காதல் மழை  

பதித்தவர் : எழில்பாரதி in

உன்
முத்தங்களின்
ஈரங்களும்
அழகாய்
வரைகிறது
நம் காதலை

எனக்காக‌
கவிதை
எழுதிக்கொடு
என்று கேட்டதும்
அழகிய
கவிதைகளை
எழுதி விட்டு
சென்றன‌
உன் உதடுகள்

கடற்கரையில்
நம்மை
பார்த்ததும்
ஆசையாய்
பாதங்களை
ந‌னைக்க வந்த‌
அலைகளையும்
வெட்கம் கொள்ள செய்தன
நம் இதழ்கள்!


தொடக்கமும்
முடிவும்
அறியா
நெடுந்தூரப் பயணம்
காதல்


தூக்கத்தில்
நான் எப்போதும்
சிரித்துக் கொண்டிருப்பதாக‌
தோழிகள்
கேலி செய்கிறார்கள்
அவர்களுக்கு
எங்கேத் தெரியும்
நான் உன்னோடுதான்
சிரித்துக் கொண்டிருக்கிறேன்
என்பது

எத்தனை
முறை
சுவைத்தாலும்
திகட்டாத‌
தித்திப்பு
உன்
முத்தங்கள்


கோடையில்
எல்லோரும்
வாடிக் கொண்டிருக்க‌
நான்
ம‌ட்டும்
குளிர்ந்துக் கொண்டிருந்தேன்
உன்
முத்த மழையில்

தனித் தனித்
செடிகளாய்
வளர்நத‌
நம்மில்
ஒற்றை
மலராய்
காதல்


நம்
விழிகள்
எழுதிய‌
முதல்
கவிதை
காதல்


உன்
கெஞ்சல்களில்
தோற்று விடுகின்ற‌‌ன‌
என்
கொஞ்சல்கள்