தீபாவளியன்று எல்லா தொலைக்காட்சிகளிலும் தமிழ் தெரியாத கதாநாயகிகளின் கொஞ்சல் பேட்டிகள்!!!என்னடா இது , எல்லா தீபாவளியும் போட்டதையே போடுறானேன்னு நொந்துக்கிட்டு ஒவ்வொரு அலைவரிசையா மாத்திக்கிட்டே போனா மக்கள் தொலைக்காட்சியில் தொகுபாளினிகள் உறியடிச்சு விளையாடுறாங்க ஆகா வித்தியாசமா இருக்கேன்னு பார்க்க தொடங்கினா எல்லாமே வித்தியாசமான நிகழ்ச்சிகள்தான்!!!!
அதிலும் புலவர் நன்னன் அவர்களது நிகழ்ச்சி நெகிழ வைத்தது... 85 வயதிலும் அவர் ஏர் பிடித்து உழுதது வியப்பாக இருந்தது அடுத்து அவர் சடுகுடு விளையாடினார்அப்போ அவர் உத்திப் பிரித்திட்டு வாங்கன்னு சொல்லி உத்திப் பிரித்து விளையாட தொடங்கினார்கள்.... இந்த வயதிலும் என்னமா விளையாடுறார்...
சரி நான் இப்போ தலைப்புக்கு வரேன்....
உத்திப் பிரிக்கிறதுன்னா என்ன... கிராமங்களில் பிறந்த பலருக்கு தெரிந்திருக்கும்....
இரண்டுக் குழுவாக பிரிந்து விளையாடும் எல்லா விளையாட்டிற்கும் உத்தி பிரிப்பார்கள்.இரண்டுக் குழுத்தலைவர்களும் மற்றவர்களை உத்தி பிரித்திட்டு வரச் சொல்லுவாங்க.இரண்டு இரண்டு பேராகப் பிரிந்து போய் அவர்களுக்குள் பிரித்துக் கொள்வார்கள்.நான் தாமரை நீ மல்லிகைன்னு பிறகு குழுத்தலைவரிடம் வந்து தாமரை வேணுமா மல்லிகை வேணுமான்னு கேட்பாங்க.குழுத்தலைவர்கள் தேர்ந்தெடுப்பார்கள் தாமரை வேண்டுமா இல்லை மல்லிகை வேண்டுமான்னு.... இதேப் போல் ஒவ்வொருவரும் பிரித்ததும் விளையாட தொடங்குவார்கள்...
உத்திப் பிரிப்பது இப்போ கிராமங்களில் எவ்வளவு மாறிவிட்டது...
என் பெற்றோர்கள் விளையாடியக் காலங்களில் அவர்கள் உத்திப் பிரிக்கும் போது 1000 கல்லுல கடைசி கல்லுல மாங்க அடிச்சவன் வேணுமா இல்ல ஒரே கல்லுலஒரே தடைவையில அடிச்சவன் வேணுமான்னு கேட்பாங்களாம்.... இதுப்போல் வித்தியாசமா உத்தி பிரித்தது காலப் போக்கில் கொஞ்சம் மாறி தாமரை வேணுமா அல்லி வேணுமா, உப்பு வேணுமா சர்க்கரை வேணுமான்னு அவர்களுக்கு பிடித்ததை வைத்து பிரித்துக் கொள்வார்கள்...
ஒரு ஆர்வத்துல ஊரில் இருக்கிற என் தம்பியிடம், எப்படிடா உத்தி பிரிபீங்கன்னு தாமரை வேணுமா மல்லி வேணுமா, ராஜா வேணுமா மந்திரி வேணுமானு தானே பிரிப்பீங்கன்னுகேட்டா, ஏற இறங்க ஒரு பார்வை பார்த்துட்டு நீ எந்தக் காலத்துல இருக்க இதுல வேற சாப்ட்டுவேர் இன்ஜினியர.அக்கா இப்போயெல்லாம் நாங்க விஜய் வேணுமா அஜித் வேணுமானு கேட்போம் இல்லைன்னா அசின் வேணுமா த்ரிஷா வேணுமான்னு கேட்ப்போம்ன்னு சொன்னதும் ஆகா ரொம்ப முன்னேறிட்டாங்கன்னு இருந்தா.அடுத்தது அவன் சொன்னதைக்கேட்டு வாய் அடைத்து போய்ட்டேன் கீபோர்டு வேணுமா மவுஸ் வேணுமானு கேட்பாங்களாம்...
ம்...ரொம்ப முன்னேறிட்டாங்க பசங்க.......
கொடுத்துவிட்டு
என் வெட்கங்களை
அள்ளிச் செல்கிறாய்
இதை வைத்து
என்னடா
பண்ணப்போறன்னு
கேட்டா
கேட்டா
இவற்றை வைத்துதான்
என்
நாளைய குறும்புகள்
என்று
சிரித்து விட்டு
போகிறாய்!!!

உனக்கான
என் வெட்கங்களும்
எனக்கான
உன் குறும்புகளையும்
கொண்டு வளர்கிறது
நமக்கான காதல்!!!
கூட்டினாலும்
பெருக்கினாலும்
ஒரே விடை
கிடைப்பது கணிதத்தில்
மட்டும் அல்ல
காதலிலும்தான்
குறும்புகளையும்
வெட்கங்களையும்
கூட்டினாலும்
பெருக்கினாலும்
கிடைக்கும்
ஓரே விடை
காதல்!!!
நான்
உனக்காகவே
உன்னிடம் மட்டுமே
செலவு செய்வது;
என்
வெட்கங்களை!
குறும்புகளும்
தொடரும்
எனது
வெட்கங்களும்
கொணர்கின்றன
நமக்கான
காதல்
மழையை!
மேலே இருக்கு படம் என்வென்று தெரியுதா..... அவர்கள் வேறு யாரும் அன்று வருங்கால இந்தியகுடிமகள்களாக இருக்க வேண்டியவர்கள்....பெண்கள் எத்தனை சாதனைகள் புரிந்தாலும், அவ்ர்களுக்கு எதிரான ஒரு சில சம்பவங்கள் மட்டும்
இவ்வுலகில் மாறுவதில்லை ..
ஒரிசாவில் நயகர் மாவட்டம் நபகன்பூரில் 30 பாலீத்தீன் பைகளில் அடைக்கபட்டிருந்த பெண் குழந்தைகளின் உடல்களை காவல் துறையினர் கைப்பற்றினர், இவர்கள் கண்டெடுக்கப்பட்ட இடம் வேறு எங்கும் இல்லை மருத்துவமனை அருகில்தான்.... யாரைத்தான் குற்றம் சொல்வது படித்து பட்டம் பெற்ற மருத்துவரை யா இல்லை தன் ரத்தத்தை கொடுத்து வளர்த்த சிசுவை கொல்ல மனம் வந்த தாயை யா...
பெண்கள் எவ்வளவு முன்னேறினாலும் அடிமட்டத்தில் பெண் சிசுக் கொலைகள் மட்டும் அழிவதில்லை... பெண்களுக்கு 33% சதவிதம் பெற்று விட்டோம் என்று மகிழ்வதைவிட பெண குழந்தைகளின் இறப்பு சதவித்தை குறைத்துவிட்டோம் என்று மகிழும் நாள் நோக்கி பயணிப்போம்!!!!
நன்றி: தினகரன் நாளிதழ்
எப்போது ஊருக்கு வந்தாலும்
வரவேற்பாய்
திண்ணையில் புன்னகைத்தபடி
இப்போது
ஊரை நினைக்கும் போதே
பெருகிடும் கண்ணீர்த்துளிகளை
வரவேற்க காத்துக்கிடக்குது
வெற்றுத்திண்ணை
திருமண
சந்தையில்
நீர்க்குமிழியாய்
உடைந்தது
பெண்ணின்
கனவு!
பூக்கடையை
ஏக்கமாய்
பார்த்த
கைம்பெண்ணிற்கு
பூச்சூட்டி அழகுப்பார்த்தது
பூவரசம்!!
எங்கு...
எப்படி...
எப்பொழுது தொடங்கியது
என்றுதெரியாத எல்லைகளற்ற, நெடுவானம்தான்
நம் நட்பு!
தாயின்
கருவறையில்
பயின்ற
முதல்
மொழி!!!!