய்துடுங்க....


//\\அதோ பாரு காக்கா\\

\\தம்பி என்ன வேண்டும்?\\

இந்த பாட்டு எல்லாம் நானும் பாடியிருக்கேன் (நம்புங்க) ;)//

நான் நம்புறேன்....


//VVIPகள் எல்லாம் கலக்குறாங்க...;))//

இவங்க மட்டும் இல்லனா நான் என் வீட்டுப் பாடத்தை செய்திருக்க முடியாது.....

//Divya said...
VVIP's are so cute!!

Tag paniteengala Ezhil....will def'ly try to post!!!

[ivlo nakkals and nayandi oda ungala elutha mudiyumnu ippo than theriyuthu Ezhil, ......chumma kalakiputeenga:-)]//

வாங்க திவ்யா!!!!

முயற்சி செய்யுங்க.....

எதோ எனக்கு தெரிந்ததை எழுதினேன்

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி திவ்யா!!

//சத்யா said...
தம்பி தம்பி என்ன வேண்டும்?
பழம் வேண்டும்
என்ன பழம்?
பலாப்பழம்
என்னப் பலா?
வேர்ப் பலா
என்ன வேர்?
வெட்டி வேர்
என்ன வெட்டி?
விறகு வெட்டி
என்ன விறகு?
மா விறகு
என்ன மா?

அம்மா!!!


-- நல்லா இருக்கு! இந்த பதிவில தான் என்னை மாட்டி விடறதா சொன்னீங்க்ளா? :) நன்றி நன்றி!!!!//

வாங்க சத்யா......

வருகைக்கும் சொன்னதும் பதிவு போட்டதற்கும் நன்றி சத்யா!!!

//சத்யா said...
குழந்தைகள் சுட்டி!//

ஆமாம் ரொம்ப சுட்டி!!!!

நல்ல எழுத்து நடை. நல்லா இருக்கு பதிவு. வாழ்த்துக்கள். யாழினி நல்லா போஸ் கொடுக்கிறாங்க. (முதல் தடவை உங்க பதிவுக்கு வர்றதுனால கும்மி அடிக்கலாமா கூடாதான்னு தெரியல. அதான் அமைதியா திரும்பி போறேன்)

gmail.comவணக்கம் பாரதி,தங்களின் படைப்புகள் அனைத்தையும் படித்தேன்,நன்றாக இருந்தது, இருக்கிறது... தொடர்ந்து கிராமம் சார்ந்து எழுதுங்கள், உங்களிடம் நிறைய எதிர்பார்க்கும் பல வாசகர்களில் நானும் ஒருவன்... வாழ்த்துக்கள்.

Dreamzz said...
:) nalla rhymes oppikareenga! enakkum indha imposition irukku :(


வாங்க Dreamzz!!!!!

நன்றிங்க!!!!


உங்க வேலைய முடிச்சுசடீங்களா!!!

// ♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
உங்க டெம்ளேட்டில் alignment:justify ன்னு இருக்கிறதை எடுத்திட்டு, left ன்னு மாத்துங்க. ஃபயர் ஃபாக்ஸ்ல பார்த்தா.. ஜொரம் வந்துடும் போல இருக்கு எனக்கு! :)//

வாங்க தல!!!!

மாத்திட்டேங்க!!!!

//எனக்கு அம்னீசியா இருப்பதால்.. சிறுவயது நிகழ்வுகள் ஏதும் நினைவு வர மாட்டேங்கிறது. :((//

ரொம்ப வாயதாக்கி விட்டுதுல அதான்
நினைவுக்கு வராமல் இருக்கும்!!!

//பிரேம்குமார் said...
அம்மா எழில், உன்னால இவ்வளவு நகைச்சுவையோட, வெகு அழகான நடையில் எழுத முடியுமா? வாழ்த்துக்கள், செம கலக்கல் பதிவு

நான் இந்த சங்கிலிப்பதிவுக்காக யோசிச்சு வச்சிருந்த ஒரே பாட்டு 'ஆனை ஆனை' மட்டும் தான். மீதி எதுவும் நினைவு இல்லை. அதையும் நீங்களே பதிச்சு புண்ணியம் கட்டிக்கிட்டீங்க.... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

வாங்க பிரேம் அண்ணா!!!!

ம்ம் முதல் முறை முயற்சி செய்தேன்
வாழ்த்துகளுக்கு நன்றி அண்ணா!!!

அண்ணா கவலை எதுக்கு பாட்டு கிடைக்கும்... போட்டுடலாம்

//ஜி said...
:)))

பக்கத்துலேயே பெரிய பெரிய புலவர வச்சிருக்கீங்களே.... இப்பத்தான் புரியுது எப்படி இம்புட்டு பெரிய கவிதாயினியா இருக்கீங்கன்னு ;)))//

வங்க ஜி!!!!

ஆமா இந்த புலவர்கள் இல்லை என்றால் கொஞ்சம் கஷ்டம் தான்...

வருகைக்கு நன்றிங்க!!!!

//மங்களூர் சிவா said...
நெசமாவே கண்ணை கட்டுதே !!!!//

வாங்க ”சாம் ஆன்டர்சன்” சிவா!!!!

வருகைக்கு நன்றி!!!!

// ஜோதிபாரதி said...
அழகு! அருமை!!

அன்புடன்,
ஜோதிபாரதி.//

வாங்க ஜோதிபாரதி!!!!!

உங்கள் வருகையும் அழகாய் அருமையாய் இருக்கிறது

வருகைக்கு நன்றிங்க!!!!

//இராம்/Raam said...
/எனக்கு அம்னீசியா இருப்பதால்.. சிறுவயது நிகழ்வுகள் ஏதும் நினைவு வர மாட்டேங்கிறது. :((/

ஹிம்.... எனக்கும்தான்.... :)//

வாங்க இராம்!!!

உங்களுக்கும் தல மாதிரி வயதாகிவிட்டதா!!!

வருகைக்கு நன்றிங்க!!!

//வினையூக்கி said...
மிக முக்கியமானவர்களின் படங்களும் அருமை. கடந்த கால நினைவுகளை மீளச்செய்தமைக்கும் நன்றி//

வாங்க வினையூக்கி!!!

தங்க வருகைக்கும் என் நன்றிங்க!!!

//Murali said...
Hai ezhilbharathi,
i am very new one to blogs. actually i have more intrest in reading and watching. your blog make me smile and think. i find ur blog via thabushankar kavithakal community in orkut. continue writing. keep going.
misc: enakku tamila epdi comments eluthnumnnu theriyala, yenakku udhava mudiyuma? udhavikku munnamaagave nandriyai theriviththu vidukiren. Nandri.//


வாங்க முரளி!!!

தங்கள் வருகைக்கு என் நன்றிங்க!!!

//நிஜமா நல்லவன் said...
நல்ல எழுத்து நடை. நல்லா இருக்கு பதிவு. வாழ்த்துக்கள். யாழினி நல்லா போஸ் கொடுக்கிறாங்க. (முதல் தடவை உங்க பதிவுக்கு வர்றதுனால கும்மி அடிக்கலாமா கூடாதான்னு தெரியல. அதான் அமைதியா திரும்பி போறேன்)//

வாங்க நல்லவரே!!!

யாழினியிடம் சொல்லி விடுகிறேன்!!
கும்மியா பயமா இருக்குங்க!!!

வருக்கைக்கு நன்றிங்க!!!

//Anonymous said...
gmail.comவணக்கம் பாரதி,தங்களின் படைப்புகள் அனைத்தையும் படித்தேன்,நன்றாக இருந்தது, இருக்கிறது... தொடர்ந்து கிராமம் சார்ந்து எழுதுங்கள், உங்களிடம் நிறைய எதிர்பார்க்கும் பல வாசகர்களில் நானும் ஒருவன்... வாழ்த்துக்கள்.//

வங்க அனானி!!!

தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!!!!!

ஆஹா.. எழில் இதெல்லாம் அழுகுனி ஆட்டம்... இதுவும் ஒரு வகை G3 தான்.. ஒத்துக்க முடியாது... ஆனாலும் 3 ஐஸ்க்ரிம் செலவுல நல்ல பாட்டுங்க.. சத்தம் போட்டு பாடி பார்தேன்.. ஜாலியா இருந்தது.. இருங்க இன்னொரு ரவுண்டு பாடறேன்.. :)

Post a Comment