அம்மா!!!  

பதித்தவர் : எழில்பாரதி in

அம்மா!!!

என்ன ஒரு அருமையான உறவு!!!!

உலகத்தில் அனைவராலும் விரும்பக்கூடிய ஒரு உயிர் என்றால் அது அம்மாதான்!!!

கருவில் சுமந்ததில் இருந்து வாழ் நாள் முழுவதும் நம்மை சுற்றியே அவரது உலகத்தை அமைத்துக் கொண்டு நமக்காகவே வாழும் ஒரு தேவதை அம்மா!!!!
என்ன அம்மாவை பற்றி பேசுறேன்னு யோசிக்கறிங்க‌ போல ஆமாங்க இன்று ரொம்ப முக்கியமான நாள் எனக்கு...

இன்று என் அம்மாவின் பிறந்த நாள்!!!

அம்மாவாய் மட்டும் அல்ல இன்று வரை எனக்கு நல்ல தோழியாகவும் என்னை வழிநடத்துபவர்!!!
நான்
உச்சரித்த‌
முதல் வார்த்தையின்
ஓசை நீ!!!

என் மழலையை
மொழியை
மொழி பெயர்க்க
தெரிந்த‌
கவி நீ!!!

மூன்றே சொற்களில்
பலநூறு பூக்களின்
வண்ணமாய்
என்னில் கலந்த‌
என் தேவதை
அம்மா!!!
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா!!!!!!

This entry was posted on Wednesday, December 31, 2008 and is filed under . You can leave a response and follow any responses to this entry through the Subscribe to: Post Comments (Atom) .

23 மழைத்துளிகள்

Ammavukku vaazhthukkal enga saarbavum :D

its superb da...
convey our birthday wishes to amma...

kavidhai romba nalla irrukku da...
our birthday wishes to amma !!!!

என்னோட வாழ்த்துகளையும் சேர்த்துக்கோங்க அக்கா.. :)))))

அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

கவிதை ரொம்ப நல்லா இருக்கு எழில்!

நல்லா இருக்குங்க எழில்..

வாழ்த்துகள் இருவருக்கும்.!

அம்மாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

என்னோட வாழ்த்துக்களையும் அம்மாவுக்கு சொல்லிடுங்க அக்கா :)

அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

கவிதை ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு எழில்!!

எல்லா குழந்தையின் தேவைகளையும் நிறைவேற்ற நேரில் வர முடியாது என்பதால் அம்மாவை படைத்ததாக சொல்லுவர்.

கவிதை அழகு.

புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி.

அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் எழில்... !!

கவிதை அருமை... :)))

கல்லில் செதுக்கிய கடவுள் அல்ல கருவில் சுமந்த தாயே முதல் கடவுள்

அம்மா கவிதை மிக அருமை.அம்மாவைத் தவிர வேறு யார் நமக்கு எல்லாம் ஆக முடியும் வாழ்த்துகள்

அம்மா கவிதை மிக அருமை.அம்மாவைத் தவிர வேறு யார் நமக்கு எல்லாம் ஆக முடியும் வாழ்த்துகள்

அம்மாவுக்கு என்னுடைய வாழ்த்துகளையும் சொல்லிடுங்க எழில்.

உங்களுக்காக ஒர் விருது காத்திருக்கிறது என் வலைதளத்தில்....

http://manasukulmaththaapu.blogspot.com/2009/01/blog-post.html

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா!!!!!!

///

அழகான பதிவு
பாராட்டுக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உங்கள் வலைத்தள அமைப்பு அழகு

என் வாழ்த்துக்களும்!!

வணக்கம்!
கவித்தேநீர்
அருந்த வலைப்பக்கம்
வருக!!
தேவா..

நல்ல கவிதை. அம்மாவிற்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்

Post a Comment