காதல் பட்டாம்பூச்சி  

பதித்தவர் : எழில்பாரதி in


சலனமற்று
இருந்த
என்னுள்
அடைமழையின்
முதல்
துளியாய்
நீ!!


மண்வாசனையை
எழுப்பி
விளையாடும்
சிறு மழையாய்
தூக்கங்களை
எழுப்பிவிட்டு செல்கிறாய்
உன்
சில நிமிட
கனவுகளில்!


சில நிமிட
மௌனங்களில்
நம்மைச்சுற்றி
ஓராயிரம்
கவிதை
பட்டாம்பபூச்ச்சிகள்!

           
குளிர்கால
இரவுகளில்
கதகதப்பாய்
போர்த்தி விட்டு
 செல்கின்றன
உன்
நினைவுககள்!!!


எப்பொழுதும்
மழையில் நனைந்து
விளையாடும்
நான்
இப்பொழுதெல்லாம்
ஓளிந்துக்கொள்கிறேன்
உன் முத்த ஈரங்கள்
அழிந்து விடுமோ
என்று!!!

This entry was posted on Friday, June 17, 2011 and is filed under . You can leave a response and follow any responses to this entry through the Subscribe to: Post Comments (Atom) .

9 மழைத்துளிகள்

நீண்ட இடைவெளிக்குப்பிறகு கவிதை மழை... :) வாழ்த்துக்கள் எழில்...:)

//சலனமற்று
இருந்த
என்னுள்
அடைமழையின்
முதல்
துளியாய்
நீ!!//

அடைமழை..?? :) மிகவும் ரசித்தேன் எழில்..

//எப்பொழுதும்
மழையில் நனைந்து
விளையாடும்
நான்
இப்பொழுதெல்லாம்
ஓளிந்துக்கொள்கிறேன்
உன் முத்த ஈரங்கள்
அழிந்து விடுமோ
என்று!!!//

கெளப்புங்க.. :) அழகு... :)

பட்டாம் பூச்சிகள் மனசெல்லாம்.... அருமை தோழி... வாழ்த்துகள் ..

காதல் பட்டாம்பூச்சி என்றென்றும் உங்கள் வாழ்வில் சிறகடிக்கட்டும்.... எல்லா சிறகடிப்புகளும் அழகாக உள்ளது அக்கா.....

அருமை அக்கா :))

Good one Ezhil. Especially the last one ...

காதல்; கவிதையில் பற்றி எரிகிறது தோழி. அன்பின் ஒளியில் உலகம் பிரகாசிக்கட்டும்..

வாழ்த்துக்களும் அன்பும்..

வித்யாசாகர்

Post a Comment