நிழல்கள்  

பதித்தவர் : எழில்பாரதி inஅருகருகே
நடந்தாலும்
பேசிக்கொள்ள
தயங்குகிறோம் இருவரும்;
தயக்கமே இல்லாமல்
பேசிக்கொண்டு வருகின்றன‌
நம் நிழல்கள்!!!

தனிமை  

பதித்தவர் : எழில்பாரதி in

உன் புன்னகையை
சுமந்து பழகிய‌
மனதிற்கு
கடினமாகத்தான்
இருக்கிறது
உன் நினைவுகளை
சும‌ப்ப‌த‌ற்கு!தனிமையில்
இசைக்கேட்கிறேன்
காற்றில்
ப‌ட‌ப‌ட‌க்கும்
உன் க‌விதை
புத்த‌க‌ங்க‌ளில்!!

சிசு!!!  

பதித்தவர் : எழில்பாரதி in


மேலே இருக்கு படம் என்வென்று தெரியுதா..... அவர்கள் வேறு யாரும் அன்று வருங்கால இந்தியகுடிமகள்க‌ளாக இருக்க வேண்டியவர்கள்....பெண்கள் எத்தனை சாதனைகள் புரிந்தாலும், அவ்ர்களுக்கு எதிரான‌ ஒரு சில சம்பவங்கள் மட்டும்

இவ்வுலகில் மாறுவதில்லை ..


ஒரிசாவில் நயகர் மாவட்டம் நபகன்பூரில் 30 பாலீத்தீன் பைகளில் அடைக்கபட்டிருந்த பெண் குழந்தைகளின் உடல்களை காவல் துறையினர் கைப்பற்றினர், இவர்கள் கண்டெடுக்கப்பட்ட இடம் வேறு எங்கும் இல்லை மருத்துவமனை அருகில்தான்.... யாரைத்தான் குற்றம் சொல்வது படித்து பட்டம் பெற்ற மருத்துவரை யா இல்லை தன் ரத்தத்தை கொடுத்து வளர்த்த‌ சிசுவை கொல்ல மனம் வந்த தாயை யா...


பெண்க‌ள் எவ்வள‌வு முன்னேறினாலும் அடிம‌ட்ட‌த்தில் பெண் சிசுக் கொலைக‌ள் ம‌ட்டும் அழிவ‌தில்லை... பெண்க‌ளுக்கு 33% ச‌த‌வித‌ம் பெற்று விட்டோம் என்று ம‌கிழ்வ‌தைவிட‌ பெண குழ‌ந்தைகளின் இற‌ப்பு ச‌த‌வித்தை குறைத்துவிட்டோம் என்று ம‌கிழும் நாள் நோக்கி ப‌ய‌ணிப்போம்!!!!ந‌ன்றி: தின‌க‌ர‌ன் நாளித‌ழ்