சில்மிஷக் காதல்!!!  

பதித்தவர் : எழில்பாரதி in

எங்குதான்
கற்றுக்கொண்டதோ
என் விழிகள்
உன்
குறும் பார்வையின்
வார்த்தைகளை
மொழிப் பெயர்ப்பதற்கு

அலை
நனைத்து விட்டு
போகும்
மணற்போல்
என்றும்
உலராமலே
இருக்கும்
எனக்குள்
உன் காதல்

தூங்கவே விடாமல்
கண்ணாமூச்சி
விளையாடுகிறது
உன் காதல்
என் இரவுகளோடு

உன்
சில்மிஷ விரல்களை
சிறைப்பிடித்த
என்னை
உன்
காதல் சுவாசத்தால்
சிறைப்பிடித்து விட
திணறுகிறது
நம் காதல்
முதல்
தண்டனை
யாருக்கு கொடுப்பதென்று

எத்தனை
கோபங்கள் இருந்தாலும்
அலை துரத்தி
விளையாடும்
சிறு நண்டை
போல்
உன்னையே துரத்தி
வருகிறது
என் இதயம்

உனக்கும்
எனக்குமான
இடைவெளியை
அளக்கும்
அளவுகோலாய்
நம்
காதல் சுவாசம்!