உத்திப் பிரித்தல்!!!!!  

பதித்தவர் : எழில்பாரதி in

தீபாவளியன்று எல்லா தொலைக்காட்சிகளிலும் தமிழ் தெரியாத கதாநாயகிகளின் கொஞ்சல் பேட்டிகள்!!!என்னடா இது , எல்லா தீபாவளியும் போட்டதையே போடுறானேன்னு நொந்துக்கிட்டு ஒவ்வொரு அலைவரிசையா மாத்திக்கிட்டே போனா மக்கள் தொலைக்காட்சியில் தொகுபாளினிகள் உறியடிச்சு விளையாடுறாங்க ஆகா வித்தியாசமா இருக்கேன்னு பார்க்க தொடங்கினா எல்லாமே வித்தியாசமான நிகழ்ச்சிகள்தான்!!!!

அதிலும் புலவர் நன்னன் அவர்களது நிகழ்ச்சி நெகிழ வைத்தது... 85 வயதிலும் அவர் ஏர் பிடித்து உழுதது வியப்பாக இருந்தது அடுத்து அவர் சடுகுடு விளையாடினார்அப்போ அவ‌ர் உத்திப் பிரித்திட்டு வாங்க‌ன்னு சொல்லி உத்திப் பிரித்து விளையாட‌ தொட‌ங்கினார்க‌ள்.... இந்த வ‌ய‌திலும் என்னமா‌ விளையாடுறார்...

ச‌ரி நான் இப்போ த‌லைப்புக்கு வ‌ரேன்....

உத்திப் பிரிக்கிற‌துன்னா என்ன... கிராம‌ங்க‌ளில் பிற‌ந்த‌ ப‌ல‌ருக்கு தெரிந்திருக்கும்....

இரண்டுக் குழுவாக பிரிந்து விளையாடும் எல்லா விளையாட்டிற்கும் உத்தி பிரிப்பார்கள்.இரண்டுக் குழுத்தலைவர்களும் மற்றவர்களை உத்தி பிரித்திட்டு வரச் சொல்லுவாங்க‌.இரண்டு இரண்டு பேராகப் பிரிந்து போய் அவர்களுக்குள் பிரித்துக் கொள்வார்கள்.நான் தாமரை நீ மல்லிகைன்னு பிறகு குழுத்தலைவரிடம் வந்து தாமரை வேணுமா மல்லிகை வேணுமான்னு கேட்பாங்க.குழுத்தலைவர்கள் தேர்ந்தெடுப்பார்கள் தாமரை வேண்டுமா இல்லை மல்லிகை வேண்டுமான்னு.... இதேப் போல் ஒவ்வொருவ‌ரும் பிரித்த‌தும் விளையாட‌ தொட‌ங்குவார்க‌ள்...

உத்திப் பிரிப்பது இப்போ கிரா‌ம‌ங்க‌ளில் எவ்வள‌வு மாறிவிட்ட‌து...
என் பெற்றோர்க‌ள் விளையாடிய‌க் கால‌ங்க‌ளில் அவ‌ர்க‌ள் உத்திப் பிரிக்கும் போது 1000 க‌ல்லுல‌ க‌டைசி கல்லுல‌ மாங்க‌ அடிச்ச‌வ‌ன் வேணுமா இல்ல‌ ஒரே க‌ல்லுல‌ஒரே த‌டைவையில‌ அடிச்ச‌வ‌ன் வேணுமான்னு கேட்பாங்களாம்.... இதுப்போல் வித்தியாச‌மா உத்தி பிரித்த‌து கால‌ப் போக்கில் கொஞ்ச‌ம் மாறி தாம‌ரை வேணுமா அல்லி வேணுமா, உப்பு வேணுமா ச‌ர்க்க‌ரை வேணுமான்னு அவ‌ர்க‌ளுக்கு பிடித்ததை வைத்து பிரித்துக் கொள்வார்க‌ள்...

ஒரு ஆர்வ‌த்துல‌ ஊரில் இருக்கிற‌ என் தம்பியிடம், எப்ப‌டிடா உத்தி பிரிபீங்க‌ன்னு தா‌ம‌ரை வேணுமா மல்லி வேணுமா, ராஜா வேணுமா ம‌ந்திரி வேணுமானு தானே பிரிப்பீங்க‌ன்னுகேட்டா, ஏற‌ இற‌ங்க‌ ஒரு பார்வை பார்த்துட்டு நீ எந்த‌க் கால‌த்துல‌ இருக்க‌ இதுல‌ வேற‌ சாப்ட்டுவேர் இன்ஜினியர.அக்கா இப்போயெல்லாம் நாங்க‌ விஜ‌ய் வேணுமா அஜித் வேணுமானு கேட்போம் இல்லைன்னா அசின் வேணுமா த்ரிஷா வேணுமான்னு கேட்ப்போம்ன்னு சொன்ன‌தும் ஆகா ‌ரொம்ப‌ முன்னேறிட்டாங்க‌ன்னு இருந்தா.அடுத்த‌து அவ‌ன் சொன்ன‌தைக்கேட்டு வாய் அடைத்து போய்ட்டேன் கீபோர்டு வேணுமா ம‌வுஸ் வேணுமானு கேட்பாங்க‌ளாம்...

ம்...ரொம்ப‌ முன்னேறிட்டாங்க‌ ப‌ச‌ங்க‌.......