காதல் மழை  

பதித்தவர் : எழில்பாரதி in

உன்
முத்தங்களின்
ஈரங்களும்
அழகாய்
வரைகிறது
நம் காதலை

எனக்காக‌
கவிதை
எழுதிக்கொடு
என்று கேட்டதும்
அழகிய
கவிதைகளை
எழுதி விட்டு
சென்றன‌
உன் உதடுகள்

கடற்கரையில்
நம்மை
பார்த்ததும்
ஆசையாய்
பாதங்களை
ந‌னைக்க வந்த‌
அலைகளையும்
வெட்கம் கொள்ள செய்தன
நம் இதழ்கள்!


தொடக்கமும்
முடிவும்
அறியா
நெடுந்தூரப் பயணம்
காதல்


தூக்கத்தில்
நான் எப்போதும்
சிரித்துக் கொண்டிருப்பதாக‌
தோழிகள்
கேலி செய்கிறார்கள்
அவர்களுக்கு
எங்கேத் தெரியும்
நான் உன்னோடுதான்
சிரித்துக் கொண்டிருக்கிறேன்
என்பது

எத்தனை
முறை
சுவைத்தாலும்
திகட்டாத‌
தித்திப்பு
உன்
முத்தங்கள்


கோடையில்
எல்லோரும்
வாடிக் கொண்டிருக்க‌
நான்
ம‌ட்டும்
குளிர்ந்துக் கொண்டிருந்தேன்
உன்
முத்த மழையில்

தனித் தனித்
செடிகளாய்
வளர்நத‌
நம்மில்
ஒற்றை
மலராய்
காதல்


நம்
விழிகள்
எழுதிய‌
முதல்
கவிதை
காதல்


உன்
கெஞ்சல்களில்
தோற்று விடுகின்ற‌‌ன‌
என்
கொஞ்சல்கள்

This entry was posted on Thursday, February 14, 2008 and is filed under . You can leave a response and follow any responses to this entry through the Subscribe to: Post Comments (Atom) .

37 மழைத்துளிகள்

அழகான் கவிதைகள் + அழகான படங்கள். வாழ்த்துக்கள் எழில் :)

அருமையான வரிகள்

"தனித் தனித்
செடிகளாய்
வளர்நத‌
நம்மில்
ஒற்றை
மலராய்
காதல் "

இந்த கவிதையை வெகுவாக ரசித்தேன். வாழ்த்துக்கள்.

/ தனித் தனித்
செடிகளாய்
வளர்நத‌
நம்மில்
ஒற்றை
மலராய்
காதல்/
இது அழகு!!!! கவிதைகள் தொடரட்டும்…

//தொடக்கமும்
முடிவும்
அறியா
நெடுந்தூரப் பயணம்
காதல்//

வெகு அருமையாக இருக்கிறது..எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இது ... உங்கள் கவிதை பயணம் சிறப்பாக தொடர எனது வாழ்த்துக்கள் ..
//Tharun

கண்ணாடி மழையில் காதல்மழை !!! அருமை... ரசித்தேன்.. :))

நன்றி பிரேம் அண்ணா

வாங்க
ஸ்ரீ
வாழ்த்துகளுக்கு நன்றிகள்!!!!

நன்றி
அருள்!!!!

கண்டிப்பாக தொடருகிறேன்!!!!

வாழ்த்துகளுக்கு
நன்றி
தருண்......

வாங்க நவின்
பாராட்டுகளுக்கு
நன்றி!!!

அழகான வரிகள்...
அருமையான புகைப் படங்கள்..

கவிதையை படிக்கும் அனைவரும் காதலிக்க ஆசைபடுவார்கள்

வாழ்த்துக்கள் பாரதி.

முத்தக் கவிதைகள் மொத்தமும் அழகு.

புகைபடங்களின் தேர்வும் அருமை.

நிறைய எழுதவும்...

//கடற்கரையில்
நம்மை
பார்த்ததும்
ஆசையாய்
பாதங்களை
ந‌னைக்க வந்த‌
அலைகளையும்
வெட்கம் கொள்ள செய்தன
நம் இதழ்கள்//

அருமை

நன்றி கார்திக்!!!!!

வாங்க பொன்சுதா
வ‌ருகைக்கும் வாழ்த்துகளுக்கும்
மிக்க நன்றி
கண்டிப்பாக தொடருகிறேன்!!!!

நன்றி இலக்குவண் !!!!!

அழகான காதல் கவிதை......அருமையான படங்களுடன்!

வாழ்த்துக்கள் எழில்!!!

\"தனித் தனித்
செடிகளாய்
வளர்நத‌
நம்மில்
ஒற்றை
மலராய்
காதல் "\

இந்த வரிகள் சூப்பர்!!!

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்
நன்றி திவ்யா!!!!!

ஆஹா அற்புதம் :)
ரொம்ப அழகான கவிதையும்,படங்களும் :)
ரொம்பவே இரசித்து படிச்சேன்

//தூக்கத்தில் நான் எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பதாக‌ தோழிகள் கேலி செய்கிறார்கள் அவர்களுக்கு எங்கேத் தெரியும் நான் உன்னோடுதான் சிரித்துக் கொண்டிருக்கிறேன் என்பது//

ஆஹா :P
இதுல இப்படி ஒரு விஷயம் இருக்கா :)

துர்கா said...
//தூக்கத்தில் நான் எப்போதும்
சிரித்துக் கொண்டிருப்பதாக‌ தோழிகள் கேலி செய்கிறார்கள் அவர்களுக்கு எங்கேத் தெரியும் நான் உன்னோடுதான் சிரித்துக் கொண்டிருக்கிறேன் என்பது//

ஆஹா :P
இதுல இப்படி ஒரு விஷயம் இருக்கா :)///

ம்ம் ஆமாம்.......

வாவ்! அருமையான கவிதை தொகுப்பு!

//நம் விழிகள் எழுதிய‌ முதல் கவிதை காதல் /
அசத்தல் கவிதைகள்!

"Dreamzz said...
வாவ்! அருமையான கவிதை தொகுப்பு!

//நம் விழிகள் எழுதிய‌ முதல் கவிதை காதல் /
அசத்தல் கவிதைகள்!"


வாங்க Dreamzz
வருகைக்கு மிக்க மகிழ்ச்சி......

பாராட்டுகளுக்கு நன்றி!!!!

Superb Kavithai, that too esply on Valentines day, varey vah:)

Natpodu,
Nivisha.

//நிவிஷா..... said...
Superb Kavithai, that too esply on Valentines day, varey vah:)

Natpodu,
Nivisha.//

வாங்க நிவிஷா.....

வாழ்த்துகளுக்கு நன்றி!!!!

//உன்
கெஞ்சல்களில்
தோற்று விடுகின்ற‌‌ன‌
என்
கொஞ்சல்கள்//

//நம்
விழிகள்
எழுதிய‌
முதல்
கவிதை
காதல் //


nalla varigal... awesome selection of pictures... thirumba thirumba rasithu padithen...

//Kesavan said...
//உன்
கெஞ்சல்களில்
தோற்று விடுகின்ற‌‌ன‌
என்
கொஞ்சல்கள்//

//நம்
விழிகள்
எழுதிய‌
முதல்
கவிதை
காதல் //


nalla varigal... awesome selection of pictures... thirumba thirumba rasithu padithen...//வாங்க கேசவன்!!!!

வருகைக்கும்...... ரசனையான வாழ்த்துகளுக்கும்

மிக்க நன்றி!!!!!!

//உன்
கெஞ்சல்களில்
தோற்று விடுகின்ற‌‌ன‌
என்
கொஞ்சல்கள் //

:))) nice one

//ஜி said...

//உன்
கெஞ்சல்களில்
தோற்று விடுகின்ற‌‌ன‌
என்
கொஞ்சல்கள் //

:))) nice one//

வாங்க ஜி

வருகைக்கு நன்றி:))

நீங்கள் படங்களை பார்த்துவிட்டு கவிதை எழுதுகிறீர்களா அல்லது கவிதை எழுதிவிட்டு படம் போடுறீங்களான்னு யோசிக்க வக்கிறீங்களே? அத்தனையும் கொள்ளை அழகு. வாழ்த்துக்கள்!

//கோடையில்
எல்லோரும்
வாடிக் கொண்டிருக்க‌
நான்
ம‌ட்டும்
குளிர்ந்துக் கொண்டிருந்தேன்
உன்
முத்த மழையில் //

அழகான கவிதைகள் ..!!
கோடைகால மழை ... அருமை ...!!

தித்திக்கின்றன உங்கள் கவிதை முத்தங்கள்!

Hi,

Romba nalla irrukuma

Amma thangachi,

Kavithaikal romba nalla irrukuma,
unna 2 varusama nalla theriym ana evvala nalla kavithaikal elthuvanu theriyathu.

All the best!!!

Rajiv.

அழகான குட்டி குட்டிக்கவிதைகள்... படத்தேர்வு அருமை.... வாழ்த்துக்கள் தோழி....

Post a Comment