பயணம்...!!!!  

பதித்தவர் : எழில்பாரதி in


சென்னையில் வசிக்கும் எல்லோருக்கும் பயணம் செய்ய ஏற்ற ஒரு உற்றத் தோழன்.... ஆட்டோ!

ஆட்டோ என்றதும் பலருக்கும் சூடு போட்ட மீட்டர்கள் தான் நியாபகம் வரும்....அப்படி இருந்தாலும் சில சமயங்களில் நம் பயணிக்கும் ஆட்டோ பயண்ங்களை நம்மால் மறக்க முடியாத சம்பவமாய் மனதில் பதிந்து விடும்...அப்படி பதிந்த சில பயணங்களைத் தான் உங்களுடன் அசைப்போட்டு உங்களையும் பயணிக்க வைக்கப் போகிறேன்...


பெரும்பாலும் நாம் ஆட்டோக்களில் பயணம் செய்யும் பொழுது பல வித்தியாசமான‌ ஓட்டுனர்களை இல்லை இல்லை மனிதர்களை.... ச‌ந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்!!!

நாம் ஆட்டோக்க‌ளில் ஏறும் முன் அவ‌ர்க‌ள் பேச்சிலேயே ஒர் அளவு எடைப் போட்டுவிட‌லாம் அவ‌ர்க‌ளை....போகும் இட‌ம் சொன்ன‌தும் ந‌ம‌க்கும் அவ‌ருக்கும் நிக‌ழும் முத‌ல் உரையாட‌ல் இதுவாக‌தான் இருக்கும்


"எவ்வோளோ கொடுப்பிங்க‌"?

இருவ‌ருக்கும் ஏற்ற‌வாறு நாம் ஒரு தொகை சொன்னால் இனிதாகப் ப‌ய‌ண‌ம் தொட‌ங்கும்... அப்ப‌டி இல்லை என்றால் தொகையில் சில‌ மாற்ற‌ங்க‌ளோடு தொட‌ரும்... அப்ப‌டி இருவ‌ருக்கும் சரிப்ப‌ட‌வில்லை என்றால் அத்தோடு முடிந்து விடும்.....

சில‌ ஓட்டுன‌ர்க‌ள் இட‌த்தை சொன்ன‌தும் எங்கோ சுற்றுப்ப‌ய‌ண‌ம் செய்ய‌ப் போகும் அள‌வு தொகையை கேட்ப்பார்க‌ள் பக்கத்தில் ஒரு இடம் சொன்னால்,பாண்டிச்சேரி போவதற்க்கான தொகையை சொல்வார்கள் சிலர் .அப்போ நமக்கு வரும் பாருங்கள் கோபம். அப்படியே கையில இருக்கும் பேக்'கால் அவரை "ஏண்டா இப்டி பகல்கொள்ளை அடிக்கறிங்க?" ன்னு நாலு சாத்து சாத்தனும்ன்னு தோனும். ஒன்றுமே சொல்லாம‌ல் அடுத்த‌ ஆட்டோவை தேட‌த் தொடங்கி விடுவோம்...சில‌ர் இருவ‌ருக்கும் ஏற்ற ப‌ய‌ண‌த் தொகையை ச‌ரியாக‌ கேட்பார்க‌ள் அப்போதே ந‌ம‌க்கு அந்த‌ ஓட்டுன‌ர் மீது ஒரு ம‌திப்பு வ‌ந்துவிடும்...அப்ப‌டி தொட‌ங்கும் சில‌ ப‌யண‌ங்க‌ள் மகிழ்ச்சியாய் அமையும்
சில‌ ஓட்டுன‌ர்க‌ள் அர‌சிய‌ல் தொட‌ங்கி, குடும்ப‌ விச‌ய‌ங்க‌ளையும் ப‌கிர்ந்து கொள்வார்க‌ள் சில‌ பேச்சுக‌ள் ந‌ம்மை மிக‌வும் க‌வ‌ரும்....

ஒரு ச‌ம‌ய‌ம் அலுவ‌ல‌க‌த்தில் இருந்து வீடு வ‌ர‌ நானும் என் தோழியும் ஆட்டோவில் போக‌லாம் என்று எங்க‌ள் ப‌ய‌ண‌த்தை தொட‌ங்கினோம்...

நாங்க‌ள் பேசிக்கொண்டே வ‌ர‌ எங்க‌ள் உரையாட‌லில் அவ‌ரும் க‌ல‌ந்துக் கொண்டார்.... அப்ப‌டி பேசிக்கொள்ளும் பொழுது...க‌ண‌வ‌ன் ம‌னைவிக்குள் ஒரு புரிதலில் இருந்துவிட்டால் பிர‌ச்ச‌னையே இல்லை...

என‌க்கு திரும‌ண‌ம் முடிந்து 25 வ‌ருட‌ங்க‌ள் ஆக‌ப் போகுது என் ம‌னைவிக்கும் என‌க்கும் க‌ருத்து வேறுபாடு வ‌ந்த‌து இல்லை இருவ‌ரும் ந‌ல்ல‌ புரித‌த‌லில் இருக்கிறோம் என்று அவ‌ர் சொன்னதைக் கேட்டு...

என‌க்கும் என் தோழிக்கும் ஆச்சர்யம் அவ‌ர‌து பேச்சில் ப‌யண நேரமே தெரிய‌வில்லை....

சில‌ ஓட்டுன‌ர்க‌ள் அர‌சிய‌லை அப்ப‌டி பேசுவார்க‌ள்.... சில‌ர் ச‌ரியாக‌வும், சில‌ர் புரியாம‌லும் பேசிக் கொண்டு வ‌ருவார்க‌ள்..அப்படி அவர்கள் பேசும்போது அவர்கள் தற்போது ஆளும் அரசு எப்படி செயல்படுகிறது என்று சற்று சரியாகவே யூகிக்க முடியும்!
காலை அலுவ‌ல‌க‌த்திற்கு தாம‌த‌ம் ஆன‌தால் ஆட்டோவில் போக‌லாம் என்று ஆட்டோ கூப்பிட்டு செல்லும் இட‌ம் சொன்ன‌தும் நியாயமான தொகை கேட்ட‌தால் ஒன்றுமே சொல்லாமல் என் பய‌ணத்தை தொட‌ங்கினேன்... சிறிது நேர‌த்தில் ந‌ன்றாக‌ பேசினார். அப்ப‌டியே எங்க‌ள் உரையாட‌ல் தொட‌ரும் போது...
உங்க‌ளுக்கு ஒரு நாள் எவ்வ‌ள‌வு கிடைக்கும் என்றுக் கேட்டேன்..நல்ல சவாரி கிடைத்தால்,சில நாட்களில் 200லிருந்து 500 வரை கூட கிடைக்கும்.சில நாட்களில் சரியான சவாரியே கிடைக்காமல் ,பெட்ரோல் செலவு வைப்பதும் உண்டு. என்றார்
ஆட்டோ வாட‌கை எவ்வ‌ள‌வு என்றால் 1150 ரூபாய் என்றார் மாதா மாதமா?என்றால் இல்லை வாரா வாரம் என்றார்!!!
ஒரு நாளைக்கு 200 ரூபாய் கிடைத்தால் அவ‌ருக்கு வார‌ம் 1400 கிடைக்கும் அதில் 250 சேமிக்க‌ முடியும் அதிலும் எரிப்பொருள் செலவெல்லாம் போக‌ 150 மிஞ்சும் என்றாலும் மாத‌ வருமானமாய் மிக‌ குறைந்த‌ வ‌ருமான‌மே அவ‌ர்க‌ளுக்கு கிடைகிற‌து..அதில் அவ‌ர்க‌ள் குடும்ப‌த்தையும் பார்த்துக் கொண்டு பிள்ளைக‌ளையும் ப‌டிக்க‌ வைப்ப‌து என்பது எவ்வ‌ள‌வு கடினம் என்று யோசித்தால் க‌ஷ்ட‌ம் தான்!!!!
சில ஓட்டுனர்கள் தவறுகள் செய்வதால் ப‌ல‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ளை நாம் க‌வனிக்க‌ த‌வ‌றிவிடுகிறோம்....
ஆட்டோவில் ப‌ண‌த்தை ம‌ற‌தியாக‌ விட்டுச் சென்றாலும் அதை க‌வ‌ன‌மாக‌ காவ‌ல‌ர‌து துணையுட‌ன் உரிய‌வ‌ரிட‌ம் சேர்க்கும் ப‌ல‌ ஓட்டுன‌ர்களை பற்றி நாம் கேள்விப் ப‌ட்டிருக்கிறோம்!!!!
எப்போழுதும் ந‌ல்ல‌வ‌ற்றை எடுத்துக் கொண்டு தேவையில்லாத விச‌ய‌ங்க‌ளை த‌விர்த்துப் பார்த்தால் ஆட்டோ ப‌ய‌ண‌ம் ம‌ட்டும‌ல்ல‌ வாழ்க்கைப் ப‌ய‌ண‌த்திலும் ம‌கிழ்ச்சியாக‌ ப‌ய‌ணிக்க‌லாம்!!!!!

காதலாய் .... !!!!!  

பதித்தவர் : எழில்பாரதி in


நம் காதல்
பிறந்த நாளை
கொண்டாட‌
உனக்காக‌
பரிசுப்பொருளை
தேடித் தேடி
வாங்கி வர‌
நீயோ
தேடல்களே
இல்லாமல்
எடுத்து
வருகிறாய்
உன் இதழ்களில்!

தின‌மும்
க‌ன‌வில்
பார்த்துக் கொள்வோம்
என்ற‌
ந‌ம்பிகையில் தான்
முடிவ‌டைகிற‌து
ந‌ம்
ச‌ந்திப்புக‌ள்!!


நாம்
ச‌ந்தித்த‌
இட‌ங்க‌ள்
எல்லாம்
பூஞ்சோலையாய்
பூத்துக் குலுங்குகின்றன
நம்
முத்த சார‌ல்க‌ளில்...முரட்டுத் தனமான‌
அணைப்புகளையும்
மென்மையான‌
முத்தங்களையும்
ஒரு சேர‌
வைத்திருக்கும்
என்
காதல் ஹிட்லர்
நீ!!!


முத்த‌ங்களின்
ஒத்திகை
அழகாய்
நடந்தேறியது
நம்
தலையணை
சண்டையில்!!

மக்கள் தொலைக்காட்சியில் ரசித்த குறும்படம்  

பதித்தவர் : எழில்பாரதி in

வாரநாட்களில் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்த்து விடலாம் என்றாலும்...ஞாயிற்றுக் கிழமைகளில் அது கொஞ்ச‌ம் சிரமம்தான்.. பகலில் அதிக நேரம் தூங்கிவிட்டு... இணையத்தில் நண்பர்களோடு அரட்டை அடித்து விட்டு... மதியம் உணவு அருந்தியதும் மீண்டும் ஒரு தூக்கம் போட்டு சரி கொஞ்சம் நேரம் தொலைக்காட்சியை பார்ப்போமேன்னு போட்டால் பார்த்து பார்த்து அலுத்துப் போன படங்களே திரும்ப‌ ஓடிக் கொண்டிருக்க...

பாடல்கள் கேட்கலாமேன்னு அலைவரிசையை மாற்றினால் அவர்கள் பேசியே கொல்கிறார்கள்

சரி மக்கள் தொலைக்காட்சியில் வித்தியாசமாக எதும் இருக்கும் பார்கலாமேன்னுவைத்ததும் வினுசக்கரவர்த்தியும் மெளனிகாவும் காட்சியில் இருந்தார்கள்..சரி என்னவாக இருக்கும் என்று பார்க்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் அது ஒரு குறும்படம் என்று விளங்கியது... ச்சே கொஞ்ச‌ம் முன்ன‌மே வைத்திருந்தால் பெயரைப்பார்த்திருக்கலாம் ச‌ரி போக‌ட்டும் எப்ப‌டிதான் இருக்கு என்று பார்ப்போமேஎன்று க‌தையில் ஐக்கிய‌ம் ஆனேன்... நான் பார்க‌த தொட‌ங்கிய‌தில் இருந்து உங்க‌ளிட‌ம் ப‌கிர்கிர்ந்துக் கொள்கிறேன்!!

கணவனுக்கு கஞ்சியை கொடுத்துவிட்டு காய்கறி சுமப்பதற்காக கொத்தவரஞ்சாவடிசெல்கிறேன் நீ பத்திரமா இரும்மான்னு சொல்ல இல்லைங்க நானும் உங்க கூடவரேன் கூட்டிட்டு போங்கன்னு கேட்க‌ சரி வா போகலாம்ன்னு இருவரும் வெளியே வருகிறார்க‌ள்..

"நீ உக்காருயா நான் இழுக்குறேன்னு"

மனைவி கணவனை சுமை சுமக்கும் வண்டியில் உட்காரச்சொல்லி இழுக்கிறாள் உன்னால் முடியாது நான் இழுக்குறேன் நீ வநது உட்காருன்னு சொல்லும் கணவனைஇல்ல நான் இழுப்பேன் நீ இருய்யான்னு சொல்லி இழுத்துக் கொண்டே நடக்கிறார் கணவன் அசந்துப் போய் வண்டியில் படுத்து உறங்கிவிடுகிறார்..

இதுவரை இழுத்து பழக்கமிலாததால் சிரமப்பட்டு இழுக்கிறார் மிக சோர்வுடன் வேர்வையில் நனைந்து இழுத்துக் கொண்டு சேரும் இடம் வந்ததும் வண்டியை நிறுத்துகிறாள்...

வண்டி நின்றதும் தூக்கம் கலைந்து விழிக்கும் கணவன்

"என்ன‌ப் புள்ள நான் தான் அசதில‌ தூங்கிட்டேன் என்ன எழுப்பிற்கலாம்ல"
அச‌தில‌ நீ ந‌ல்லா தூங்கிட்டயா அதான் எழுப்ப‌ வேணாம்ன்னு விட்டுடேன்"
என்று ம‌னைவி செல்ல‌ காட்சி ந‌க‌ர்ந்த‌து...
வ‌ந்து உட்காரு பிள்ள‌ நான் உன‌க்கு சாப்பாடு வாங்கிட்டு வ‌ரேன்னு எதிர்ல‌ இருக்கும் இட்லி க‌டைக்கு சென்று இட்லி தோசை வாங்கி வ‌ந்து

நீ சாப்பிடு பிள்ள‌ நான் மூட்டைக‌ளை எடுத்துட்டு வ‌ந்துடுறேன்னு முட்டையை எடுக்க‌ போகிறார்..

மூட்டைக‌ளையெல்லாம் அடுக்கி வைத்துவிட்டு ம‌னைவி சாப்பிட்டு முடித்த‌துத‌ட்டையும் ப‌ண‌த்தையும் கொடுத்து விட்டு வந்தவ‌ர் ம‌னைவியிட‌ம் பீடா கொடுத்து போட்டுக்க புள்ள!!!

ச‌ரிய்யா நான் அப்படியே ந‌ட‌க்குறேன் நீ வ‌ண்டியை இழுத்துகிட்டு வான்னு சொல்ல‌..

நீ வ‌ண்டில‌ வ‌ந்து உட்காரு புள்ள நான் இழுக்குறேன் வான்னு ம‌னைவியைவ‌ண்டியில் உட்கார‌வைத்து இழுக்க‌ தொட‌ங்குகிறார்...
க‌ளைத்துப் போய் அவ‌ர் இழுத்துக் கொண்டு ந‌ட‌க்க‌ வ‌ழியில் அவ‌ர் ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் வ‌ருகிறார்

"என்ன‌ப்பா இது இருக்கிற‌ ப‌ளுப் போதாதுன்னு உன் பொஞ்சாதியையும் ப‌டுக்க‌வைச்சி இழுக்குறியேன்னு" கேட்க‌
கால‌ம் முழுக்க‌ ந‌ம்மை சும‌க்கிற வ‌ர‌ங்க‌ளை நாம‌ ப‌ளுவாய் நினைக்க‌கூடாதுன்னு சொல்லிவிட்டு வ‌ண்டியை மீண்டும் இழுக்க‌ தொட‌ங்குகிறார்....

அத்துட‌ன் ப‌ட‌ம் நிறைவ‌டைகிற‌து...

20 நிமிட‌ங்க‌ளில் க‌ண‌வ‌ண் ம‌னைவி உற‌வை மிக் அழ‌காக விள‌க்கியிருந்தார்க‌ள்...

க‌டைசிவ‌ரை ப‌ட‌ம் பெய‌ர் தெரிய‌வில்லை என்றாலும் வாழ்க்கையை மிக‌ அழகாக‌ விள‌க்கிய‌ பெய‌ர் தெரியாத‌ இய‌க்குன‌ருக்கும் ஒளிப்பரப்பு செய்த மக்கள் தொலைக்காட்சிக்கும் ம‌னமார்ந்த‌ வாழ்த்துக‌ள்!!!!

காத்திருப்பு  

பதித்தவர் : எழில்பாரதி in

சுமந்தவரும்
கன‌ப்பதனால்
பெருகிக் கொண்டே
போகின்றன‌
முதியோர் இல்ல‌ங்க‌ள்!

ந‌டைப்ப‌ழ‌க‌
விர‌ல் கொடுத்த‌
தாய்க்கு
இன்று
நிழ‌ல்
கொடுக்க‌
ம‌ன‌மில்லை
பிள்ளைக‌ளுக்கு!


வாழ்நாளில்
பாதியை
பிள்ளைகளுக்கு
கொடுத்துவிட்டு
இப்பொழுது
காத்துக்கொண்டிருக்கின்றன‌
பெற்றோர்
இத‌ய‌ங்க‌ள்
பிள்ளைகளுக்காக‌!!!!

மழைத்துளியில் ஒரு மழலை  

பதித்தவர் : எழில்பாரதி in

காலையில சீக்கரமே எழுந்து அலுவலகத்திற்கு அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தான் ரகு....

"மாலா சாப்பாடு தயாரா"

என்று குரல் கொடுத்துக் கொண்டே சாப்பாட்டு மேஜைக்கு சென்றான்...


ரெடிங்க.... என்ன இன்னைக்கு சீக்கரம் கிளம்பிட்டீங்க??....


கொஞ்சம் வேலை இருக்குமா அதான்...

அப்போ இன்னைக்கு நான்தான் மலர‌ பள்ளில விடனுமா.... அப்போ சீக்கரம் வேலையெல்லாம் முடிக்கனும்... மழையா வேற‌ இருக்கு....

இன்னைக்கு ஒரு நாள்டா நாளையில இருந்து நான் பார்த்துக்கிறேன்...

சரி சரி நான் பார்த்துக்கிறேன் நீங்க நல்லா சாப்பிடுங்க...

மலர் எழுந்தாச்சா..... மாலா!!!!

இல்லைங்க நல்லா தூங்கிட்டு இருக்கா!!!

சரி தூங்கட்டும் விடு....

"அப்பா அப்பா"

மலர் குரல் கொடுத்துக்கிட்டே ர‌குவிட‌ம் வ‌ர‌!!!

மலர் குட்டி வாடா வா.....

அப்பா கிளம்பிட்டீங்களா???

ஆமாம்டா அப்பாக்கு வேலை இருக்கு......

அப்போ நான் எப்படி ஸ்கூளுக்கு போவேன்???

இன்னைக்கு அம்மா கூட போடா...நாளைக்கு நான் கூட்டிட்டு போறேன்,,,

அய்யோ அப்பா!! "அம்மா போர்ப்பா நடந்தே கூட்டிட்டுப் போவாங்க‌" நீங்க ஜாலியா வண்டில கூட்டிட்டுப்போவிங்க...

ஏன்டீ நான் உன‌க்கு போரா???... வாய் ஜாஸ்த்தி ஆகிடுச்சி உனக்கு..

என‌ மாலா செல்ல‌மாய் க‌ண்டிக்க‌ ...

பாருங்க‌ப்பா அம்மாவை மிர‌ட்டுராங்க‌....

மல‌ர் சிணுங்கிய‌தும்..

என் செல்ல‌த்த திட்டாதே... இன்னைக்கு ம‌ல‌ர‌ ஆட்டோல‌ கூட்டிட்டு போ ச‌ரியா,...

என்ன ம‌ல‌ர் குட்டி ஓக்கே தானே உன‌க்கு...

ம்ம் ச‌ரிப்பா அட்ஜ‌ஸ்ட் பண்ணிக்குறேன்...

செல்லக்குட்டிடா நீ.......

அப்பா இன்னைக்கு டீவில‌ வ‌ருவீங்க‌ளா???..

ம்ம் வ‌ருவேன்டா, ம‌ழைக்கால‌ம்ல‌... வானிலை அறிக்கை சொல்ல‌ கூப்பிடுவாங்க‌....

அப்போ அப்பா இன்னும் இர‌ண்டு நாளைக்கு ந‌ல்ல‌ ம‌ழைபெய்யும்ன்னு சொல்லுங்க‌ப்பா...

ஏன்டாக் குட்டி உன‌க்கு ம‌ழைனா அவ‌ளோ பிடிக்குமா...

இல்ல‌ப்பா என் பிரண்ட் தீபா வீட்ல‌ ம‌ழை பெய்தா த‌ண்ணீ ஒழுகுதாம்...அவ‌ங்க‌ அப்பா ச‌ரி செய்ய இர‌ண்டு நாள் ஆகும்ன்னு சொன்னாங்கலாம் அதான் நீங்க‌ ம‌ழை வரும்ன்னு டீவில சொன்னா அன்னைக்கு ம‌ழையே வ‌ராதுல

அதான் அப்ப‌டி சொல்ல‌ச்சொன்னேன்.... ம‌ற‌க்காம‌ சொல்லிடுங்க...

ம‌ல‌ர் சொன்னதைக்கேட்டு ரகுவிற்கு என்ன‌ சொல்வதென்று தெரியாமல் வாய் அடைத்துப் போய் நின்றான்!!!.

(கவிதை மட்டும் எழுதி எல்லோரையும் படுத்தினது போதும் இனி கதையும் எழுதிப் உங்களை படுத்தலாம்ன்னு என் முதல் கதையை இங்கு பதித்திருக்கிறேன்...கும்மிடாதீங்க!!!!)