காத்திருப்பு  

பதித்தவர் : எழில்பாரதி in

சுமந்தவரும்
கன‌ப்பதனால்
பெருகிக் கொண்டே
போகின்றன‌
முதியோர் இல்ல‌ங்க‌ள்!

ந‌டைப்ப‌ழ‌க‌
விர‌ல் கொடுத்த‌
தாய்க்கு
இன்று
நிழ‌ல்
கொடுக்க‌
ம‌ன‌மில்லை
பிள்ளைக‌ளுக்கு!


வாழ்நாளில்
பாதியை
பிள்ளைகளுக்கு
கொடுத்துவிட்டு
இப்பொழுது
காத்துக்கொண்டிருக்கின்றன‌
பெற்றோர்
இத‌ய‌ங்க‌ள்
பிள்ளைகளுக்காக‌!!!!

This entry was posted on Sunday, March 09, 2008 and is filed under . You can leave a response and follow any responses to this entry through the Subscribe to: Post Comments (Atom) .

21 மழைத்துளிகள்

சிந்திக்க வைக்கும் கவிதை,
அருமையான கருத்துடன் உங்கள் கவிதை அருமை எழில், பாராட்டுக்கள்!

\\வாழ்நாளில்
பாதியயை
பிள்ளைகளுக்கு
கொடுத்துவிட்டு
இப்பொழுது
காத்துக்கொண்டிருக்கிறன‌
பெற்றோர்
இத‌ய‌ங்க‌ள்
பிள்ளைகளுக்காக‌!!!!\\

வயதான பெற்றோர் ஏங்குவதே, தங்கள் பிள்ளைகளின் கவனிப்பை விட அன்பான ஒரிரு வார்த்தைகளுக்குதான்,

ஆனால் இன்றைய வேகமான உலக வாழ்க்கையில், சில மணிதுளிகள் அவர்களுடன் செலவிட கூட பிள்ளைகளுக்கு நேரமில்லை!!

நம்மை சுமந்த தோள்களை, அத்தோள்கள் தளர்ந்தபின் சுமையாக கருதாமல், தாங்கிக்கொள்வதே பிள்ளைகளின் கடமை!

\\ ந‌டைப்ப‌ழ‌க‌
விர‌ல் கொடுத்த‌
தாய்க்கு
இன்று
நிழ‌ல்
கொடுக்க‌
ம‌ன‌மில்லை
பிள்ளைக‌ளுக்கு!\\

இவ்வரிகளும்,
படத்திலுள்ள அந்த வயதான பெண்ணின் கண்களின் ஏக்கமும், மனதை நெகிழவைத்தது!

எழில்,
முதியோரின் வேதனையை சிந்திக்க வைக்கும் எளிமையான வார்த்தைகளை இட்டு மனதைக் கனக்க வைத்துவிட்டீர்

படங்களில் இழையோடும் சோகத்தை உங்கள் வார்த்தைகளிலும் கொடுத்துவிட்டீர்.

//சுமந்தவரும்
கன‌ப்பதனால்//

வரிகளில் கணம்! மனமும் கணத்தது எழில்!

மிக அருமையான தலைப்பும் கூட!

வார்த்தைகள் குறைவு ஆனால் அர்த்தங்கள் பெரிது!

பிள்ளைகள் பெற்றோர்கள் பாசத்தை அழகாக சொல்லி இருக்கீங்க... கவிதை நல்லா இருக்கு

//
சிந்திக்க வைக்கும் கவிதை,
அருமையான கருத்துடன் உங்கள் கவிதை அருமை எழில், பாராட்டுக்கள்!//


வாங்க திவ்யா!!!!

பாராட்டுகளுக்கு நன்றி!!!!

Divya said...
//வயதான பெற்றோர் ஏங்குவதே, தங்கள் பிள்ளைகளின் கவனிப்பை விட அன்பான ஒரிரு வார்த்தைகளுக்குதான்,

ஆனால் இன்றைய வேகமான உலக வாழ்க்கையில், சில மணிதுளிகள் அவர்களுடன் செலவிட கூட பிள்ளைகளுக்கு நேரமில்லை!!

நம்மை சுமந்த தோள்களை, அத்தோள்கள் தளர்ந்தபின் சுமையாக கருதாமல், தாங்கிக்கொள்வதே பிள்ளைகளின் கடமை!//



க‌ண்டிப்பாக‌ இப்போது உள்ள‌ வாழ்க்கையில் பொற்றோர்க‌ளை காண்ப‌தே க‌டினமாகிவிட்ட‌து!!!
பிள்ளைக‌ளாக‌ இருந்து அவ‌ர்க‌ளை பார்துக்கொள்வ‌தை விட‌ அவ‌ர்க‌ளை பிள்ளைக‌ளாக‌ நினைத்து.... ஒரு தாய் உள்ள‌த்தோடு க‌வ‌னிக்க‌ தொட‌ங்கினாலே இந்த‌ க‌வ‌லைக‌ள் ச‌ரியாகிவிடும்....

Divya said...
\\ ந‌டைப்ப‌ழ‌க‌
விர‌ல் கொடுத்த‌
தாய்க்கு
இன்று
நிழ‌ல்
கொடுக்க‌
ம‌ன‌மில்லை
பிள்ளைக‌ளுக்கு!\\

இவ்வரிகளும்,
படத்திலுள்ள அந்த வயதான பெண்ணின் கண்களின் ஏக்கமும், மனதை நெகிழவைத்தது!



மிக்க நன்றி திவ்யா!!!

வினையூக்கி said...
எழில்,
முதியோரின் வேதனையை சிந்திக்க வைக்கும் எளிமையான வார்த்தைகளை இட்டு மனதைக் கனக்க வைத்துவிட்டீர்

படங்களில் இழையோடும் சோகத்தை உங்கள் வார்த்தைகளிலும் கொடுத்துவிட்டீர்.//

வாங்க‌ வினையூக்கி....

க‌ன‌மான‌ ப‌கிர்தலுக்கு மிக்க‌ ந‌ன்றி!!!!!

sathish said...
//சுமந்தவரும்
கன‌ப்பதனால்//

வரிகளில் கணம்! மனமும் கணத்தது எழில்!

மிக அருமையான தலைப்பும் கூட!

வார்த்தைகள் குறைவு ஆனால் அர்த்தங்கள் பெரிது!

வாங்க‌ ச‌திஷ்...

ப‌கிர்த‌லுக்கு மிக்க‌ ந‌ன்றி!!!

//Dreamzz said...
பிள்ளைகள் பெற்றோர்கள் பாசத்தை அழகாக சொல்லி இருக்கீங்க... கவிதை நல்லா இருக்கு//

வாங்க‌
க‌னவுக் க‌விஞ‌ரே


வாழ்த்துக‌ளுக்கு மிக்க‌ ந‌ன்றி.....

என்னவென்று சொல்ல முடியாத ஒரு சோகம் வந்து மனதை அழுத்தியது..உடனே அம்மாவுடன் தொலை பேசியில் பேசி இப்போது கொஞ்சம் லேசாகியது மனது!!!
அன்புடன் அருணா

//aruna said...
என்னவென்று சொல்ல முடியாத ஒரு சோகம் வந்து மனதை அழுத்தியது..உடனே அம்மாவுடன் தொலை பேசியில் பேசி இப்போது கொஞ்சம் லேசாகியது மனது!!!
அன்புடன் அருணா//



வாங்க அருணா!!!

உங்கள் நெகிழ்ச்சியான பகிர்தலைக் கண்டு நெகிழ்ந்தேன்!!!!

அம்மா எப்படி இருக்காங்க!!!!!

வாடின இலைகளை வாட வைக்கிறது
வாடப்போகும் பாசமற்ற பல
பச்சை இலைகள்!

முதுமை என்ற ஆசிரியர்
வாழ்க்கை வகுப்பறையின்
கடைசிப்பாடத்தை
கற்பிக்க ஆரம்பித்ததும்
மரித்துப்போகிறது
பாடங்களும் ஆசிரியரும்
வாழ்க்கையும்

நல்ல கவிதைகளை
எழுதியுள்ளீர்கள் எழில்
பாராட்டுகள்

அன்புடன்
என் சுரேஷ்

//என் சுரேஷ் said...
வாடின இலைகளை வாட வைக்கிறது
வாடப்போகும் பாசமற்ற பல
பச்சை இலைகள்!

முதுமை என்ற ஆசிரியர்
வாழ்க்கை வகுப்பறையின்
கடைசிப்பாடத்தை
கற்பிக்க ஆரம்பித்ததும்
மரித்துப்போகிறது
பாடங்களும் ஆசிரியரும்
வாழ்க்கையும்

நல்ல கவிதைகளை
எழுதியுள்ளீர்கள் எழில்
பாராட்டுகள்

அன்புடன்
என் சுரேஷ்//

வாங்க என் சுரேஷ் !!

தங்கள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி!!

நல்லா இருக்கு.

கவிதைகள்
கலங்கடிக்கின்றன!
வாழ்த்துக்கள்!

படங்கள் கவிதைகளுக்கு மேலும் உணர்வூட்டுகின்றன.

வாழ்த்த வார்த்தை இல்லை... வளர்க உங்கள் எழுத்து...

தினேஷ்

புகைப்படங்கள் காண மனது வலிக்கிறது தோழி..

வரிகள் நன்று..

Post a Comment