குறும்புகள்+(*)வெட்கங்கள்=காதல்  

பதித்தவர் : எழில்பாரதி in

உன் குறும்புகளை
என்னிடம்
கொடுத்துவிட்டு
என் வெட்கங்களை
அள்ளிச் செல்கிறாய்
இதை வைத்து
என்னடா
பண்ண‌ப்போறன்னு
கேட்டா
இவற்றை வைத்துதான்
என்
நாளைய குறும்புகள்
என்று
சிரித்து விட்டு
போகிறாய்!!!
உனக்கான
என் வெட்கங்களும்
என‌க்கான‌
உன் குறும்புகளையும்
கொண்டு வ‌ள‌ர்கிற‌து
ந‌ம‌க்கான‌ காத‌ல்!!!


கூட்டினாலும்
பெருக்கினாலும்
ஒரே விடை
கிடைப்ப‌து க‌ணித‌த்தில்
ம‌ட்டும் அல்ல‌
காத‌லிலும்தான்
குறும்புக‌ளையும்
வெட்க‌ங்க‌ளையும்
கூட்டினாலும்
பெருக்கினாலும்
கிடைக்கும்
ஓரே விடை
காத‌ல்!!!நான்
உனக்காகவே
உன்னிடம் ம‌ட்டுமே
செல‌வு செய்வ‌து;
என்
வெட்க‌ங்க‌ளை!உன்
குறும்புகளும்
தொடரும்
எனது
வெட்கங்களும்
கொணர்கின்றன
நமக்கான
காதல்
மழையை!


This entry was posted on Friday, November 02, 2007 and is filed under . You can leave a response and follow any responses to this entry through the Subscribe to: Post Comments (Atom) .

15 மழைத்துளிகள்

//நான் உனக்காகவேஉன்னிடம் ம‌ட்டுமேசெல‌வு செய்வ‌து;என் வெட்க‌ங்க‌ளை!//

எழில் வாவ் :))
மிகவும் ரசித்தேன் :))

வெட்கம் மழையாகப் பொழிகிறதே !! :)))

\\உனக்கான என் வெட்கங்களும்என‌க்கான‌ உன் குறும்புகளையுகம் கொண்டு வ‌ள‌ர்கிற‌து ந‌ம‌க்கான‌ காத‌ல்!!!\\

வெட்கமும்,குறும்பும் வளர்க்கும் காதல் அருமை!
ரசித்தேன் உங்கள் கவிதையை.

நன்றி நவின்.....

வருகைக்கும் பாராட்டுகளுக்கும்
நன்றிகள் திவ்யா

/உனக்கான என் வெட்கங்களும்என‌க்கான‌ உன் குறும்புகளையுகம் கொண்டு வ‌ள‌ர்கிற‌து ந‌ம‌க்கான‌ காத‌ல்!!!/

(கவிதைகள்) மேலும் வளர வாழ்த்துகள்! :)

முதல்ல பேர் பற்றி ....கண்ணாடி மழை....
ரொம்பப் பிடித்தது எனக்கு.
கவிதை குறும்பு மழையையும்,வெட்க மழையையும்,காஅதல் மழையையும் பொழிந்தது!!
அன்புடன் அருணா

இங்கே நம் 'நவீன்' போல் இன்னொறு கவிஞரும் இருப்பதை நான் இத்தனை நாள் அறியாது போனேனே!!

//நான் உனக்காகவேஉன்னிடம் ம‌ட்டுமேசெல‌வு செய்வ‌து;என் வெட்க‌ங்க‌ளை!//

அட :))

//அருட்பெருங்கோ said...
உனக்கான என் வெட்கங்களும்என‌க்கான‌ உன் குறும்புகளையுகம் கொண்டு வ‌ள‌ர்கிற‌து ந‌ம‌க்கான‌ காத‌ல்!!!/

(கவிதைகள்) மேலும் வளர வாழ்த்துகள்! :)//

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி அருள்....

//aruna said...
முதல்ல பேர் பற்றி ....கண்ணாடி மழை....
ரொம்பப் பிடித்தது எனக்கு.
கவிதை குறும்பு மழையையும்,வெட்க மழையையும்,காதல் மழையையும் பொழிந்தது!!
அன்புடன் அருணா//


வாங்க‌ அருணா பெய‌ர் உங்க‌ளுக்கு பிடித்த‌தில் மிக்க‌ மகிழ்ச்சி....

வாழ்த்துக‌ளுக்கு மிக்க‌ ந‌ன்றி...

//இங்கே நம் 'நவீன்' போல் இன்னொறு கவிஞரும் இருப்பதை நான் இத்தனை நாள் அறியாது போனேனே!!

//நான் உனக்காகவேஉன்னிடம் ம‌ட்டுமேசெல‌வு செய்வ‌து;என் வெட்க‌ங்க‌ளை!//

அட :))
//
வாங்க சதிஷ்....

நவின் போலவா... அவர் எங்கே நான் எங்கே....

நான் இபொழுதுதான் கவிதை கடலில் நீந்த கற்றுக்கொள்கிறேன்...

அவர் கவிதை கடலில் மூழ்கி முத்தெடுக்கிறார்....

இருந்தாலும் உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி...

காதலிகளின் வெட்கம்
வெட்கமில்லாமல்
வெட்கப்படுகிறதை நான்
ரசிக்கிறேன்

//என் சுரேஷ் said...
காதலிகளின் வெட்கம்
வெட்கமில்லாமல்
வெட்கப்படுகிறதை நான்
ரசிக்கிறேன்
//


வாங்க என் சுரேஷ்!!

உங்கள் ரசனையான வருகைக்கு நன்றி!!!

கலக்கலான கவிதை வரிகள் :))

வாழ்த்துக்கள் எழில்

///நான்
உனக்காகவே
உன்னிடம் ம‌ட்டுமே
செல‌வு செய்வ‌து;
என்
வெட்க‌ங்க‌ளை!////


ரியலி சூப்பர்ப்!!!!

//
நான்
உனக்காகவே
உன்னிடம் ம‌ட்டுமே
செல‌வு செய்வ‌து;
என்
வெட்க‌ங்க‌ளை!
//
Migavum Arumai Ezhil.

Post a Comment