வெற்றுத்திண்ணை  

பதித்தவர் : எழில்பாரதி in

எப்போது ஊருக்கு வந்தாலும்
வரவேற்பாய்
திண்ணையில் புன்னகைத்தபடி

இப்போது
ஊரை நினைக்கும் போதே
பெருகிடும் கண்ணீர்த்துளிக‌ளை
வ‌ர‌வேற்க காத்துக்கிடக்குது
வெற்றுத்திண்ணை

நீர்க்குமிழி!!  

பதித்தவர் : எழில்பாரதி in

திருமண
சந்தையில்
நீர்க்குமிழியாய்
உடைந்தது
பெண்ணின்
கனவு!