என்ன ஒரு அருமையான உறவு!!!!
உலகத்தில் அனைவராலும் விரும்பக்கூடிய ஒரு உயிர் என்றால் அது அம்மாதான்!!!
இன்று என் அம்மாவின் பிறந்த நாள்!!!
அம்மாவாய் மட்டும் அல்ல இன்று வரை எனக்கு நல்ல தோழியாகவும் என்னை வழிநடத்துபவர்!!!

சந்திக்கும் வரை
உன்னை யார்யென்றே
தெரியாது
உன்னை
சந்தித்த பின்பு
உன்னைத் தவிர
எனக்கு
யாரையும்
தெரியவில்லை!!!!!!
ஊடல் கணங்களில்
என்ன பேசுவதென்று
தெரியாமல்
வார்த்தைகள் தத்தளிக்கும் போது
சலனமே இல்லாமல்
பேசத்தொடங்கி விடுகின்றன
நம் விரல்கள்!!!
என்னை
தூங்கச் சொல்லிவிட்டு
நம் கைப்பேசி
உரையாடலை
முடித்துவைத்தாய்
உன்முத்த சத்தங்களோ
என் தூக்கத்தோடுதான்
விளையாடுவேன்
என்று
அடம் பிடிக்கிறது!!!!
சாகாவரம்
பெற்று
வளர்ந்துக் கொண்டே
இருக்கிறது
நம்
முதல் முத்தம்!!!
முத்தத்தில்
கூட
சோர்ந்து போகாத
நம்
இதழ்களை
சோர்வடைய செய்கிறது
ஊடல்
உடைந்து
எழத்
துடிக்கும்
முதல் வார்த்தை!!!
உன் அருகாமையை
அனுபவிப்பதா
இல்லை
உன் சில்மிஷங்களை
ரசிப்பதா
எனத்
தெரியாமல்
திணறச்செய்கிறது
உன் காதல்
உன் வருகை
இல்லாத நாட்களில்
அழுது ஆர்பாட்டம் செய்யும்
நம் காதல் குழந்தையை
எப்படிதான் சமாளிப்பதோ!!!
நீ
முத்தம் கேட்டு
கொடுக்கவில்லை
என்றதும்
திட்டி தீர்த்து விடுகின்றன
என் இதழ்கள்!!!
முத்தத்தில்
கூட
சோர்ந்து போகாத
நம்
இதழ்களை
சோர்வடைய செய்கிறது
ஊடல்
உடைந்து
எழுத்
துடிக்கும்
முதல் வார்த்தை!!!
உன் அருகாமையை
அனுபவிப்பதா
இல்லை
உன் சில்மிஷங்களை
ரசிப்பதா
எனத்
தெரியாமல்
திணறச்செய்கிறது
உன் காதல்!!!
மூன்று பெரிய ஜாம்பவான்கள் நினைவுக்கு வந்தாங்க.அடடா.. கையில் வெண்ணையை வைச்சுக்கிட்டு நெய்'க்கு அலைவானேன்னு,அடிச்சு, புடிச்சு அப்பாயின்மெண்ட் வாங்கிட்டேன்ல்ல. அவங்களும், எம்மேல பரிதாபப்பட்டு, அவங்க பிஸி ஷடியுல்ல கொஞ்சோண்டு , நேரத்தை ஒதுக்கி எனக்கு ரொம்ப உதவி செய்தார்கள்....இதுல ஒருத்தர் சொல்லிக்கொடுத்ததற்க்கு குருதட்சணை வேற கேட்டார்.
அவர்கள் யார்? & அவங்க கேட்ட குருதட்சணை என்ன?ன்னு இறுதியில் தெரிஞ்சுக்கலாமா?. இப்பொழுது நம்ம V.V.I.Pகள் சொல்லிக் கொடுத்த பாடல்களை பார்ப்போம்...
முதல் பாடலை ஸ்பான்ஸர் பண்ணவர் ரொம்ப ஸ்பீடு.அவர் பாட்டு சொல்லும் போது எனக்கு சரியா புரியவே இல்ல.சீடியை வேகமா ஃபார்வேட் பண்ண மாதிரி ,மின்னல் வேகமா,ராகத்தோட பாடிக் காட்டினார்.. "சார், கொஞ்சம் பொறுமையா சொன்னிங்கனா நோட்டுஸ் எடுக்க உதவியா இருக்கும்ன்னு கெஞ்சி கேட்டா (கல்லூரிலக் கூட நோட்ஸ் எடுக்க இவளோ கஷ்டப்படல)... அவர் இரண்டு வரி பொறுமையா சொல்லிவிட்டு
அடுத்தடுத்த வரிகளை ஜெட் வேகத்திற்கு கூறினார்.மறுபடியும், கொஞ்சம் பொறுமையா சொல்லுங்களேன்"என்று கேட்டது தான்.வந்துச்சு பாருங்க அவருக்கு கோவம்,பாதி(பாரதி என்பதை அவர் அப்படிதான் கூப்பிடுவார்) உனக்கு உங்க மிஸ் சொல்லிக் கொடுத்தாங்கல?அப்புறம் ஏன் இப்படி என்னை போன் போட்டு தொந்தரவு பண்ணுறே?ன்னு சொல்லி போனை கட் பண்ணிடார்
அச்சச்சோ நாம தான் அவசரப்பட்டுடோமோன்னு தோனுச்சு. சரி..,அவர் சொன்ன வரை உங்களுக்கு தந்திருக்கேன்.
அவர் சொன்னப் பாடல்...
"குள்ள குள்ள வாத்து
குவா குவா வாத்து
மெல்ல உடலை சாய்த்து
மேலும் கீழும் பார்த்து
செல்லமாக நடக்கும்
சின்னமணி வாத்து!!!!"
திரும்ப அவரை கேட்டால்,அவர் சிதம்பரத்தில் இருந்து சென்னை வீடு தேடி வந்து வந்து அடிக்கும் அபாயமிருப்பதால், வேறு யாரிடம் கேட்கலாமென்று யோசிக்கையில் ஒரு மேடம் நியாபகத்துக்கு வந்தாங்க அவங்க கிட்ட கேட்டா பாடல் கிடைக்கும் ஆனால் அவங்க சொல்லுவாங்களா இல்லை,இதுக்கெல்லாம் நேரம் இல்லைன்னு சொல்லிடுவாங்கன்னு கொஞ்சம் டவுட்டு இருந்தது... மேடம் இந்த சின்ன புள்ளைக்கு கொஞ்சம் உதவி செய்யுங்க. ஒரு பாட்டு சொல்லுங்கன்னு பணிவா கேட்டதும். சும்மா சொல்லக்கூடாது,எம்புட்டு ஆர்வமா அவங்க நேரத்தை ஒதுக்கி ஒரு பாட்டு சொன்னாங்க. அவங்களுக்கு ஒரு ஸ்பெசல் தாங்க்ஸ். அப்பாடல்....
யானை யானை அழகர் யானை
அழகரும் சொக்கரும் ஏறும் யானை
குட்டி யானைக்கு கொம்பு முளைச்சதாம்
பட்டணம் எல்லாம் பறந்து போச்சாம்..........
இன்னும் பாடல்கள் கிடைக்குமான்னு இல்லாத மூளையை கசக்கி யோசிக்கும் பொழுது ஒருத்தவங்க நினைவுக்கு வந்தாங்க வந்தாங்க. மேடம் பேசும்போதே சண்டை போடுவாங்களே?.நமக்காக பாட்டெல்லாம் பாடுவாங்களான்னு யோசிக்கிட்டே போன் போட்டு மேடம் ஒரு பாட்டு வேணும்ன்னு கேட்டதும்
அதெல்லாம் முடியாதுன்னு ரொம்ப அடம் பிடிச்சாங்க ரொம்ப நேர கெஞ்சல்கள்,கொஞ்சல்களுக்கு பிறகு,போனாப் போவுதுன்னு என்மேல் பரிதாபப்பட்டு, ஒரு பாட்டு சொன்னாங்க...
அவங்க சொன்ன பாடல்
தம்பி தம்பி என்ன வேண்டும்?
பழம் வேண்டும்
என்ன பழம்?
பலாப்பழம்
என்னப் பலா?
வேர்ப் பலா
என்ன வேர்?
வெட்டி வேர்
என்ன வெட்டி?
விறகு வெட்டி
என்ன விறகு?
மா விறகு
என்ன மா?
அம்மா!!!
எப்படியோ பெரிய பெரிய ஆளுங்ககிட்ட கெஞ்சி பாட்டெல்லாம் போட்டாச்சுன்னு இப்போதான் திருப்தி).
இவங்க பாட்டெல்லாம் கேட்டப்பறம் ,நமக்கும் பாடல் பாடணும் போல தோணுது இல்ல.?.எனக்கும் அப்படி தோனுதே..!!! எவ்வளவோ பண்ணிட்டோம், இதைப் பண்ண மாட்டோமா?:P
இதையும் "காதை மூடிக்கிட்டு" கேட்டுருங்க மக்களே.
கஷ்டப்பட்டு ஃபிளாஸ்பேக் கொசுவத்தியெல்லாம் சுத்தி ,சுவத்துலல்லாம் முட்டிக்கிட்டு யோசிச்சதுல ,நான் சின்ன வயசுல பாடின ரெண்டு பாட்டு ஞாபகத்துக்கு வந்துச்சு (அப்பவே நானெல்லாம் பெரிய பாடகியாக்கும்:)
ரெடி.. ஒன்..டூ.. திரி...
"அதோ பாரு காக்கா
கைடையில விக்கிது சீக்கா
பொண்ணு வரா சோக்கா
எழுந்துப் போடா மூக்கா!!!"
எப்டியிருக்கு என்னோட கருத்தாழம் மிக்க பாட்டு.
அட, இதுக்கே ஆனந்தக் கண்ணீர் விட்டா எப்படி?
உங்களுடைய அன்பு வேண்டுக்கோளுக்கிணங்க இன்னொரு பாட்டையும் பாடிடறேன்.கேட்டுக்கோங்க..
இந்தப் பாடல் எங்க ஊருல "ஜேம்ஸ் பாண்டு 007" விளையாடும்போது (அதாங்க கண்ணாமூச்சின்னு சொல்லுவாங்களே ) பாடுகிற பாடல்.
"கண்டுபிடிப்பவர்: மரங்கொத்தி குருவி
ஒளிந்துக்கொள்பவர்கள்: ஏன் ஏன் குரருவி
கண்டுபிடிப்பவர்: பல்ல வலிக்குது
ஒளிந்துக்கொள்பவர்கள்: நெல்லைல் கொருச்சிக்கோ
கண்டுபிடுப்பவர் : மாப்புட்டிக் காணும்
ஒளிந்துக்கொள்பவர்கள்: தேடிப் புடிச்சிக்கோ..."
இதைப்பத்தி சொல்லும்போது எனக்கு இன்னொரு பாட்டு ஞாபகத்துக்கு வருது.பாடவா?,.,
சரி சரி அழுவாதிங்க.. இத்தோட விட்டுறலாம்.
எனக்கு பாடல்களை சொல்லித்தந்த அந்த V.V.I.Pகள் யாருன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கிங்களா?
எனக்கு உதவிய அந்த ஜாம்பவான்கள்.........
இந்த ஆட்டத்துக்கு நான் அழைப்பவர்கள்..
1. மொழியோடு பயணம் செய்யும் அண்ணன் பிரேம்குமார்
2. மத்தாப்பாய் ஜொலிக்கும் திவ்யா மாஸ்டர்
3. புதியதாய் வலையுலகில் அறிமுகமான உளறல் சத்யா....
தினமும்
கனவில்
பார்த்துக் கொள்வோம்
என்ற
நம்பிகையில் தான்
முடிவடைகிறது
நம்
சந்திப்புகள்!!
வாரநாட்களில் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்த்து விடலாம் என்றாலும்...ஞாயிற்றுக் கிழமைகளில் அது கொஞ்சம் சிரமம்தான்.. பகலில் அதிக நேரம் தூங்கிவிட்டு... இணையத்தில் நண்பர்களோடு அரட்டை அடித்து விட்டு... மதியம் உணவு அருந்தியதும் மீண்டும் ஒரு தூக்கம் போட்டு சரி கொஞ்சம் நேரம் தொலைக்காட்சியை பார்ப்போமேன்னு போட்டால் பார்த்து பார்த்து அலுத்துப் போன படங்களே திரும்ப ஓடிக் கொண்டிருக்க...
பாடல்கள் கேட்கலாமேன்னு அலைவரிசையை மாற்றினால் அவர்கள் பேசியே கொல்கிறார்கள்
சரி மக்கள் தொலைக்காட்சியில் வித்தியாசமாக எதும் இருக்கும் பார்கலாமேன்னுவைத்ததும் வினுசக்கரவர்த்தியும் மெளனிகாவும் காட்சியில் இருந்தார்கள்..சரி என்னவாக இருக்கும் என்று பார்க்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் அது ஒரு குறும்படம் என்று விளங்கியது... ச்சே கொஞ்சம் முன்னமே வைத்திருந்தால் பெயரைப்பார்த்திருக்கலாம் சரி போகட்டும் எப்படிதான் இருக்கு என்று பார்ப்போமேஎன்று கதையில் ஐக்கியம் ஆனேன்... நான் பார்கத தொடங்கியதில் இருந்து உங்களிடம் பகிர்கிர்ந்துக் கொள்கிறேன்!!
கணவனுக்கு கஞ்சியை கொடுத்துவிட்டு காய்கறி சுமப்பதற்காக கொத்தவரஞ்சாவடிசெல்கிறேன் நீ பத்திரமா இரும்மான்னு சொல்ல இல்லைங்க நானும் உங்க கூடவரேன் கூட்டிட்டு போங்கன்னு கேட்க சரி வா போகலாம்ன்னு இருவரும் வெளியே வருகிறார்கள்..
"நீ உக்காருயா நான் இழுக்குறேன்னு"
மனைவி கணவனை சுமை சுமக்கும் வண்டியில் உட்காரச்சொல்லி இழுக்கிறாள் உன்னால் முடியாது நான் இழுக்குறேன் நீ வநது உட்காருன்னு சொல்லும் கணவனைஇல்ல நான் இழுப்பேன் நீ இருய்யான்னு சொல்லி இழுத்துக் கொண்டே நடக்கிறார் கணவன் அசந்துப் போய் வண்டியில் படுத்து உறங்கிவிடுகிறார்..
இதுவரை இழுத்து பழக்கமிலாததால் சிரமப்பட்டு இழுக்கிறார் மிக சோர்வுடன் வேர்வையில் நனைந்து இழுத்துக் கொண்டு சேரும் இடம் வந்ததும் வண்டியை நிறுத்துகிறாள்...
வண்டி நின்றதும் தூக்கம் கலைந்து விழிக்கும் கணவன்
"என்னப் புள்ள நான் தான் அசதில தூங்கிட்டேன் என்ன எழுப்பிற்கலாம்ல"
அசதில நீ நல்லா தூங்கிட்டயா அதான் எழுப்ப வேணாம்ன்னு விட்டுடேன்"
என்று மனைவி செல்ல காட்சி நகர்ந்தது...
வந்து உட்காரு பிள்ள நான் உனக்கு சாப்பாடு வாங்கிட்டு வரேன்னு எதிர்ல இருக்கும் இட்லி கடைக்கு சென்று இட்லி தோசை வாங்கி வந்து
நீ சாப்பிடு பிள்ள நான் மூட்டைகளை எடுத்துட்டு வந்துடுறேன்னு முட்டையை எடுக்க போகிறார்..
மூட்டைகளையெல்லாம் அடுக்கி வைத்துவிட்டு மனைவி சாப்பிட்டு முடித்ததுதட்டையும் பணத்தையும் கொடுத்து விட்டு வந்தவர் மனைவியிடம் பீடா கொடுத்து போட்டுக்க புள்ள!!!
சரிய்யா நான் அப்படியே நடக்குறேன் நீ வண்டியை இழுத்துகிட்டு வான்னு சொல்ல..
நீ வண்டில வந்து உட்காரு புள்ள நான் இழுக்குறேன் வான்னு மனைவியைவண்டியில் உட்காரவைத்து இழுக்க தொடங்குகிறார்...
களைத்துப் போய் அவர் இழுத்துக் கொண்டு நடக்க வழியில் அவர் நண்பர் ஒருவர் வருகிறார்
"என்னப்பா இது இருக்கிற பளுப் போதாதுன்னு உன் பொஞ்சாதியையும் படுக்கவைச்சி இழுக்குறியேன்னு" கேட்க
காலம் முழுக்க நம்மை சுமக்கிற வரங்களை நாம பளுவாய் நினைக்ககூடாதுன்னு சொல்லிவிட்டு வண்டியை மீண்டும் இழுக்க தொடங்குகிறார்....
அத்துடன் படம் நிறைவடைகிறது...
20 நிமிடங்களில் கணவண் மனைவி உறவை மிக் அழகாக விளக்கியிருந்தார்கள்...
கடைசிவரை படம் பெயர் தெரியவில்லை என்றாலும் வாழ்க்கையை மிக அழகாக விளக்கிய பெயர் தெரியாத இயக்குனருக்கும் ஒளிப்பரப்பு செய்த மக்கள் தொலைக்காட்சிக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!!!!