சிசு!!!  

பதித்தவர் : எழில்பாரதி in


மேலே இருக்கு படம் என்வென்று தெரியுதா..... அவர்கள் வேறு யாரும் அன்று வருங்கால இந்தியகுடிமகள்க‌ளாக இருக்க வேண்டியவர்கள்....பெண்கள் எத்தனை சாதனைகள் புரிந்தாலும், அவ்ர்களுக்கு எதிரான‌ ஒரு சில சம்பவங்கள் மட்டும்

இவ்வுலகில் மாறுவதில்லை ..


ஒரிசாவில் நயகர் மாவட்டம் நபகன்பூரில் 30 பாலீத்தீன் பைகளில் அடைக்கபட்டிருந்த பெண் குழந்தைகளின் உடல்களை காவல் துறையினர் கைப்பற்றினர், இவர்கள் கண்டெடுக்கப்பட்ட இடம் வேறு எங்கும் இல்லை மருத்துவமனை அருகில்தான்.... யாரைத்தான் குற்றம் சொல்வது படித்து பட்டம் பெற்ற மருத்துவரை யா இல்லை தன் ரத்தத்தை கொடுத்து வளர்த்த‌ சிசுவை கொல்ல மனம் வந்த தாயை யா...


பெண்க‌ள் எவ்வள‌வு முன்னேறினாலும் அடிம‌ட்ட‌த்தில் பெண் சிசுக் கொலைக‌ள் ம‌ட்டும் அழிவ‌தில்லை... பெண்க‌ளுக்கு 33% ச‌த‌வித‌ம் பெற்று விட்டோம் என்று ம‌கிழ்வ‌தைவிட‌ பெண குழ‌ந்தைகளின் இற‌ப்பு ச‌த‌வித்தை குறைத்துவிட்டோம் என்று ம‌கிழும் நாள் நோக்கி ப‌ய‌ணிப்போம்!!!!ந‌ன்றி: தின‌க‌ர‌ன் நாளித‌ழ்

This entry was posted on Thursday, August 09, 2007 and is filed under . You can leave a response and follow any responses to this entry through the Subscribe to: Post Comments (Atom) .

6 மழைத்துளிகள்

அன்புச் சகோதரி, மிகவும் அருமையான படைப்பு. நல்ல கருத்து. இந்தக் கணிப்பொறியுகத்தில் பெண்கள் படைக்கும் சாதனை ஒரு புறம் இருந்தாலும், இப்படி பெண் சிசுக் கொலையும் நிகழ்வது மிகவும் வருந்தக் கூடிய விஷயம். பெண் சிசுவைக் கொல்வதால் வருங்காலத்தில் மிகக் கொடிய விளைவுகள் உண்டாகும் என்று அறிஞர்கள் கூறியுள்ளனர். பெண் சிசுவைக் கொல்வதால் சமூதாயத்திலுள்ள‌ ஆண் பெண் விகிதம் மாறுபட்டு, "Biological Male - Female ratio Imbalance" எனப்படும் கொடிய விளைவு உண்டாகும். இதனால் பல பாலியல் குற்றங்கள் அதிகரிக்கும். எனவே படித்தவர்களாகிய நாம் தான் மக்களை உணர்த்தி இவை குறித்து ஒரு விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்...

கலங்க வைக்கும் படம்

:( என்று கிடைக்கும் பெண் சிசுவிற்கு சுவாசம்...

குழந்தையில்லாமல் தவிக்கும் பல்லாயிரக்கணக்கானோர் வசிக்கும் இந்நாட்டில் இப்படி ஒரு கோடூரமும் நடக்கிறது.

மனம் கனத்துப் போனது எழில் :(

படத்தை பார்த்தாலே மனம் பதறுகிறது... :(

குப்பையைபோல இப்படி வீசியெறிந்தவர்கள் எல்லாம்....???

Post a Comment