மனநிறைவு  

பதித்தவர் : எழில்பாரதி in

காலையில் இருந்தே ஒரே பரபரப்பாக இருந்தான் முகிலன் இரவெல்லாம் தூக்கம் இல்லாது, சிவந்த அவன் கண்களில் தெரிந்தது. சீக்கிரம் கிளம்பிப் போக நினைத்திருந்ததால்.. அவசரமாக கிளம்பிட்டான்.

"அம்மா, நான் கிளம்பறேன்" என்றுமில்லாமல் புதிதாய் முகிலன் சீக்கிரம் கிளம்பியது அம்மாவிற்கு வியப்பாய் இருந்தது

"என்னப்பா!, மணி ஏழு தானே ஆகுது அதுக்குள்ள கிளம்பிட்டியே?"

"இல்லம்மா, கொஞ்சம் வெளி வேலை இருக்கு, அதான்"

"நைட்டும் நீ லேட்டா தான் வந்த..,. வந்தும் சாப்பிட்டு தூங்காம.., கம்யூட்டர்ல உட்கார்ந்துட்ட, இப்படியே இருந்தா உடம்பு என்னத்துக்குறது? காலையில வெறும் வயத்துல கிளம்ப வேணாம். இருப்பா.. ரெண்டு தோசை வார்த்து தாரேன். சாப்பிட்டு போப்பா.."

அம்மாவின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் கட்டுப்பட்டான். இல்லாவிட்டால்.. தன்னை போக விடமாட்டார் என்று தெரியும். இரண்டு தோசைகள் சாப்பிடும் அளவு கூட மனம் பொறுக்கவில்லை.

"சரிம்மா போதும்.. நான் கிளம்பறேன்...." என்று வண்டியை எடுத்துக் கொண்டு பறந்தான்.

போகும் வழியில் வண்டியை நிறுத்தி, அன்றைய ஒரு செய்திதாள் வாங்கி, புரட்டிப்புரட்டி பார்த்தான். அவன் எதிர்பார்த்த செய்தி இல்லை. பக்கங்களை அவசரமாக புரட்டியபோது, ஒரு மூலையில் சின்னதாக ஒரு காலத்தில் அவன் எதிர்பார்த்த செய்தி வந்திருந்தது. எதிர்பார்ப்பு ஏமாற்றமாகும் போது வந்து சேரும் மனம் சோர்ந்து போவது இயல்பு.

முகிலனும் சோர்ந்து போனான். அப்படியே பத்திரிக்கையை சுருட்டி வண்டியின் முன் பக்கம் வைத்துவிட்டு, ஓட்டத்துவங்கினான்.

அலுவலகத்தில் வண்டியை நிறுத்திவிட்டு திரும்புகையில், "டேய் மச்சான் என்னடா இது, இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துட்டே? அதிசயமா இருக்கியே... பின்னாடி வந்த முகிலனின் அலுவலக நண்பன் ரவி கேட்டது கூட, காதில் விழாதவனாய் அலுவலகத்தை நோக்கி நடந்தவனின் தோளைத் தட்டினான் ரவி.

"டேய் உன்னத்தான்டா.."

"ஓ... .சாரிடா, ஏதோ ஒரு யோசனையில் இருந்துட்டேன்....".

"அத விடு! என்ன சீக்கரம் வந்துட்டே...?"

"கொஞ்சம் வேலை இருந்த்ச்சுடா.. அதான்.."

அவன் வேலை என்று சென்னதை ரவியால் முழுமையாய் ஏற்றுக் கொள்ள முடியவில்லை இருவரும் ஒரே குழுவில் இருப்பதால் அவசரமான வேலைகள் எதுவும் இல்லை என்பதும் ரவிக்கு தெரியும். அப்புறம் ஏன் இப்படி சொல்றான்.

"டேய் முகில் என்னாச்சு உனக்கு... ஏன் ஒருமாதிரியா டென்சனா இருக்க?" ஒரு நிமிடம் ரவியையே பார்த்தான்.

"சொல்லவிருப்பம் இல்லாட்டி விடுடா..?"

"அப்படியெல்லாம் ஒன்னுமில்ல ரவி! இன்னைக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வருதுடா. அதான் டென்சனா இருக்கேன்..."

"டேய் லூசா நீ..., பத்தாம் வகுப்பு எல்லாம் நாம முடிச்சு பத்து வருசம் ஆகியிருக்கும். இப்போ ஏன்டா பயப்படறே?"

"அதுக்கில்லடா உனக்கு நியாபகம் இருக்கா? நாமெல்லாம் ரெண்டு மாசம் முன்னே ஒரு இல்லத்துக்கு போய் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தோமே..."

"ம்ம்.. ஆமா.. அதுக்கென்ன இப்போ?"

"இல்லடா அவங்கெல்லாம் நல்ல படிக்கிற பிள்ளைங்கடா அவங்க பாடங்களை தேர்வுக்காக எப்படியும் படிச்சிருப்பாங்க. நாம அங்கே போய்... அவர்கள் மனநிலையை கலைத்து விட்டோமோ என்று ஒரு பயம் எனக்குள்ள இருந்துச்சுடா... ஒவ்வொரு மாணவனுக்கும் ஒவ்வொரு விதத்துல படிச்சா, எளிமையா மனசுல புரியும்.

நாம என்னவோ எளிமையா படிக்க அறிவுறைகள் சொல்லறதா நெனைச்சு, இப்படி தான் படிக்கனும், அது இதுன்னு நம்மோட கருத்துக்களை டிப்ஸ்ங்கற பேருல சொல்லி பசங்களை குழப்பிட்டோமோன்னு ஒரு குற்ற உணர்வு.

ஒரு வேளை பரிட்சைக்கு பல மாதங்கள் முன்னாடி இப்படி ஆலோசனை கூட்டம் நடத்தியிருந்தா, பரிட்சைக்கு படிக்க நாம சொல்லித்தந்த வழிகள், அவங்களுக்கு பொருத்தமானதான்னு சோதிச்சு பார்த்து, புரிஞ்சுக்க அவங்களுக்கு நேரம் இருந்திருக்கும். என்ன தான் நாம நல்லது செய்ய நினைச்சு, ஈஸியா பாடங்களை படிச்சு பரிட்சைக்கு தயாராகுறது எப்படின்னு கூட்டம் நடத்தியிருந்தாலும், பரிட்சை நெருங்குற, கடைசி சமயத்துல நாம சொன்னதை முழுசா எடுத்துக்கிட்டு, ஏற்கனவே அவங்க பின்பற்றி வர்ற படிப்பு முறைகளை மாற்றிக்கிட்டு , அதனால ஒருவேளை அவங்க தேர்வுல சரியா மதிப்பெண் பெறாம போனா? அது முழுக்க முழுக்க நம்மளேட தவறுடா. அதான் எனக்கு கொஞ்சம் டென்சனா இருக்கு...!"

முகிலன் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகவே பட்டது.

"நாம இல்லத்துக்கு போய் மாணவர்களின் தேர்வு முடிவுகளை கேட்கலாமா?"

"மச்சி இன்னும் நெட்டுலயே வந்திருக்காதுடா.. மதியம் வரை பார்க்கலாம். அப்படியும் அப்டேட் ஆகவில்லைன்னா.. மதியம் லஞ்ச் பிரேக்குல போய் எட்டிப் பார்த்துட்டு வந்திடலாம். பேசி வைத்துக்கொண்டாலும் வேலையே ஓடவில்லை. ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை முடிவுகள் வரும்
தளத்தினை பார்த்து, பார்த்து வேலை செய்தான். அப்டேட் ஆகவே இல்லை.

மதியம் உணவு நேரம் வந்ததும், ரவியின் நாற்காலி தேடி ஓடினான். " இல்லத்துக்கு போய்ட்டு வரலாமா..?"

"ஒரு நிமிசம்டா... இதோ கிளம்பிடலாம்"

ரவி வண்டி ஓட்ட, முகிலன் பின்னால் அமர்ந்துக் கொண்டான் பயணம் முழுவதும் முகிலன் பதற்றமாய் இருந்தான். நல்லபடியா முடிவுகள் வந்திருக்கவேண்டும். எல்லோரும் வெற்றி பெற்றிருந்தால் நல்ல இருக்கும். அப்படி இல்லாமல்... நினைத்துப் பார்க்கவே வருத்தமாக இருந்தது. அவர்களை அவர்கள் போக்குக்கு போக விட்டிருக்கலாம். கடைசி நேரத்தில் இப்படி தங்களில் படிப்பறிவை அந்த மாணவர்கள் மீது ஏற்றிவிட்டிருக்க வேண்டாமோ.. மனம் கண்டபடி சிந்தித்துக்கொண்டே இருந்தது.

சேவை இல்லத்தை அடைந்ததும் முகிலன் ஓட்டமும் நடையுமாய் இல்லத்தின் காப்பாளரை சந்திக்கச் சென்றான்....

"சார் நாங்க எங்க அலுவலக குழு மூலமா , பரிட்சைக்கு தயாராகிக்கிட்டிருந்த பத்தாம் வகுப்பு பிள்ளைகளுக்கும, வழிகாட்டி பாடம் எடுக்க வந்திருந்தோம். இன்று முடிவுகள் வந்திருக்கு. நம்ம மாணவர்களின் தேர்ச்சி பற்றி தெரிந்துக் கொள்ளதான் வந்திருக்கோம்... முடிவுகள் எப்படி வந்திருக்கு சார்....?

"உங்களை எல்லம் நல்ல நினைவு இருக்குப்பா.... முடிவுகள் நல்லா வந்திருக்கு எல்லா பிள்ளைகளும் நல்ல மதிப்பெண் எடுத்திருக்காங்க..
உங்க நிகழ்ச்சி அவங்களுக்கு தன்னம்பிக்கையாகவும், பாடங்களை எளிய முறையில் உள்வாங்கிப் படிக்க உதவியா இருந்ததா சொன்னாங்க. உங்க அலுவலகத்திற்கு ஒரு நன்றிக் கடிதம் எழுதறதா இருக்கோம். அதுக்குள்ளே நீங்களே வந்து நிக்கிறீங்க.. மாணவர்களுக்கு ஆலோசனை நிகழ்ச்சியை இலவசமா நடத்தியது மட்டுமில்லாம,அவங்க தேர்வு முடிவுகளையும் ஆர்வமா வந்து பாக்குற உங்களை பாராட்டனுங்க தம்பி.

உங்க நல்ல மனசுக்கு நீங்க இன்னும் பெரிய நிலையை அடைஞ்சு ,இது போல பல நிகழ்ச்சிகள் நடத்தி பல இளைய தலைமுறைகளுக்கு சேவை செய்யனும்ன்னு வாழ்தறேன். உங்களை மாதிரி இளைய தலைமுறைகள், நம் நாட்டின் வருங்கால தூண்களா வரப்போற மாணவ சமுதாயத்திற்க்கு சேவை செஞ்சா, இந்தியா வல்லரசாகுற காலம் வெகு தொலைவில் இல்லைப்பா." நெகிழ்வுடன் உணர்ச்சி பெருக்கோடு சொன்னார்.
முகிலன் ரொம்ப மகிழ்ச்சியாய் உணர்ந்தான்.

"சரி சார், கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு சார்... இனி நாங்க தனிப்பட்ட முறையிலையும் வந்து, அடிக்கடி பிள்ளைகளுக்கு பாடம் எடுக்க அனுமதி வேண்டும் சார்..."

"கண்டிப்பா வாங்க ரொம்ப பயனுள்ளதா இருக்கும்..."

"சரி சார் நாங்க போய்ட்டு வரோம். தங்கள் அலுவலகத்தில் ஏற்படுத்தபட்டிருக்கும் கல்விக்குழுவின் சேவை, விழலுக்கு இறைத்த நீராய்... வீணாகாமல் சரியாய் பலன் தந்திருப்பது மனநிறைவாய் இருந்தது. அந்த நிறைவோடு அலுவலகம் நோக்கி பயணித்தனர்.

This entry was posted on Thursday, April 10, 2008 and is filed under . You can leave a response and follow any responses to this entry through the Subscribe to: Post Comments (Atom) .

17 மழைத்துளிகள்

நல்ல சிந்தனைங்க.

வாழ்த்துக்கள்.

நல்ல சேவையும் கூட.

நல்ல சமூக சிந்தனை

நல்லா இருக்கு

மனநிறைவான கதை . நன்று :)

வித்தியாசமான கதை களத்தை கையாண்டதுக்காக ஒரு தனி சபாஷ். வாழ்த்துக்கள்.

அட்டகாசமான கதை...நன்றாக சொல்லியிருக்கிங்க ;))

வாழ்த்துக்கள் எழில் ;)

நல்லதொரு கருத்துக் கொண்ட கதை எழில்.வாழ்த்துக்கள்
தற்போது பல அலுவலகங்களும், இளைஞர்களும் குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்துறையில் இருக்கும் பலரும் இது போன்ற சேவைகளில் ஈடுபடுவது சிறப்பான ஒரு விசயம்

அருமையான கதைக் கரு. சாதாரண ஒரு விஷயத்திலிருந்து சேவை மனப்பான்மையால் கிடைக்கும் மனநிறைவை அழகா விளக்கியிருக்கிங்க.

கதை முடிவில் முகிலன்,ரவிக்கு மட்டுமல்ல... கதையை படிக்கும் எங்களுக்கும் மனநிறைவாய் இருக்கிறது.இதுபோல நிறைய எழுதுங்க.வாழ்த்துக்கள்.

பெரிய்ய்ய்ய்ய்ய்யாஆஆஆஆஅ எழுத்தாளர் தான் நீங்க :))
கிண்டலுக்கு என்று சொல்லவில்லை.கதை கரு புதுமையாக இருந்தது.நான் ஏதோ என்னமோன்னு நினைச்சேன்.கடைசியில் வேறு மாதிரி கதை போச்சு :P
இன்னும் நிறைய எழுதுங்க,வாழ்த்துக்கள்

எழில்,

கருத்துள்ள கதை, அதனை சொல்லியவிதம் மிக அருமை!!

உங்கள் கதை நடையில் ஒரு தேர்ச்சியும் முதிர்ச்சியும் உணர முடிகிறது!!

தொடர்ந்து எழுதுங்க எழில், வாழ்த்துக்கள்!!

:))))

கவிதாயினி எழில் இன்னைல இருந்து கதாசிரியர் எழிலாகவும் அழைக்கப்படுவார் என்று இங்கே தெரிவிக்க கடமை பட்டுள்ளேன்..

அருமையான கருத்து கதைநடையாக.. வாழ்த்துக்கள் :)))

divya sonnapla, arumaiyana, karuthulla kadhai. nalla irukuthunga. naanum puthusa blog open panni iurukken. paarunga.

வாழ்த்துக்களுடன்...!

:))

ம்..ம்... அடிச்சு ஆடுங்க!

எழில்,

கவிதையில் மட்டுமல்லாமல், கதை சொல்வதிலும் கைதேர்ந்தவர் என நிருபித்துவிட்டீர்கள்:))

வாழ்த்துக்கள்!!

விதியாசமாக பட்டது சிறுகதை! தவிப்பு தொடக்கத்தில், புன்னகை இறுதியில்... :)

Post a Comment